search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவி"

    • ஒடிசாவின் பழமையான அடையாளங்களில் ஒன்றான புகழ் பெற்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் உள்ளது.
    • கட்டாக்கில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

    ஒடிசாவின் பழமையான அடையாளங்களில் ஒன்றான புகழ் பெற்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கருவூல புதையல் அறை என்று அழைக்கப்படும் ரத்ன பண்டர் உள்ளது. ரத்னா பண்டர் பல நூற்றாண்டுகளாகப் பக்தர்கள் மற்றும் முன்னாள் மன்னர்களால் வழங்கப்பட்ட தெய்வங்களின் விலைமதிப்பற்ற ஆபரணங்களை உள்ளன.

     

    இது கடைசியாக ஜூலை 14, 1985 இல் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டில், அறையைத் திறக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அறையின் சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, கடந்த 6 ஆண்டுகளாக அறையின் சாவி கிடைக்காதது மாநிலம் அளவில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

     

    இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக நேற்று (மே 20) ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பூரி ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் கட்டாக்கில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

     

    அங்கு நடைபெற்ற பேரணியில் மோடி பேசுகையில், "முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் பூரி ஜெகநாதர் கோவில் பாதுகாப்பாக இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக ரத்ன பண்டர்(கருவூல அறை) சாவிகள் காணாமல் போய்விட்டன. ரத்ன பண்டரின் காணாமல் போன சாவிகள் பற்றி ஒடிசா முழுவதும் அறிய விரும்புகிறது, ஆனால் பிஜேடி அதை மூடி மறைகிறது.

    பிஜேடியின் மௌனம் இந்த விவகாரத்தில் மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ரத்ன பண்டரின் சாவி தமிழகத்துக்கு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

     

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகதை வகுப்பவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை மறைமுகமாக மோடி குறிப்பிட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். வி.கே.பாண்டியனை விமர்சிக்க பொதுப்படையாக 'தமிழ்நாடு' என குறிப்பிட்டு மோடி மீண்டும் வெறுப்புப் பேச்சில் ஈடுபட்டுள்ளார் என்று கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன.
    • 6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாட்கள் பூஜையானது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்கள், நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன. இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    சுமார் 6 மாத காலமாக தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது. இது உலகின் மிக பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்துள்ளது.

    இந்த பூட்டை உருவாக்கிய அலிகாரை சேர்ந்த கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்மா சமீபத்தில் காலமானார். அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்த பூட்டை பரிசாக வழங்கவேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை என அவரது மனைவி ருக்மணி ஷர்மா தெரிவித்தார்.


    • சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர்.
    • மோட்டார் சைக்கிளின் சாவியை குரங்கு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட் டம் குழித்துறை நகராட்சி கட்டிடத்தில் ஆதார், இ-சேவை மையம், பிறப்பு-இறப்பு பதிவு மையம், நகராட்சி அலுவலகம் செயல்படுகின்றன. இத னால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    நகராட்சி அலுவலக ஊழியர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் அலுவலகத்துக்குள் சென்றார். மாலையில் மோட்டார் சைக்கிளை எடுக்க வரும்போது, மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் குரங்கு நிற்பதை பார்த்தார். பின்னர் அவர் குரங்கை துரத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு, மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு அருகே நின்ற மரத்தின் கிளை மீது ஏறி மேலே அமர்ந்து கொண்டது.

    உடனே சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர். மேலும் கட்டைகளை எடுத்து வீசியும் பயமுறுத்தினர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குரங்கு சாவியை மரத்தின் ஒவ்வொரு கிளைகளிலும் கொண்டு வைப்பதும், எடுப்பதும் மட்டுமின்றி 2 கைகளில் மாறி, மாறி பிடித்து போக்கு காட்டியது.

    ஒரு கட்டத்தில் துரத்தி பார்த்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் சாவியை வாங்க முடியாது என முடிவு செய்து சோர்ந்து போய் அமர்ந்திந்தனர். இவர்கள் சோர்ந்து போய்விட்டதை தெரிந்து கொண்ட குரங்கு சாவியை ஊழியர் மீது வீசி எறிந்தது. பின்னர் அங்கிருந்து மரத்துக்கு மரம் தாவி குரங்கு வேறு பகுதிக்கு சென்றுவிட்டது.

    அருணாச்சலம் சினிமாவில் நடிகர் ரஜினியின் ருத்ராட்சம் மாலையை குரங்கு பறித்து செல்வது போல் குழித்துறை நகராட்சி ஊழியரின் மோட்டார் சைக்கிளின் சாவியை குரங்கு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
    • சாவிகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து காமராஜர் காய்கனி மார்க்கெட் தற்காலிகமாக குழந்தையேசு கோவில் அருகே உள்ள இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.20.26 கோடி செலவில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. அதன்படி 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. இருப்பினும் பல்வேறு இடையூறுகள் காரணமாக கடைகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் கலந்து பேசி சுமூக தீர்வு ஏற்பட்டது.இதையடுத்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. சாவிகள் ஒப்படைகக்ப்பட்ட தையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் மார்கழி மாதம் என்பதால் தயக்கம் காட்டினர்.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதியான ஆங்கில புத்தாண்டு தினம் முதல் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என வியாபாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகளில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி குழந்தையேசு கோவில் அருகில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் செயல்பட்ட காய்கனி மார்க்கெட் வருகிற 1-ந்தேதி முதல் அரண்மனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் செயல்படும் என காமராஜர் மார்க்கெட் காய்கனி வர்த்தக நல சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • ஆம்புலன்சுக்குண்டான ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவமனையின் இயக்குனர் மரான்சிஸ்காளிடம் வழங்கினார்.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    கீழையூர் ஒன்றியம் காமேஸ்வ ரத்தில் இயங்கி வரும் கோவாச் ஆஸ்பத்திரிக்கு சேவ்திசில்ரன்ஸ்அமைப்பு மூலம் இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

    அப்போது ஆம்புலன்சுக்கு உண்டான ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவ மனையின் இயக்குனர் மரான்சிஸ்காளிடம் வழங்கினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பச்சைக்கொடி கான்பித்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    இதில் நாகை சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஜோஸ்பின்ஆமுதா, திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், கீழையூர் ஒன்றியக்குழுத்தலைவர் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, கீழையூர் ஒன்றிய குழு துணை தலைவர் சவுரிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன் மற்றும் மலர் கலந்துகொண்டனர்.

    • நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சீர்காழி:

    சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலினை அகற்றி சாவியை எடப்பாடி.பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பினை வரவேற்று சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏவி.மணி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, வழக்குரைஞர் மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் சுரேஷ், தெட்சிணா மூர்த்தி, செந்தில், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்துஇனிப்பு கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    ×