என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் விசாரணை"
- வேதமூர்த்தி, அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் வேதமூர்த்தி (வயது38). இவர் ஒரு பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேதமூர்த்தி அவரது உறவினர் பெண்ணான சூர்யா (24) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமுருகன் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் வேதமூர்த்தி தனக்கு தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வேதமூர்த்தியிடன் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளதாக தெரிய வந்தது.
இதுகுறித்து வேதமூர்த்தி தனது தந்தை திருமுருகனிடம் தெரிவித்தபோது, தன்னிடம் உள்ள நிலத்தை விற்று கடனை அடைக்கலாம் என்று கூறி சமாதானம் பேசியுள்ளார்.
இருந்த போதிலும் மனவேதனையில் இருந்த வேதமூர்த்தி, தனது வீட்டில் நேற்று இரவு தூங்க சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்டநேரமாகியும் வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கதவு மூடியபடி இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வேதமூர்த்தியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் வெளியே வராததால், உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதனை கண்ட உறவினர்கள் அதிச்சியடை ந்தனர். அப்போது அவர்கள் இருவரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், வேதமூர்த்தி வீட்டின் முன்பு பொது மக்கள் திரண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேதமூர்த்தி, சூர்யா ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தளி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
- மனுவை விசாரித்த நீதிபதி, 8 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 51). ரியல் எஸ்டேட் அதிபர்.
இவர் கடந்த 19-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றபோதுகாரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை தொடர்பாக கொத்தூரை சேர்ந்த மோகன்குமார்( 29), பண்டேஸ்வரத்தை சேர்ந்த ஜலபதி (31), பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த நாகராஜூ (35), அபிநந்தா (30), அலேநத்தத்தை சேர்ந்த சிவக்குமார் (24), ஸ்ரீநாத் (23), முனிராஜ் ( 33), கர்நாடகா மாநிலம் சிக்பல்லாபூர் அருகே உள்ள செட்டியள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாதரெட்டி (32), ஆகிய 8 பேர் வேலூர் கோர்ட்டில் கடந்த 21-ந் தேதி சரணடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தளி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி, 8 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் 8 பேரையும் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தோஷ் பீட்டர் தொழில்நிமித்தம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு வந்தார்.
- சென்னையில் உள்ள போலீசாரையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த திருப்புணித்துறையை சேர்ந்தவர் சந்தோஷ் பீட்டர் (வயது51). இவரது மனைவி சுமி (50). மகள் ஐரின் (20).
சந்தோஷ் பீட்டர் தொழில்நிமித்தம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு வந்தார். அங்கு மடிப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வீடு எடுத்து வசித்து வந்தார். சென்னையில் பல ஆண்டுகள் தங்கி இருந்ததால், அங்கு பலருடனும் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அவரும், அவரது மனைவி மற்றும் மகளும் கடந்த வாரம் கேரளா சென்றனர். அங்கு திருச்சூர் பகுதிக்கு சென்ற சந்தோஷ் பீட்டர், பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
அப்போது லாட்ஜ் மானேஜரிடம் 8-ந் தேதி காலையில் அறையை காலி செய்து விடுவோம் என்று கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை அவர்கள் அறையை காலி செய்யவில்லை. மேலும் நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து பார்த்தபோது அங்கு சந்தோஷ் பீட்டர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். கட்டிலில் அவரது மனைவி வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.
அவரது மகள் ஐரின், குளியலறையில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். 3 பேரும் தற்கொலை செய்திருப்பதை பார்த்த போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த அறையை சோதனை செய்தபோது அங்கு சந்தோஷ் பீட்டர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது.
அதில், எங்களுக்கு சொந்த ஊர் கேரளா என்றாலும் பல ஆண்டுகளாக சென்னையில்தான் வசித்து வந்தோம். இதில் அங்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்தது. எங்களிடம் பணம் வாங்கிய சிலர் எங்களை ஏமாற்றி விட்டனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானோம். அதில் இருந்து எங்களால் மீள முடியவில்லை.
இதன் காரணமாகவே நாங்கள் தற்கொலை செய்து கொண்டோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், சந்தோஷ் பீட்டர் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டிய மர்ம கும்பல் யார்? என்பது பற்றி விசாரணை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக சென்னையில் உள்ள போலீசாரையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பிறகே சந்தோஷ் பீட்டர் குடும்பத்தினரை ஏமாற்றிய சென்னை கும்பல் யார்? என்பது பற்றிய விபரம் தெரியவரும்.
- கடந்த 23-ந்தேதி மாணவிகள் 2 பேரும் வங்கிக்கு செல்வதாக கூறி சென்றனர்.
- மாயமான 2 மாணவிகளை தேடும் பணிக்கு சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மகள் கார்த்திகா (வயது19). இவர் சாத்தான்குளம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதே கல்லூரியில் படித்து வருபவர் சாத்தான்குளம் கொழுந்தட்டு மேலத்தெருவை சேர்ந்த ராபர்ட் செல்வன் மகள் எப்சிபா செல்வகுமாரி (20). கடந்த 23-ந்தேதி மாணவிகள் 2 பேரும் வங்கிக்கு செல்வதாக கூறி சென்றனர்.
ஆனால் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இது தொடர்பாக அச்சுதன் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் மாணவிகள் மாயமாகி 6 நாட்கள் ஆன பின்னரும் அவர்களை கண்டுபிடித்து தர போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக அவர்களை மீட்டு தர வேண்டும் என கார்த்திகாவின் தந்தை மற்றும் உறவினர்கள் நேற்று நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இதற்கிடையே வருடாந்தர ஆய்வுக்காக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் சாத்தான்குளம் சென்றார். அப்போது மாயமான மாணவிகள் விவகாரத்தில் விசாரணை எந்த நிலையில் உள்ளது. ஏதேனும் துப்பு கிடைத்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
அப்போது சி.சி.டி.வி. காட்சிகள், செல்போன் சிக்னல்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் மாணவிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
அப்போது விரைந்து விசாரணை நடத்தி மாணவிகளை உடனடியாக மீட்க வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுறுத்தினர்.
இந்நிலையில் மாயமான 2 மாணவிகளை தேடும் பணிக்கு சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் நியூ பெத்லகம் 7 தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது28). ஆம்பூர் நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
அவருக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆகிறது. இவருடைய மனைவி குமாரி. இவர் இரவு 11:30 மணி அளவில் மின்சார அடுப்பில் சுடு தண்ணி சூடு செய்து பின்பு குளித்துவிட்டு மீதமுள்ள தண்ணீரை மாடி மேலிருந்து கீழே ஊற்றி உள்ளார்.
அப்போது மாடி வீட்டு அருகே உள்ள மின்சார கம்பிகள் மீது தண்ணீர் பட்டு மின்சாரம் இவர் மீது பாய்ந்து மாடியில் சுருண்டு விழுந்த அவரை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
ஆம்பூர் டவுன் போலீசார் ஜெயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துளி அங்கு வரவழைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமம் முணாங்காடு பகுதியில் நேற்று காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கிய கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி.கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்(நாகை), சுரேஷ்குமார்(திருவாரூர்), வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, தாசில்தார் ரவிச்சந்திரன், மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கி கிடந்த ரப்பர் படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படகு 13 மீட்டர் நீளத்திலும், 3 அடி அகலத்திலும் இருந்தது. படகு துடுப்பை பயன்படுத்தி செலுத்த கூடியதுபடகில் இலங்கையில் பயன்படுத்தபடும் 1½ லிட்டர் அளவு கொண்ட 16 தண்ணீர் பாட்டில்களும், 4 பாதுகாப்பு உடைகளும், நீந்துவதற்கு பயன்படுத்தும் ஒரு ஜோடி காலணி மற்றும் கண்ணாடி, கருப்பு நிற பை உள்ளிட்டவைகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துளி அங்கு வரவழைக்கப்பட்டது. அது படகு கரை ஒதுங்கி கிடந்த இடத்தில் இருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் காட்டுப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த படகை வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இலங்கையில் இருந்து யாராவது இந்த படகில் வந்தார்களா? அல்லது சீனாவை சேர்ந்த உளவாளிகள் வந்தார்களா? என பல்வேறு கோணங்கணில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதும், இலங்கையில் இருந்து தங்கம் கடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது வேதாரண்யம் அருகே கோடியக்காடு மூணாங்காட்டில் முதல் முறையாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டெல்லியில் இருந்து உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 5 சீன உளவாளிகள் கடல்வழியாக ஊடுருவலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் வேதாரண்யம் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி இருப்பது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்