search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பொருட்கள்"

    • ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
    • மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள 5-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை மேற்கொண்ட போது மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இவ்வாறு 150 கிலோவுக்கும் மேற்பட்ட பழைய மற்றும் கெட்டுபோன உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். அத்துடன் 5 ஓட்டல்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறும்போது, ' உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து வழங்கினாலோ, செயற்கையான வண்ண பொடிகளை சமையலில் பயன்படுத்தினாலோ அந்த ஓட்டல்களுக்கு 'சீல்' வைக்கப்படும். ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

    இந்த சோதனையின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன், தக்கலை வட்டார அலுவலர் பிரவீன் ரகு, குளச்சல் வட்டார அலுவலர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
    • குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.

    பல நாடுகளில் பல நாட்டவர்கள் உண்ணும்போது கைகளைப் பயன்படுத்துவதில்லை. வேறு உபகரணங்களைக் கொண்டே வாயில் உணவை எடுத்து வைக்கின்றனர். ஆனால் அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.

    உணவு உண்ணுதல் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கான ஒரு மிக முக்கியமான வாழ்க்கை நடவடிக்கை. அதேசமயம், அது ஒரு சமூக நிலையில் ஏற்கப்படக்கூடிய முறைகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

    பல நபர்கள், எத்தனை வயதாகியும், சமூகத்தால் ஏற்கப்படக்கூடிய முறையில், உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றக்கூடிய நிலையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உண்ணும் முறை பார்க்கும் பலரை முகம் சுளிக்க வைக்கிறது.


    எனவே, இளமையில் கல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, குழந்தைப் பருவத்திலேயே, நாகரீகமான முறையில் உணவு உண்ணுதல் எப்படி என்பதை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

    சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும். சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது.

    மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான அளவில் உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, இடம் போதாமல் உணவு சிந்தும் நிலை ஏற்படுகிறது. இதைப் பிறர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

    உணவை வாயில் வைத்தப் பின்னர், அதை மூடிய நிலையில் மெல்லுமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் சவக் சவக் என்ற அநாகரீகமான சத்தம் வராது.


    உண்ணும்போது, சற்று குனிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தட்டிற்கும், வாய்க்கும் இடையேயான இடைவெளி குறைந்து, உணவு தேவையற்ற இடங்களில் சிந்துவதை தவிர்க்க முடியும்.

    டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, தட்டிற்கு கீழே விரிப்பை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்ணும்போது, உங்களின் குழந்தை தேவையற்ற இடங்களில் தட்டை நகர்த்தாமல், முறையான இடத்தில் தட்டை வைத்து உண்ணப் பழகும்.

    தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோ உண்பதற்கு, எந்த சூழலிலும் உங்களின் குழந்தையை அனுமதிக்க வேண்டாம்.

    குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.


    டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு, ஒரு கையை டேபிளிலேயே தட்டிற்கு அருகே வைத்துக்கொண்டு, இன்னொரு கையைப் பயன்படுத்தி உண்பதற்கும், கீழே அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து, ஒரு கையை கால்களின் மீது மடக்கி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் சற்று குனிந்த நிலையில் இருந்து உண்பதற்கும் சொல்லித்தர வேண்டும்.

    சிறு குழந்தைகள் சாப்பிடும்போது, அவர்களின் கைகள் மற்றும் கண்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுவடைகிறது. மேலும், அதேசமயத்தில், அவர்கள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலான உண்ணும் பழக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.

    எதையும் உண்ணும் முன்னதாக, கைகளைக் கழுவும் பழக்கத்தை உங்களின் குழந்தை கட்டாயம் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் அனைத்திற்கும் அடிப்படை.

    • போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.

    இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.

    அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.

    சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    • சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கடந்த மாதம் பெய்த மழையின்போது 37 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. ஆனால் தற்போது பெய்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய மழைநீர் வெள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனாலும் இன்று வரை 38 இடங்களில் மழை வெள்ளம் வடியால் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக மேற்கு மேம்பாலம், கொளத்தூர், கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை வரை 64 இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர் நடவடிக்கையின் மூலமாக 26 பகுதிகளில் தேங்கிய நீர் வடிந்தது. ஆனாலும் 38 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் நிவாரண முகாம்கள் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 306 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

    தண்ணீர் சூழ்ந்த பகுதியில் வசித்த மக்களுக்கு 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்று காலை மற்றும் மதியமும் உணவு பொட்டலம் வினியோகிக்கப்பட்டது. இதுவரையில் 20 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பாதிப்பு உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்டுகிறது. மீண்டும் அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • பாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயா ரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்
    • பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயா ரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

    இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்பட மில்லாத மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அனு மதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோ கிக்ககூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்ப டுத்தக்கூடாது. பயன்படுத்திய எண்ணெய்யை பயோ- டீசல் தயாரிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவ னத்திற்கு வழங்க வேண்டும்.

    பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது பால் பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக் கூடாது. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருக்க வேண்டும். நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கும், விவரச் சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண் சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விபரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். தடைசெய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தக் கூடாது, செய்திதாள்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது.

    உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்து, நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். மேலும் பணியாளர்கள் தலைகவசம், மேலங்கி மற்றும் கையுறை அணிய வேண்டும். பணியினை தொடரும் முன்பும், கழிவறை பயன்படுத்திய பின்பும் சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். உணவு பொருட்களை கையாள்பவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

    பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாராபுரம் உணவு பாதுகாப்பு துறை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் நடமாடும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கூட நிபுணர்கள் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
    • தரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை உணவு பாதுகாப்பு துறை மூலம் வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீரென கடைவீதி பகுதியில், பொள்ளாச்சி சாலை, பூக்கடை கார்னர், பெரியகடை வீதி, பழைய நகராட்சி பகுதியில் செயல்படும் ஓட்டல்கள், பழக்கடைகள், டீக்க–டைகள் மற்றும் பேக்கரி உள்ளிட்ட 40 கடைகளில் மாதிரி எடுக்கப்பட்டு நடமாடும் சோதனை கூடத்தில் தரம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில் தாராபுரம் உணவு பாதுகாப்பு துறை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் நடமாடும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கூட நிபுணர்கள் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.

    தாராபுரம் பெரிய கடைவீதி, சின்னகடைவீதி, பொள்ளாச்சி ரோடு பூக்கடைக்கார்னர், என்.என்.பேட்டை வீதி பகுதிகளில் உள்ள மளிகைக்கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடைகள் குளிர்பான கடைகளில் உணவு மாதிரிகளை எடுத்தனர். எண்ணெய், குளிர்பானம், பருப்பு உள்பட பல்வேறு மாதிரிகள் எடுக்கப்பட்டது. நடமாடும் சோதனை கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    லேபிள் சோதனை செய்ததன் அடிப்படையில் மாதிரி எடுத்தவர்களின் பொருட்கள் தரம் குறைவாக இருந்ததால் அந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை உணவு பாதுகாப்பு துறை மூலம் வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • கீழ்புத்தூரில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதையும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் ஆலங்குடி கொத்தாட்டையில் புதிய நெற்களம் கட்டும் பணி குறித்தும், கொத்தடடை கிராமத்தில் ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆலங்குடி ஊராட்சி அருள் மொழி பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரைமைக்கப்பட்ட கழிவறை கட்டிட பணி குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டையில் உள்ள அங்கனவாடியில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும், கன்னித்தோப்பு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை குறித்தும் ஆய்வு நடத்தினோம்.

    ஆலங்குடி ஊராட்சியில் உள்ள பொது விநியோகத் திட்ட அங்காடியில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர் ஒன்றியம் மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரியில் நீர்வளத்துறை கல்லணை கால்வாய் கோட்டம் சார்பில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புத்தூரில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    இந்த ஆய்வின்போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, அம்மாபேட்டை செயல் அலுவலர் ராஜா, வட்டார வார்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், கூத்தரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் செறிவூட்டப்பட்ட அரிசிகள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த பொருட்களில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கும் வழங்குகிறது.

    மாணவர்கள் பெற்றோர்களிடம் இதன் பயன் குறித்து எடுத்து சொல்லி அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் ஜோதிபாசு, துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் முத்துக்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கம் இணை பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
    • மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே மேவலூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 40). இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான பிரபல உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தமிழக பிரிவின் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். எங்களது நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் பிரபலமாகும். முறையாக காப்புரிமை பெற்று பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.

    இந்த நிலையில் எங்களது உணவுப் பொருட்களின் தயாரிப்புகளை குமரி மாவட்டத்தில் போலியாக ஆலை நடத்தி தயார் செய்து எங்களது நிறுவனத்தின் போலியான முத்திரையை பயன்படுத்தி தரமற்ற முறையில் பொருள்களை விற்பனை செய்து எங்களது நிறுவனத்திற்கு களங்கம் விளைவித்து, தவறான ஆதாயம் பெற்றுள்ளனர்.

    எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தர விட்டார்.

    அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா, சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி, குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த ரெஜி (34 ) என்பவர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கத்தார் நாட்டுடனான வர்த்தகத்திற்கு இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு
    • ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு

     தோஹா:

    இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

    புவிசார் குறியீடு பெற்றுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தூதரக மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    இந்த சந்திப்பின்போது பாசுமதி அரிசி, மாம்பழம், மாதுளம்பழம், வழகிழக்கு பிராந்தியப் பொருட்கள் மற்றும் பல்வேறு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புக் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா- கத்தார் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

    தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய தலைவர் அங்கமுத்து, புவிசார் குறியீடு உடைய பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

    • 2015ம் ஆண்டில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டி திறப்பு விழா செய்யப்பட்டது.
    • அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்டரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடந்த 2015ம் ஆண்டில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டி திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த நிலையில், சேமிப்புக் கிடங்கில்,அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்டரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், கிடங்கின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது .இதனை முறையாக பராமரிக்காததால் அவற்றின் வழியாக பெருச்சாளிகள் புகுந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சேமிப்பு கிடங்கு தரமில்லாத கட்டுமான பணியால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கூட்டுறவு சங்க நிர்வாகமும் அலட்சியப்படுத்தி வருவதால் அந்தப் பள்ளத்தின் வழியாக பெருச்சாளிகள் புகுந்து உணவுப் பொருட்களை நாசமாக்கி வருகின்றன. இதனால் சுத்தமான உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

    எனவே கூட்டுறவு சங்க நிர்வாகம், ரேஷன் கடை நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மத்திய பா.ஜனதா அரசு உணவு பொருட்களுக்கு 5 சதவீத வரி விதித்துள்ளது.
    • பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி வளையத்தில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய பா.ஜனதா அரசு அவற்றை மாற்றி உணவு பொருட்களுக்கும் 5 சதவீத வரி விதித்துள்ளது.

    இதனால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது. அதனால் உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வாியை வாபஸ் பெற வேண்டும். இதற்கு பதிலாக மத்திய அரசு வரி கசிவு ஏற்படும் பகுதிகளில் கவனம் செலுத்தி அதை தடுக்க வேண்டும். பணக்காரர்களுக்கு வரி விதிப்பதை விட்டுவிட்டு ஏழைகள் மீது வரியை விதிப்பது ஏற்புடையது அல்ல.

    பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வரியை நுகர்வோரிடம் வசூலிக்க கூடாது என்று கூறி இருப்பதாக முதல்-மந்திரி சொல்கிறார். ஆனால் எந்த நிறுவனமும் இதை ஏற்றுக்கொள்ளாது. முதல்-மந்திரி சொல்வது பொய்யான தகவல். மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் அவர் அவவாறு கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×