என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • 3 கோவில்களில் 8 ஏக்கர் 84 செண்ட் நிலம் மீட்கப்பட்டது.
    • ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலின், குழுக் கோவிலான பழைய பேரா–வூரணி பிரசன்ன வெங்கடேச–பெருமாள், செங்கமங்கலம் தெய்வாங்கப் பெருமாள், மார்க்கண்டேஸ்வரர் ஆகிய மூன்று கோவில்களுக்கும் சொந்த மான ஆக்கிரமிப்பு நிலம் மீட்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து தஞ்சாவூர் இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் நாகையா, இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் சங்கர், நில அளவையர் ரெங்கராஜன், பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னி–லையில், நீலகண்ட பிள்ளையார் கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் தீர்வு காணப்பட்டு, ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து கோயில் நிலம் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டு, அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

    மொத்தம் 3 கோவில்களில் 8 ஏக்கர் 84 செண்ட் நிலம் மீட்கப்பட்டது. அதாவது ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். ஆக்கிர–மிப்பு மீட்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • கோவில்களில் இரவு காவல் பணிக்கு தகுதி திறமை வாய்ந்த காவலாளிகளை நியமிக்க வேண்டும்.
    • கூடுதல் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -திருப்பூரில் கோவில் பூசாரி ஒருவர் கொல்லப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானது.இந்த சம்பவத்திற்கு கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் இரவு நேர காவலாளிகளாகவும் வேலை பார்த்து வருகின்றனர். கோவில்களில் இரவு காவல் பணிக்கு தகுதி திறமை வாய்ந்த காவலாளிகளை நியமிக்க வேண்டும்.செலவை குறைக்கும் நோக்கில், சில கோவில்களில் இதுபோன்ற அவலம் நிலவுகிறது. உயிரிழந்த பூசாரிக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.கூடுதல் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக காவலாளிகளாக வேலை வழங்குவதை கோவில் நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும். கோவில்களில் காவலாளிகளை நியமிப்பதுடன், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு காரணங்களால் கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் மாயமானது.
    • மீதம் உள்ள நிலங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் நித்ய கால பூஜைகள், திருவிழாக்கள், பராமரிப்பு பணிகள் நிறைவாக நடக்கும் வகையில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால் கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் மாயமானது.

    அரசு உத்தரவு அடிப்படையில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க இந்து சமய அற நிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.நிலங்கள், வணிக மனைகள், வீட்டு மனைகள் குறித்து முழுமையாக ஆவணங்கள் சேகரித்து இணைய தளத்தில் ஏற்றும் பணியும் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,410 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு சொந்தமாக 49 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் உள்ளன.கோவில்களுக்கு சொந்தமானது, ஆண்டு குத்தகை,பயன்படுத்தாமல் உள்ள நிலங்கள், ஆக்கிரமிப்பு நிலங்கள் என அனைத்து வகையான நிலங்களையும் அளவீடு செய்து மீட்க வருவாய்த்துறை மற்றும் நில அளவீடு துறையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அக்குழுவினர் ஒவ்வொரு நிலங்களையும் நவீன உபகரணங்கள் கொண்டு அளவீடு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் நிலங்களில் இந்து சமய அறநிலையத்துறை பெயர் பொறித்த தனித்துவமான எல்லை கற்கள் தயாரித்து கோவில்கள் சார்பில் அக்கற்கள் நிலங்களில் நடும் பணியும் துவங்கியுள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள பழமையான கோவில்களுக்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இப்பணி நடந்து வருகிறது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பழைய ஆவணங்கள் அடிப்படையில் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.தற்போது கோவில் வசம் உள்ள நிலங்கள், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் என அனைத்து நிலங்கள் குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு பழைய ஆவணங்கள் அடிப்படையில் கோவில் நிலங்கள் குறித்து கணக்கெடுத்து அதில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.இதில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அறநிலையத்துறை சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக அகற்றப்படுகிறது.

    அதே போல் முறைகேடாக பெயர் மாற்றம் செய்திருந்தால் மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக உரிய முறையில் பெயர் மாற்றம் செய்து மீட்கப்படுகிறது. அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டு எல்லை கற்கள் மற்றும் சுற்றிலும் கம்பி வேலி பாதுகாப்பு ஏற்படுத்தவும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது உடுமலை, தாராபுரம் பகுதிகளில் ஏறத்தாழ 7,300 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கோவில் வசம் உள்ள நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலங்கள் என டிஜிட்டல் சர்வே மேற்கொள்ள நிலங்களில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என அடையாளப்படுத்தும் வகையில் அறநிலையத்துறை என தனித்துவப்படுத்தும் வகையில் எல்லை கற்கள் தயாரிக்கப்பட்டு அவை அனைத்து கோவில் நிலங்களிலும் நடப்பட்டு வருகிறது.கோவில் நிதி நிலைமைக்கு ஏற்ப அடுத்த கட்டமாக கம்பி வேலி பாதுகாப்பும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ராமநாதபுரத்தில் கோவில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது.
    • இறைமக்கள் மற்றும் பங்குப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.



    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் மோகன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

     ராமநாதபுரம்

    ஆங்கில புத்தாண்டை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் ஆர். எஸ். மோகன் தலைமையில் நே ற்று இருமுடி கட்டுதலும். அன்னதானமும் நடந்தது. இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடந்த பின் இரவு 12 மணிக்கு வல்லபை அய்யப்பனுக்கு புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி, சபரிமலை யாத்திரை புறப்பாடு நடந்தது.

    கொரோனா பரவல் நீங்கி, மக்கள் நலமுடன் வாழவும், மழை வேண்டியும் தலைமை குருக்கள் ஆர். எஸ். மோகன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குடும்பம் சகிதமாய் பங்கேற்ற பக்தர்கள், வழிபாடு நடத்தி புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டினர். பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் தலைமை குருக்கள் மோகன் தலைமையில் பஸ்களில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் வழி விடு முருகன் கோவிலில் நடந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபாடு செய்தனர். உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமநாதபுரம் தூய ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு, பரதர்தெரு புனித அந்தோணியார் சர்ச்சில் நள்ளிரவு 12 மணியளவில் பிறந்த புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும்நடந்தன. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கிறிஸ்துவின் மறையுரை அருளப்பட்டது.

    ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைபரிமாறிக் கொண்டனர். பண்ணாட்டார் தெருவில் உள்ள அந்தோணியார் சர்ச்சில் புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. சி.எஸ்.ஐ. தூய பேதுரு சர்ச்சிலும் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.

    முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச் சில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கூட்டுத்தி ருப்பலி நடந்தது. உலக மக்களின் ச மா தானத்தைவலியுறுத்தியும், நன்மை வேண்டியும், ஜெபம் நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.இறைமக்கள் மற்றும் பங்குப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    • 75 ஆண்டுகள் பழமையான இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
    • பழமையான வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டை முதல் அரசபிள்ளைபட்டி வரை ரூ.87.50 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் ரெயில் நிலையம் அருகே கோவில்கள், மசூதி உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் இருந்தன.

    75 ஆண்டுகள் பழமையான இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. வழிபாட்டுத்தலங்களை அகற்றுவது தொடர்பாக இந்து, முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இப்பகுதியில் அமைந்த பழமையான காவடியப்ப சுவாமி கோவில், தன்னாசியப்பன் கோவில், 2 விநாயகர் கோவில், டவுன் பள்ளிவாசல் ஆகியவற்றை இடிக்க நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பாபுராமன், ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி, டி.எஸ்.பி. முருகேசன், முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    பழமையான வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமாரவலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர்-காளியம்மன் கோவில்களில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.
    • கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூசாரி வன்னியராஜ் வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்மநபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி வன்னியராஜ் கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பணம் கொள்ளை போயி ருந்தது.

    இதுகுறித்து குடியிரு ப்போர் நலச்சங்க செயலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    காளியம்மன் கோவில்

    ஆலங்குளம் தேவர் நகர் முக்கு ரோடு பகுதியில் கரையடி கருப்பசாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அங்கிருந்த அம்மனின் 6கிராம் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பினர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் கொள்ளை கும்பல் சிறிய கோவில்களை குறிவைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளுவர்.
    • 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நாளை இரவு தொடங்கி 6-ந் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி நாளை இரவில் தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் வீதி உலா வர உள்ளது.இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும். நாதஸ்வர கச்சேரி மற்றும் வான வேடிக்கைகளுடன் விடிய விடிய இந்த திருவிழா நடைபெற உள்ளது. 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

    திருவிழாவை முன்னிட்டு அந்தந்த கோவில்களில் முத்துப் பல்லக்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

    • 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர்.
    • தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நேற்று தொடங்கியது.

    தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெரு மான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேல அலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் எழுந்தருளினர்.பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவ மைக்கப்பட்டு இருந்தன.

    பல்லக்குகள் அனைத்தும் தெற்கு வீதி, கீழவீதி ,மேல வீதி, வடக்கு வீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தன.

    அப்போது தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

    இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முத்து பல்லுக்கு வீதி உலாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இரவில் தொடங்கிய வீதி உலா விடிய விடிய இன்று காலை வரை நடைபெற்றது.

    வீதி உலா முடிந்த பின்னர் மீண்டும் பல்லக்குகளில் இருந்து

    சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்ற டைந்தன.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
    • சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    வேதாரண்யம்:

    ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்க வாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் உள்ள மவுனமகான் சித்தர் பீடத்தில் தினசரி பூஜை களுடன் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    • பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று.
    • தமிழ்நாட்டில் சுமார் 100 கோயில்கள் உள்ளன.

    விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று.

    அப்பெயரோடு தமிழ்நாட்டில் சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை.

    உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை:

    1. அகோபில நரசிம்மர்

    2. அழகிய சிங்கர்

    3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர்

    4. உக்கிர நரசிம்மர்

    5. கதலி நரசிங்கர்

    6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்

    7. கதிர் நரசிம்மர்

    8. கருடாத்ரிலக்ஷ்மிநரசிம்மர்

    9. கல்யாணநரசிம்மர்

    10. குகாந்தர நரசிம்மர்

    11. குஞ்சால நரசிம்மர்

    12. கும்பி நரசிம்மர்

    13. சாந்த நரசிம்மர்

    14. சிங்கப் பெருமாள்

    15. தெள்ளிய சிங்கர்

    16. நரசிங்கர்

    17. பானக நரசிம்மர்

    18. பாடலாத்ரி நரசிம்மர்

    19. பார்க்கவ நரசிம்மர்

    20. பாவன நரசிம்மர்

    21. பிரஹ்லாத நரசிம்மர்

    22. பிரஹ்லாத வரதநரசிம்மர்

    23. பூவராக நரசிம்மர்

    24. மாலோல நரசிம்மர்

    25. யோக நரசிம்மர்

    26. லட்சுமி நரசிம்மர்

    27. வரதயோக நரசிம்மர்

    28. வராக நரசிம்மர்

    29. வியாக்ர நரசிம்மர்

    30. ஜ்வாலா நரசிம்மர்

    ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம்

    ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்

    ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்

    ந்ருஷம்ஹம் பீஷணம் பத்ரம்

    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

    ×