என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காட்டாற்று வெள்ளம்"
- போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.
- ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார்கோவில் அருகில் உள்ள தடுப்பணையில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
கொட்டக்குடி ஆற்றை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும் சிலர் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை போடிமெட்டு மலைச்சாலையை ஒட்டிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலைச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவிபோல கொட்டியது.
இந்த சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இதனால் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. காட்டாற்று வெள்ளம் பாய்ந்த பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டுனர்கள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.
போடி முந்தல் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்துமாறு அவர்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.
இதேபோல் கொடைக்கானலிலும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரியில் படகுசவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொடைக்கானல், செண்பகனூர், அப்சர்வேட்டரி, வில்பட்டி, பிரகாசபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இரவு நேரங்களில் பெரும்பாலான வீதிகளில் மக்களின் கூட்டம் அடியோடு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
- காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த தற்காலிக சாலையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலையூர் பகுதியில் இருந்து வடக்கு நத்தம் வழியாக புதூர் செல்லும் சாலையில் பெரிய ஓடை யொன்று உள்ளது. இந்த ஓடையை கடப்பதற்கு சுமார் 17 கண்கள் கொண்ட தரைப்பாலம் இருந்தது.
பந்தல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கன மழை பெய்து வரும் காலங்களில் அவ்வழியாக வரும் மழை நீரானது மறவர் பெருங்குடி வழியாக வந்து கஞ்சம்பட்டி கண்மாய் நிரம்பி உபரி நீராகவும், சுத்தமடம், தொப்ப லாக்கரை பகுதியில் காட்டு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பெரிய ஓடை யில் நீர்வரத்து அதிகமாகி உப்போடையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
இதனால் பொதுமக்கள் மேலையூர் வழியாக சாயல் குடி, அருப்புக்கோட்டை, செல்ல முடியாமல் புதூர் வழியாக சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.இந்த நிலையில் பொது மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு கிராமப்புற சாலை கள் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடியே 42 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாலம் கட்டி வரும் பகுதியில் மாற்றுச்சாலை அமைக்கப் பட்டது. மேலும் இந்த சாலையில் ஏற்கனவே 17 கண்கள் கொண்ட பாலம் இருந்து வந்த நிலையில் தற்போது அமைத்த தற்கா லிக மாற்றுச்சாலையில் வெறும் 3 கண்களுடைய பாலம் மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படு கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல் வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கஞ்சம் பட்டி கண்மாய் நிரம்பி அதன் வழியாக உபரி நீரானது அதிகளவில் வெளியேறி வருவதால் புதூர் செல்லும் சாலையில் உள்ள பெரிய ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதனால் மாற்று சாலையில் போடப்பட் டுள்ள தற்காலிக பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட தன் காரணமாக சாலையானது துண்டிக்கப் பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வடக்கு நத்தம் மற்றும் தெற்கு நத்தம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பாதிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில் தூத்துக்கு டியை சேர்ந்த விவசாயி அந்த பகுதியை டிராக்டரில் கடக்க முயன்றார். அப்போது வெள்ளப் பெருக்கு அதிகரித்தது. இத னால் டிராக்டர் இழுத்து செல்லப் பட்டது. அதிர்ச்சியடைந்த விவசாயி டிராக்டரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிராக்டரை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச் சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறுகையில், தற்காலி கமாக போடப் பட்ட மாற்றுச் சாலையை தரமாக அமைக்க வேண்டு மென கோரிக்கையும் விடுக்கப்பட் டது. ஆனால் 3 கண்பாலம் மட்டுமே அமைத்து மாற்று சாலை போடப்பட்டதால் அதிக நீர்வரத்தை தாங்க முடியாமல் தற்காலிக சாலையில் அரிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் துண்டிக் கப்பட்ட நிலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள் ளது.
இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் வெளி யூர்களுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் மாற்றுச்சாலை சீரமைக்க உடனடியாக நடவ டிக்கை எடுக்க அப்பகுதி சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.
- தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் ஓடும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த தண்ணீர் தாழ்வான பகுதியை நோக்கி பாய்ந்து வந்தது.
இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளம் உருவானது. பாறைகளும், மரங்களும் கரை புரண்டு வந்தன. இதையடுத்து ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்ற பலர் இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அத்தி கோவில் ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற தர்கா ஒன்று உள்ளது. இந்த தர்காவுக்கு மதுரை, வருச நாடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வார்கள்.
குறிப்பாக மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த சாஜூக் (வயது 48) என்பவர் தனது பேரனுக்கு மொட்டை எடுப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 70 பேருடன் நேற்று காலையிலேயே வந்தனர். தர்காவில் வழி பாட்டை முடித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பியபோது திடீரென மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அத்தி கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். அப்பகுதியில் தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.
மழையின் வேகம் குறைந் ததையடுத்து ஆற்றிலும் நீர்வரத்து சற்று குறைந்தது. பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கயிற்றின் மூலம் ஆற்றை கடந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.
அவர்களிடம் வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததும், அனைவரும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் ராஜபாளை யம் மேற்கில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றிலும் நேற்று மாலை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
- ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆனைக்கட்டி என்ற இடம் உள்ளது.
இங்கு பிரசித்தி பெற்ற ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. நீலகிரியில் வாழும் மலைவாழ் மக்களான படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்களை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களும் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அந்த கோவிலில் தீப வழிபாடு நடந்து வந்தது. இதனால் இந்த மாதம் முழுவதும் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்படும்.
மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியின் நடுவில் உள்ள இந்த கோவிலுக்கு அங்குள்ள கெதறல்லா ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆற்றை கடக்க தரைப்பாலம் ஒன்று உள்ளது. அதன் வழியாகத்தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.
நேற்று மாலையும் அந்த கோவிலில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருந்தனர். வழிபாடு முடிந்து பக்தர்கள் இரவு நேரமானதும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்படத் தயாரானார்கள்.
பக்தர்களில் ஒரு பகுதியினர் தரைப்பாலத்தை கடந்து ஆற்றின் மறுகரைக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டோடியது. இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் அலறி அடித்து மீண்டும் கோவில் உள்ள ஆற்றங்கரைக்கு தப்பி ஓடினர்.
ஆனால் 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை ஆற்று வெள்ளம் காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததாலும், இருள் சூழ்ந்து இருந்ததாலும் 4 பேரையும் மீட்க முடியவில்லை.
இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கரைக்கு வர முடியாமல் கோவில் பகுதியில் தவித்தவர்களை கயிறு கட்டி மீட்டனர். குழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். மொத்தம் 800 பேரை கயிறு கட்டி மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் குறித்து மசினக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கவரட்டி, ஜெக்கலொரை என்ற இடத்தைச் சேர்ந்த சரோஜா (வயது 65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தொடங்கியது. இரவு வெகு நேரமாகி விட்டதால் அவர்களை தேடும் பணி பாதிக்கப்பட்டது.
இன்று காலை மாயமான 4 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். படகு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஆற்றில் இறக்கி மீட்பு பணி நடந்தது.
வெள்ளத்தில் சிக்கி மாயமான பெண்களை உயிருடன் மீட்க முடியவில்லை. அவர்கள் இறந்த நிலையில் பிணமாக த்தான் மீட்கப்பட்டனர்.
முதலில் வாசுகி, சரோஜா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில் மற்ற 2 பெண்களின் உடல்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வரும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண் பக்தர்கள் பலியான சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது.
- வேடசந்தூரில் இருந்து கரூர் செல்லும் தரைப்பாலத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் சென்றது.
- தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் கார் மூழ்கும் சூழல் ஏற்பட்டது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்றுமாலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது.
வேடசந்தூரில் இருந்து கரூர் செல்லும் தரைப்பாலத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் சென்றது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வெள்ளோடு பகுதிக்கு சென்றுவிட்டு சண்முகம்(55) என்பவர் காரில் திரும்பி கொண்டிருந்தார். அவருடன் பாலசுப்பிரமணி(16), பாலகிருஷ்ணன்(34), பாண்டியன்(42), செல்வராஜ்(50), மணிக்குமார்(35) ஆகியோரும் வந்தனர்.
திண்டுக்கல் நோக்கி சென்ற அந்த கார் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனால் அவர்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் கார் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காரில் இருந்த 6 பேரும் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்த நிலையில் டிராக்டரில் கயிரை கட்டி மற்றொரு முனையில் காருடன் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்டனர். சுமார் 2 மணிநேரம் தண்ணீருக்குள் தத்தளித்த 6 பேரும் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் போலீசாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 செ.மீ. மழையில் காட்டாற்று வெள்ளத்தில் தளவாடபொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
- இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது. மேலும் காட்டுமன்னா ர்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அதைசுற்றியுள்ள பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீமுஷ்ணம் புலியூர் அருகே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று பெய்த மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாலத்தின் வேலை நின்றது. இந்த பாலம் ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து விருத்தாச்சலத்தை இணைக்கும் பாலமாக உள்ளது.
மேலும் இந்த பாலம் வேலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. ரெட்டியார்பேட்டை, வெள்ளிக் கரணை, நாச்சியார் பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் இந்த பாலத்தை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர். இதனால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்