search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு நிகழ்ச்சி"

    • கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
    • கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 -ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரியில், கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 33 வருடங்களுக்கு முனனால் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் சந்தித்து தங்களது கல்லூரி நாட்களில் கடந்த கால நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். முக்கிய நிகழ்வாக 33 வருடங்களுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்பொழுது பல்வேறு காவல்துறை, தீயணைப்பு துறை, ஆசிரியர்கள், கப்பல் மற்றும் விமானத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரியில் மாணவர்கள் போல மாறி, கல்லூரி நாட்களில் செய்ததைப் போல விசில் அடித்தும், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளி படுத்திய சம்பவம் அனைவரையும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம், பழனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட பல்வேறு நண்பர்கள் மூலம் செய்யப்பட்டு இருந்தது.

    • அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது.
    • முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு வரும் தாங்கள் படித்த தரு ணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறு வனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

    வசதி இல்லாத மாணவ, மாண வியர்களுக்கு உதவு தல், பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபக ரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாண வியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிர்வாகி லெவி பங்கேற்று, முன்னாள் மாணவர்களால் நன்கொடையாக வழங்கப் பட்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஆசிரியைகள் ஹெலன் பிரசெல்லா, ஜாய்ஸ் அருள்செல்வி, மெர்சிபா குளோரி, ஸ்டெல்லா, சித்ரா, ஜமுனா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 27 வருடங்களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.

    பசும்பொன்

    கமுதி அருகே பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில், 1996-97-ம் வருடம்

    10-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் 27 வருடங் களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.

    பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்று கூடிய இவர்கள் பெருநாழி யில் தாங்கள் படித்த பள்ளியில், கல்வி கற்றுத் தந்த ஆசிரிய, ஆசிரியை களை அழைத்து, அவர்கள் முன்னிலையில், தங்களது பள்ளி பருவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் ஆசிரியர்கள் தங்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் தான், தற்போது, ஒழுக்க மாகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்று ஆசிரி யர்கள் முன்பு, பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஆசிரியர் களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். மேலும் ஆசிரியர்கள் முன்பு, வரிசையாக நின்று, பள்ளி நினைவுகளை ஞாபகப் படுத்தும் வகையில், கம்பால் அடி வாங்கி கொண்டனர்.

    • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளியில் 1976-ம் ஆண்டில் 7-ம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் 47 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

    ஆசிரியை சாவித்திரி வரவேற்றார். இதில் பழைய மாணவர்கள் நீண்ட நாடகளுக்கு பிறகு சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

    அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

    • பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்தித்தனர்.
    • அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்நிகழ்வில் புருணை நாட்டில் இருந்து வந்த சுஜாதா, செகந்திரபாத்தில் இருந்து வந்த செந்தில் வடிவு மற்றும் கடலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் ஒன்று கூடி, அவர்கள் படித்த வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து கலந்துரையாடினர்.

    மேலும், அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    பின்னர், குருகுலம் அறங்காவலர் வேதரத்தினத்துடன் குழுப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும், அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவிகளுக்கு குருகுலம் அறங்காவலர் வேதரத்தினம் புத்தகம் வழங்கினார்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    விருதுநகர்

    விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.

    ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 முதல் 1984-ம் ஆண்டு வரை படித்த, முன்னாள் மாணவர்கள் 41 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்தனர்.

    நிகழ்ச்சியில் அவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களான, கோவிந்தராஜ், செல்வராஜ், முஸ்பர்கான், ராமலிங்கம், ஆனந்த வடிவேல், புஷ்பவள்ளி, பழனி ஆகியோரை வரவைத்து, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

    இதில் இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில செயலாளர் அசோக், ஜோதி நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உள்பட பலர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

    • மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில்
    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் 1991-94ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ம.செல்வராசு தலைமை வகித்தார். பேராசிரியர் வே.அ.பழனியப்பன் வரவேற்றார். ஒய்வு பெற்ற பேராசிரியர்கள் திருமா.பூங்குன்றன், ராமாயி, அரங்கநாதன், ரோஸ்லெட், விஜயரகுநாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். விழாவில் 1991-1994ல் பயின்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழாசிரியர்களாக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரிக்கால அனுபவங்களை, நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவினை முன்னாள் மாணவர் தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் ஒருங்கிணைத்தார். தமிழாசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார். முன்னதாக முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது வாழ்வில் கல்வி ஒளியேற்றிய ஒய்வு பெற்ற பேராசிரியர்களை பூரண கும்ப மரியாதையுடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.


    • அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • தங்கள் பழைய நினைவு களை பகிர்ந்து கொண்டு மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவ வேண்டும்.

    மாரண்ட‌அள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1974 -75 -ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    65-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் அவர்கள் குடும்பங்களுடன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் சந்தித்துக் கொண்டனர்.

    அப்போது அவர்கள் கல்வி பயின்ற தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன், அறிவியல் ஆசிரியர் உஷா மணி அன்பழகன், கணித ஆசிரியர் ராஜகோபால், பள்ளி உதவியாளர் மற்றும் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிகழ்ச்சியில் வெளி மாநிலமான பெங்களூர், மைசூர், ஆந்திர பிரதேசம், மற்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களான சென்னை, கோயமுத்தூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து தங்கள் பிள்ளைகளுடன் அனைவரும் கலந்து கொண்டனர்.

    தங்கள் பழைய நினைவு களை பகிர்ந்து கொண்டு மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசி கொடுத்தனர். பின்னர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் குழாய்கள் அமைத்து கொடுத்தனர்.

    ×