என் மலர்
நீங்கள் தேடியது "அன்பில் மகேஷ் பொய்யாமொழி"
- நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது.
- "சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
நிலவின் தென்துருவத்தை அலசி ஆராய 'சந்திரயான்-3' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியதில் இருந்து, ரோவர் எடுத்த அபூர்வமான புகைப்படங்களை எல்லாம் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
எந்த நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்ற காட்சியும் இந்தியர்களை ஆனந்தத்தில் பெருமை கொள்ள செய்தது.
குறிப்பாக நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது.
வழிசெலுத்தல் கேமராவில் (நேவிகேஷன் கேமரா) லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இதுதான் நிலவின் காட்சியென இஸ்ரோ வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயத்தை கவர்ந்து வருகிறது. அத்துடன் உலகமே இஸ்ரோவின் காட்சிகளை உற்று நோக்கி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:
"சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டத்தில் "சந்திரயான் 3" கட்டுரையை சேர்ப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு.
- குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், "பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்து உள்ளார்.
- ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் அதிக வீரர்களை அனுப்பியுள்ளது.
- ஆசிய விளையாட்டின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை இல்லாத வரையில் அதிக வீரர்களை சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரமும், கிஷோர் ஜெனா 87.54 மீட்டர் தூரமும் ஈட்டியெறிந்து அசத்தினர்.
ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிகளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரையில், இந்தியா 81 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் பதக்கங்கள் அடங்கும்.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை.
- சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
"பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள், "ஓராண்டுக்கு பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கையை ஏற்று கொண்டதற்கு அரசுக்கு நன்றி. முழு நேர பணி வழங்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தனர்.
- தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.
- நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று ராம்ராஜ் புதிய காட்டன் ஷோரூமை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரைக்கும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி நடைபெறும்.
ஏனென்றால் வெளியே பல லட்சம் கொடுத்து மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதனால் மாணவர்களின் நிதி சுமையை குறைப்பதற்காக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் பணி நடந்து வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என்று நீதிமன்றமே கூறியுள்ளது. அரசு தங்களது கருத்துகளை இதுபோன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
- பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், கலெக்டர் ச.உமா தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று 379 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்ப அமைச்சர் பெருமக்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் நிலையை எண்ணிக்கொண்டிருக்கும் இதே வேலையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் எடுத்த முடிவை நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இன்றைய தினம் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2-ஆம் கட்டத்தில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது பங்கேற்றவர்களுக்கும் சான்று வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. வெற்றி பெற்றவர்களும், பங்கேற்றவர்களும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் கனவு ஆசிரியர் விருது பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று நமது இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள். இச்சிறப்பு மிக்க நன்னாளில் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவரது பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வன் திட்டத்தையும், சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது பல்வேறு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம்.
அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார்.
- முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.
சென்னை:
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,
நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும்.
வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்!
வெல்க தமிழ்நாடு!
வெல்க இந்தியா! என்று தெரிவித்துள்ளார்.
நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும். வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்!… pic.twitter.com/1VlZHxpJ0j
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 3, 2024
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,
பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம்.
எழுதி, பேசி, தமிழ்நாடு முழுக்க நடையாய் நடந்து, 'ஓய்வெடுக்காமல் உழைத்த' கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் கழகத்தின் சார்பாக #கலைஞர்100 என்ற புகழ் பரப்பும் பெரு விழாவாக ஆண்டு முழுக்க நடத்தியிருக்கிறார்.
இந்த ஒரு நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.
பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம். எழுதி,… pic.twitter.com/fnlCU7Bew7
— Udhay (@Udhaystalin) June 3, 2024
கலைஞர் வாழ்க... அவர் புகழ் ஓங்குக! என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில்,
#கலைஞர்100@arivalayam@KN_NEHRU#trichy_south_dmk pic.twitter.com/scMyRwUsle
— Anbil Mahesh (@Anbil_Mahesh) June 3, 2024
- 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
- 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தஞ்சாவூா்:
தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, மேல்நிலை மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சீருடை , சைக்கிள்கள் ஆகியவற்றை வழங்கினார். அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், சீருடைகள், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
டிக்டோ ஜாக் அமைப்பினர் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ள நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் முதன்மைச் செயலரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஆண்டுதோறும் வழங்கக்கூடிய இந்த நிதியை பல காரணங்களைக் கூறி ஏன் நிறுத்தப்பட்டது என்றும், ஏறத்தாழ 60 லட்சம் மாணவர்களை மனதில் வைத்து, உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து பேசி கூறுமாறும், அதற்கான முயற்சி எடுப்பதாகவும் மத்திய மந்திரி கூறினாலும், முறைப்படி பதில் எதுவும் வரவில்லை.
மத்திய மந்திரியிடம் என்ன பதில் வருகிறது என்பதைப் பார்த்து, தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும்.
- பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.
பண்ருட்டி:
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பல்வேறு மாவட்டங்களுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல் நிலைப்பள்ளி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக அவரை பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜேப்பியார் ஸ்டீல்ஸ் ஜாகிர் உசேன்,பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆடிட்டர் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்றனர்
இதில் மாவட்ட, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்தார். அப்போது பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும். எனவே பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
- தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை.
- தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
மதுரை:
மதுரை ரிசர்வ் லைன் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 39 ஆண்டுகளாக தொழில் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரனின் கல்விப் பணியை கவுரவிக்கும் வகையில் இன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முரளிதரன் கூறியதாவது:-
தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏற்கனவே மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கியுள்ளேன். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
என்னால் இயன்றவரை இதனை பணியாக பார்க்காமல் மாணவர்களுக்கு செய்யும் கடமையாக பார்த்துதான் பணி செய்து வருகிறேன்.
மாணவர்களுக்கு புரியும் வகையில் கொரோனா காலத்தில் கூட தொழில் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளித்தேன். தொடர்ந்து யூடியூப் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
எனது குடும்பம் ஒரு ஆசிரியர் குடும்பம், எனது தந்தை ஆசிரியராக இருந் தார். தற்போது எனக்கு 39 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்ததன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான விருது வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த தொழில் கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களில் இருந்து தான் டிஎன்பிஎஸ்சி-க்கு பயில்வோர் பயன்பெறுகின்றனர்.
- PM Sri புதிய திட்டங்களை நீங்கள் புகுத்தினாலும் கமிட்டி அமைத்து விசாரிப்போம்
சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்ற கே.டி.சி.டி பள்ளி நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக பாடத்திட்டத்தின் தரம் பற்றி விமர்சித்த தமிழக கவர்னருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
* மாநில அரசின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து தேவையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் உள்ளது.
* 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களில் இருந்து தான் டிஎன்பிஎஸ்சி-க்கு பயில்வோர் பயன்பெறுகின்றனர்.
* மத்திய அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களே 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு பாடப்புத்தகங்களை தான் படிக்கின்றனர்.
* நூலகத்தில் ஆய்வு செய்ய சென்றபோது அரசுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே மாநில பாடத்திட்டத்தை பாராட்டுகின்றனர்.
* கவர்னர் என்னோடு எந்த நூலகத்திற்கு வேண்டுமானாலும் வரலாம். அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை சந்தித்தால் உண்மை புரியும்.
* PM Sri புதிய திட்டங்களை நீங்கள் புகுத்தினாலும் கமிட்டி அமைத்து விசாரிப்போம். கமிட்டி அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம்.
* சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விடவும் மேலானது மாநில பாடத்திட்டம், இதனை கமிட்டி அமைத்து விசாரித்தால் கவர்னரும் புரிந்துகொள்வார் என்று தெரிவித்தார்.
- ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
- குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வந்தார்.
தனியார் விடுதியில் தங்கி இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை திடீரென்று விடுதி அருகே இருந்த கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வருவதை பார்த்ததும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அமைச்சரை வரவேற்றனர்.

அதன்பின் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள், வகுப்புகள், அங்குள்ள ஆய்வரங்கங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி வகுப்பறை, மாணவ-மாணவிகளுக்கான குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகஷே் பேசியதாவது:-
உங்களுடைய திறமைகளை கண்டறிந்து கனவுகளை நோக்கி பயணம் செய்யுங்கள். ஆசிரியர்களிடம் அதிகமான சந்தேகங்களை கேளுங்கள். அப்போதுதான் உங்களுடைய பாடங்களைப் பற்றி முழுமையாக அறிய முடியும்.
எந்த நிலைக்கு போனாலும் படித்து வந்த பள்ளியையும், ஆசிரியர்களையும் மறந்து விடக்கூடாது. உங்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தங்களது பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களில் தொழில் அதிபர், டாக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்வதே அவர்களது விருப்பமாக இருக்கும். அந்த விருப்பமே அவர்களுக்கு நல்லாசிரியர் விருதாகவும் அமையும்.
மலைப் பகுதிகளில் அதிக தூரம் பயணம் செய்து படிக்க வரும் மாணவர்களை கண்டு மெய் சிலிர்க்கிறேன். தங்களுக்கு பஸ் பாஸ் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருந்த நிலையில் சீருடை அணிந்து சென்றால் பஸ்சில் பாஸ் கேட்கமாட்டார்கள் என்றார். இருந்த போதும் மாணவர்களுக்கு பஸ்பாஸ் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு அப்துல்கலாம் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி கல்வித்துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருவதால் அரசு பள்ளி மாணவர்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களாக மாறவேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.