என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணவக்கொலை"

    • மகள் காணாமல்போனது குறித்து நிதேஷ் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
    • போலீசார் மேலும் துருவித் துருவி விசாரித்தபோது, பெற்ற மகளை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி தலைநகரப் பகுதியை ஆக்ரா நகருடன் யமுனா விரைவுச்சாலை இணைக்கிறது. இந்த விரைவுச்சாலையில் மதுரா அருகே ஒரு பெரிய சூட்கேசில் இளம்பெண் ஒருவரின் உடல் காயங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கினர். 14 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொல்லப்பட்டு கிடந்த பெண்ணின் உத்தேச வயதை ஒட்டிய, டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண்களின் பட்டியல் திரட்டப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    அதில் அந்தப் பெண், தெற்கு டெல்லி பாதார்பூர் பகுதியைச் சேர்ந்த நிதேஷ் யாதவ்-பிரஜ்பாலா தம்பதியின் மகள் ஆயுஷி யாதவ் (வயது 22) என தெரியவந்தது.

    அவரது உடலை அடையாளம் காட்ட வரும்படி நிதேஷை போலீசார் அழைத்தனர்.

    அப்போது, மகள் காணாமல்போனது குறித்து நிதேஷ் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

    அவரிடம் போலீசார் மேலும் துருவித் துருவி விசாரித்தபோது, பெற்ற மகளை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

    பெற்றோருடன் வசித்த ஆயுஷி, பி.சி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.

    சமீபத்தில் சில நாட்கள் வெளியே சென்று தங்கிய அவர் வீடு திரும்பி வந்தபோது, தான் விரும்பிய வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

    அதைக் கேட்டு ஆத்திரம் தலைக்கேறிய நிதேஷ், மகளை கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளார். அதிலும் கோபம் தீராமல், தான் உரிமம் பெற்று வைத்துள்ள கைத்துப்பாக்கியால் அவரை இருமுறை சுட்டுள்ளார்.

    அதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த மகளின் உடலை ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றி பெரிய சூட்கேசுக்குள் அடைத்து காரில் எடுத்துச் சென்று யமுனா விரைவுச்சாலை ஓரத்தில் வீசிவிட்டு வந்துவிட்டார். அதற்கு அந்தப் பெண்ணின் தாயும் உதவி செய்துள்ளார்.

    அந்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். தங்கள் மகள் வேறு சாதி ஆணை திருமணம் செய்ததை ஏற்கமுடியாத பெற்றோர், அவரை ஆணவக் கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்துவிட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன் இருசக்கர வாகனத்தில் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு சென்றபோது மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 3 பேர் அரிவாளால் ஜெகனை வெட்டி சாய்த்தனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இந்த கொலை குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சங்கர் (45) நேற்று இரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

    இது தொடர்பாக போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். கைதான அவரை நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து தலைமறைவான உறவினர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதையடுத்து மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்துவிட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். அதனால் கொலை குறித்த தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.

    • மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்பட சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
    • விசாரணைக்கு பிறகே கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் முழுக்கான்கொட்டாயை சேர்ந்த சரண்யா (21) என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கிருஷ்ணகிரி அணை சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்பட சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

    அந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அன்றே சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முத்தம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (21), ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த முரளி (20) ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் ஜெகன் மாமனார் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக கிருஷ்ணகிரி கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்துள்ள நிலையில் காவலில் எடுத்து 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.

    இந்த விசாரணைக்கு பிறகே இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ரத்தக்கரை ஆடையுடன் தண்டபாணி ஊத்தங்கரை அருகேயுள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளார்.
    • அங்கு துக்கம் தாங்காமல் தண்ட பாணி தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது50). தையல் தொழி லாளி. இவரது மனைவி சுந்தரி.

    இவர்களுக்கு பவித்ரா, சுஜி என்ற 2 மகள்களும், சுபாஷ் (25) என்ற மகனும் உள்ளனர். இதில் சுபாஷ் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுபாஷ்க்கு ம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதனால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் சுபாஷ், அனுசுயாவை திரும ணம் செய்து கொண்டார். பின்னர் மனைவியை தனி யாக தங்க வைத்து விட்டு சுபாஷ் தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் அதிகாலை தண்டபாணி காதல் திருமணம் செய்த தனது மகன் சுபாசை அரி வாளால் மகன் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதனை தடுக்க வந்த கண்ணம்மாளுக்கும் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. இதில் சுபாஷ், அவருடைய பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் இறந்தனர்.

    ஆனாலும் ஆத்திரம் அடங்காத தண்டபாணி அரிவாளால் மருமகள் அனு சுயாவையும் வெட்டினார்.

    இதில் அனுசுயா சாலையில் ரத்த வெள்ள த்தில் சரிந்து விழுந்தார். 3 பேரையும் வெட்டிய தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த சுபாஷ், கண்ணம்மா ள் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை க்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த அனுசுயாவை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக இன்றுகாலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்ைச அளித்து வருகின்றனர்.

    இதையடுத்து கொலை யாளியை பிடிக்க உடனடி யாக தனிப்படை அமைக்க ப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    அப்போது ரத்தக்கரை ஆடையுடன் தண்டபாணி ஊத்தங்கரை அருகேயுள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளார்.

    அங்கு துக்கம் தாங்காமல் தண்ட பாணி தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஊத்தங்கரை நோக்கி சாலையில் நடந்து வந்து ெகாண்டிருந்தார்.

    அப்போது தனிப்படை போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய குற்றவாளி தண்டபாணியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி தண்டபாணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் குணமடைந்த பிறகு தண்ட பாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அனுசுயாவின் தாய் வனிதா உருக்கமான பேட்டி

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவ கொலையில் வெட்டுப்பட்டு காயம் அடைந்த அனுசுயா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அனுசுயாவின் தாய் அனிதா உருக்கமான பேட்டி அளித்தார். அப்போது அவர் போது கூறியதாவது:-

    என் மகள் அனுசுயா காதல் திருமணம் செய்து கொண்டதாக அவர் கணவர் சுபாஷ் உடன் இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்த போது தான் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியும்.

    அதனால் இருவருக்கும் மீண்டும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தோம். பின்னர் எங்களிடமே இருவரையும் இருக்க சொன்னோம். ஆனால் சுபாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக தெரிவித்தார்.

    சுபாஷின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. அதனால் உங்களை நம்பி என் பெண்ணை அனுப்ப முடியாது. நீங்கள் மட்டும் தனியாக சென்று வாருங்கள் என்று கூறினோம். அதற்கு சுபாஷ் உங்கள் பொண்ணை திருமணம் செய்து விட்டு செல்வதற்காகவா வந்தோம்.

    என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா, நம்பிக்கை தான் வாழ்க்கை என்று சொல்லி கிருஷ்ணகிரிக்கு அழைத்து செல்வதாக கூறினார். உறவினர்கள் அனைவரும் சேர்ந்து தான் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தோம். கிருஷ்ணகிரி அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாகவும் தினமும் அனுசுயாவின் அம்மா அனிதாவிற்கு போன் செய்து நலமுடன் இருப்பதாக 20 நாட்களாக தெரிவித்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் நான் போன் செய்து சுபாஷை கேட்டபோது என் தந்தை எங்கள் இருவரையும் போன் செய்து வர சொன்னார்.

    அதனால் வந்தோம். எங்கள் இருவரையும் என் அப்பா மனசார ஏற்றுக் கொண்டார். இப்போது தான் சாப்பிட்டு விட்டு அமர்ந்துள்ளோம் என தெரிவித்தார்.

    அதனால் அவர் கூறியதை நம்பி நாங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மாலை எங்கள் வீட்டிற்கு செல்கிறோம் வேலை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    சுபாஷின் தந்தை தண்டபாணி இன்று ஒரு நாள் தங்கி விட்டு நாளை காலை சென்று விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அதனை நம்பி இருவரும் படுத்து தூங்கும் பொழுது தண்டபாணி என் மகள் அனுசுயாவை முதலில் வெட்டி உள்ளார். அனுசுயாவின் அலறல் சத்தம் கேட்ட கணவர் சுபாஷ் தந்தையை தடுக்கச் சென்றபோது சுபாஷின் கழுத்தில் தண்டபாணி வெட்டி உள்ளார்.

    பின்னர் தடுக்க வந்த பாட்டியையும் வெட்டி உள்ளார். என் பெண்ணை வெட்டிய பிறகு என் பெண்ணை யார் காப்பாற்றினார்கள் என்னவென்று எங்களுக்கு தெரியாது. என் பெண்ணிற்கு கழுத்து, கால், முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி உள்ளார்.

    நாங்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என் பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று எங்களிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் நம்பி வரவழைத்து வெட்டி விட்டார்களே என்று அழுதபடி கூறினார்.

    சேலம் மாஜிஸ்தி ரேட்டிடம் மருமகள் வாக்குமூலம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவ கொலையில் வெட்டுப்பட்டு காயம் அடைந்த அனுசுயா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்றம் ஜே.எம்-3 நீதித்துறை மாஜிஸ்திரேட் தங்க கார்த்திகா இன்று காைல சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து அனுசியாவிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.

    அப்போது அனுசியா தனக்கு நேர்ந்த சம்பவத்தை கண்ணீர் மல்க மாஜிஸ்திரேட்டிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து மாஜிஸ்திரேட், அவருக்கு ஆறுதல் தெரிவித்து, விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அனுசி யாவுக்கு டாக்டர்கள் தொட ர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார்.
    • போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கவனா(20) உள்பட 2 மகள்கள் உள்ளனர்.

    கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தார். மஞ்சுநாத்தின் 2-வது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். எனினும் தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி 2-வது மகள் தனது காதலனுடன் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் அவரை, போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விவகாரத்தில் தங்கைக்கு கவனா உதவி செய்திருக்கலாம் என்று மஞ்சுநாத் சந்தேகித்தார். மேலும் அவர் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே மூத்த மகள் கவனா தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே உனது தங்கை வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து ஓடியுள்ளார். எனவே நீயும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை காதலிப்பதை நிறுத்தி விடு கவனாவிடம் தந்தை மஞ்சுநாத் கூறினார்.

    இருப்பினும் கவனா தனது காதலை கைவிடாமல் இருந்து வந்தார். இது மஞ்சுநாத்திற்கு தெரிந்தது.

    இதுதொடர்பாக அவர் தனது மகளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார்.

    அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதையடுத்து மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    உடனே போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் கவனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கவனா, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அவரை மஞ்சுநாத் கொலை செய்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர்.
    • இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கோ ஹிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ வெளியானது. இதை பார்த்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொலை செய்தனர்.

    இளம்பெண் கவுரவ கொலை செய்யப்பட்டது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பஞ்சாயத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியை போலீசார் மீட்டனர்.

    அதே போல் இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் ஆலோசனை செய்தவர்கள், பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளோம்" என்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் கவுரவ கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர்.
    • பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன். 26 வயது வாலிபரான இவர் ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஷர்மியும், பிரவீனை விரும்பினார்.

    இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஷர்மியின் அண்ணன் தினேஷ், பிரவீனின் சாதியை சுட்டிக்காட்டி, நீ அவனை திருமணம் செய்யக்கூடாது என்று தங்கையை எச்சரித்து உள்ளார்.

    வாலிபர் பிரவீனை மறந்து விடு, உனக்கு நமது சாதியிலேயே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று வீட்டில் கூறி வந்துள்ளனர். ஆனால் ஷர்மி இதனை ஏற்க மறுத்துள்ளார்.

    இருப்பினும் மனதை மாற்றி எப்படியாவது பிரவீனிடம் இருந்து ஷர்மியை பிரித்துவிட வேண்டும் என்பதில் அண்ணன் தினேசும் அவரது குடும்பத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

    ஆனால் ஷர்மியோ தனது பெற்றோரின் பேச்சை கேட்காமல் பிரவீனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உள்ளனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரவீன், ஷர்மியை அழைத்துச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

    ஷர்மியின் குடும்பத்தினருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்து முடிந்து உள்ளது. இதனால் பிரவீன், ஷர்மியின் அண்ணன் தினேஷ் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது நண்பர்களிடம் சொல்லி, தினேஷ் வருத்தப்பட்டு உள்ளார். எனது தங்கையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என்று கூறி அவர் ஆதங்கப்பட்டு வந்துள்ளார்.

    இதை தொடர்ந்து பிரவீனை கொலை செய்ய தினேஷ் திட்டம் போட்டார். கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தினேசும் அவரது நண்பர்கள் 3 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிரவீனை சுற்றி வளைத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் அவர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் 4 பேரும் நவீனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. அலறி துடித்தபடியே பிரவீன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிச்சென்று பிரவீனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரவீன் உயிரிழந்தார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்த நேரத்திலேயே நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரவீனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட வாலிபரும், கொலை செய்த வாலிபர்களும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது.
    • பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தெலுங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்த இளம் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அண்ணனால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம்பட்டினம் மண்டலம், ராய்போல் கிராமத்தை நாகமணி. ஹயத்நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் நாகமணி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தான் காதலித்து வந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது. 

    இந்நிலையில் போலீஸ் கூற்றுப்படி, ராயபோலில் இருந்து மன்னேகுடா நோக்கி இன்று காலை ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த நாகமணி மீது கார் ஒன்று  வேண்டுமென்றே மோதியுள்ளது.

    ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி விழுந்த நாகமணியை காரில் இருந்து இறங்கிய அண்ணன் பரமேஷ் கத்தியால்  அவரது கழுத்து மற்றும் பிற இடங்களில் அறுத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகமணியின் உடலை கைப்பற்றினர். நாகமணி காதல் திருமணத்தால் கோபமடைந்த அவரது  அண்ணன் பரமேஷ் இந்த ஆணவக் கொலையை செய்துள்ளதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

    வழக்குப்பதிவு விசாரணை நடத்திவரும் போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர். கொலைக்கு சொத்து தகராறு காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காததால்தான் நாகமணி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் ஸ்ரீகாந்த்தும் தெரிவித்துள்ளார். 

    • தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு விதிக்கப்பட்டது.
    • சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி பிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.

    அத்துடன் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டு ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து இளம்தம்பதியை வெட்டிக்கொன்றது நிரூபனம் ஆனதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கொலைக்கு சதித்திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    • மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, ​​பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    • 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

    தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24 வயது).

    மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை பிரனாய் குமார் காதலித்து வந்தார்.

    10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டனர்.

    ஆனால் பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    எனவே அவரின் எதிர்ப்பை ஜனவரி 30, 2018 அன்று ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் பிரனாய் - அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த மாருதி ராவ், பிரனாயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பல முறை பிரானாய் மீது தாக்குதல் முயற்சிகளும் நடந்துள்ளன.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த பரபரப்பான கொலை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷ்ரவன் ராவும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

    மற்றொரு குற்றவாளி மூலம் தொழில்முறை கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு ரூ.1 கோடி கொடுத்து கொலை சதித்திட்டம் தீட்டியதாக மாருதி ராவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    பிரனாயின் தந்தை பி. பாலசாமி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மாருதி ராவ், அவரின் தம்பி ஷ்ரவன் ராவ், அவரின் கார் ஓட்டுநர் சிவா, கொலையாளி சுபாஷ் குமார் சர்மா உள்ளிட்ட எட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொலைக்கு மூளையாக செயல்பட்ட அம்ருதாவின் தந்தை, மாருதி ராவ், 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

     

     இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு தெலுங்கானாவின் நல்கொண்டா நகர எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) இந்த ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    மற்ற குற்றவாளிகள் அஸ்கர் அலி, அப்துல் பாரி, எம்.ஏ. கரீம், மாருதி ராவின் சகோதரர் ஷ்ரவன் குமார் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர் சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  

     

    • கடந்த மாதம் 29-ந்தேதி காதலர்கள் இருவரும் தங்களது ஊரில் இருந்து வெளியேறினர்.
    • கொலை செய்த பெண்ணின் தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    எட்டயபுரம் :

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி.தெரு சேவியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துகுட்டி (வயது 50), விவசாயி. இவர் சொந்தமாக வேன், மினி லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.

    இவருடைய மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26). கூலி தொழிலாளி.

    ரேஷ்மா, மாணிக்கராஜ் இருவரும் உறவினர்கள். எதிரெதிர் வீட்டில் வசித்து வந்த அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே, தனது மகளின் காதலுக்கு முத்துகுட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் தனது மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி காதலர்கள் இருவரும் தங்களது ஊரில் இருந்து வெளியேறினர். மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற அவர்கள், அங்கு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கேயே தங்கியிருந்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதி இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். அங்கு மாணிக்கராஜின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று காலை மாணிக்கராஜின் தாயார் மகாலட்சுமி, தேசிய ஊரக வேலைக்கு சென்று விட்டார். இதனால் புதுமண தம்பதியர் மட்டும் வீட்டில் இருந்தனர். மாலையில் வேலை முடிந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது வீட்டில் அவரது மகன் மாணிக்கராஜூம், மருமகள் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அதை பார்த்து மகாலட்சுமி கதறி அழுதார்.

    இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து புதுமண தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீசார் விசாரணையில், மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துகுட்டி ஆத்திரத்தில் தனது மகள், மருமகன் என்றும் பாராமல் அவர்களை அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்து உள்ளது.

    முத்துகுட்டி தலைமறைவாகி விட்டார். அவரது வீடு பூட்டிக் கிடந்தது. அந்த வீட்டில் இருந்து ரத்தக்கறை படித்திருந்த அரிவாளை போலீசார் கைப்பற்றினர்.

    இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து எடடயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முத்துகுட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமணமான 26 நாளில் புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×