என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீசன்"
- மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர்.
- கோடை விழாவையொட்டி பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன.
சேலம்:
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, பிரசித்தி பெற்ற கொல்லிமலை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குடும்பம், குடும்பமாக வருகின்றனர்.
தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக சாரல் மழை விட்டு விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு குளிர்ச்சியான சீசனாக மாறியுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். ஏற்காடு மலையில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் உள்ளிட்ட இடங்களை பார்த்து மகிழ்ந்தனர். அவர்கள் மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர்.
அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா என பூங்காக்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் மிகுந்துள்ளது. ஏற்காடு ஏரியில் உள்ள படகு துறையில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் திரண்டனர். இதனால் ஏரியில் பகல் முழுவதும் படகுகள் தொடர்ச்சியாக உலா வந்தன.
சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்திலும் சிறு கடைகள், நொறுக்குத் தீனி கடைகள், பழச்சாறு கடைகள், பரிசுப் பொருட்களின் கடைகள் என ஏராளமான கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதனிடையே சுற்றுலாப் பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் பெரும்பாலானவை நிரம்பி வழிந்தன.
சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் வந்ததால் ஏற்காடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. எனினும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்ததால் போக்குவரத்து பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கோடை காலம் முடியும் வரை ஏற்காடு திருவிழாக் கோலத்தில் இருக்கும் என்பதால், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை விழாவையொட்டி பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூக்கத் தொங்கி உள்ளன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதுபோல் மேட்டூருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள் பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அணை பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 2 நாட்களகாக வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
- பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.
தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.
தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- நவம்பர் மாதம் 2-வது வாரமே தொடங்க வேண்டியது
- டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
ஊட்டி,
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு ஒருசில மாதங்கள் தவிர மற்ற காலங்களில் இதமான காலநிலை நிலவும்.
எனவே தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் திரண்டு வருகின்றனர். அங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு தொடங்கும். இது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும்.
அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் 2-வதுவாரம் முதல் ஜனவரி மாத இறுதிவரை உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
மேலும்ஊட்டி, குந்தா, கோரகுந்தா, நடுவட்டம், பைக்காரா, சோலூர், கிளன்மார்கன், எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி, தாய்சோலை போன்ற இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று கூடுதலாக காணப்படும்.
அத்தகைய நேரங்களில் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில்பகல் நேரங்களில் பனிக்காற்று வீசும். எனவே வெயில் அடித்தாலும்கூட குளிர் வாட்டும்.
மேலும் பனிப்பொழி வின்போது கோரகுந்தா மற்றும் அப்பர்பவானி போன்ற பகுதிளில் '0' டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைந்து காணப்படும்.
அங்கு தற்போது உறைபனி காலம் இன்றும் தொடங்கவில்லை. கண்ணா மூச்சி காட்டி வருகிறது. எனவே ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்திற்கு மேல் உறைபனி மொத்தமாக கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் மலைக்காய்கறி உள்ளிட்ட விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உறைபனி கொட்டும்போது சாகுபடி மற்றும் மகசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் நீலகிரியில் உறை பனிக்காலம் தொடங்கினால் அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும்.
- ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
- சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி ;
இந்தியாவின் தென்கோடிமுனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.
மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.
இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் சபரிமலை சீசன் காலமாக கருதப்படுகிறது. கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.
ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 100-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சீசன் கடைகளும் ஏலம் விடப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் வசதி செய்யப்பட உள்ளது.
பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.
- ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
- சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தொடங்குகிறது
கன்னியாகுமரி :
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும். கடந்த கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி தொடங்குகிறது.
இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 600-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக சிலசிக்கல்கள் இருப்பதால் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடவில்லை. இதற்கிடையில் சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.
- சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்
- 1.50 லட்சம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 2-ம்கட்ட சீசன் நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு கடந்த ஜூலை மாதமே 1.50 லட்சம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன.
அவற்றை தோட்டக்கலை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து அரிய வகை மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டு உள்ளன. சிம்ஸ் பூங்காவில் தற்போது அனைத்து மலர் நாற்றுக்களும் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- ஐந்தருவி, பழைய குற்றாலம் அருளிலும் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டுவது வழக்கம்.
அப்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் முழுமையான சீசன் இல்லாமல் போனது.
அவ்வப்போது அருவிகள் வறட்சி அடையும் நிலையும் ஏற்பட்டது. கடந்த மாதமும் கோடையை போல கடுமையான வெயில் சுட்டெரித்ததால் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக இரவு-பகல் என பெய்து வரும் சாரல் மழையினால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் குற்றாலத்தில் மீண்டும் 'குளுகுளு சீசன்' தொடங்கி உள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் ஐந்தருவி,பழைய குற்றாலம் அருளிலும் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் திரவிய நகர், ஆவுடையானூர்,குற்றாலம், கடை யம் பகுதிகளில் காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருவதுடன் ரம்யமான சூழ்நிலையும் நிலவி வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது.
- ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்டோர் வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.
குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகு களுக்கு விதிக்கப்பட்ட 60 நாள் மீன் பிடி தடைக்காலம் கடந்த ஜூலை 31-ந்தேதி நள்ளிர வுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளன.
ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இது தவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணை ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர்.
கடந்த 1-ந்தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற குளச்சல் விசைப் படகுகளில் 3 படகுகள் நேற்று முன்தினம் காலை கரை திரும்பின. இந்த விசைப்படகுகளில் கிளி மீன்கள் ஓரளவு கிடைத்தன.அவற்றுகளை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது.இது முந்தைய காலம் ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 8 படகுகள் இன்று கரை திரும்பின. இவற்றுள் குறைந்த அளவு ஓலக்கண வாய் மற்றும் தோட்டுக்கண வாய் மீன்கள் கிடைத்தன.அவற்றை மீன் ஏலக்கூ டத்தில் குவித்து வைத்து மீனவர்கள் விற்பனை செய்தனர். தற்போது விசைப்படகுகளில் கணவாய் மீன்களின் சீசனா கும். குறைந்த அளவு கணவாய் கிடைத்ததால் விசைப்படகினர் டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.
- குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
- அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் குளிர்ந்த காற்று வீசும்.
கேரள மாநிலம் மூணாறு போன்று இங்கு குளுகுளு சீசன் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.
இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
இதே போல் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சீசன் அறிகுறிகள் தொடங்கும்.
தொடர்ந்து கேரளா மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்திலும் மழை பெய்ய தொடங்கும். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசனுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.
ஆனாலும் சீசன் இந்த மாதத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அருவிக்கரைகளில் உள்ள கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் குற்றாலத்தில் மட்டும் தினமும் ரூ. 20 லட்சம் வரை பணப்புழக்கம் இருக்கும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாது குற்றாலம் அருவியில் நீர்வரத்தை பொறுத்தே தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதனை நம்பியும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
- மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.
- பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அடுத்த பாண்டிக்கோட்டகம் பாலம் அருகே ஒரே ஒரு அரிய வகை மரம் உள்ளது.
இந்த மரத்தின் பெயர் பிங் ட்ரம்பெட் மரமாகும்.
இந்த வகை மரங்கள் அதிகளவில் பெங்களூரில் தான் காணப்படுகிறது.
இந்த பிங் ட்ரம்பெட் மரத்தில் மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.
இதுவே சீசன் காலமாகும்.
தற்போது சீசன் தொடங்கிவிட்ட நிலையில் அழகிய இளஞ்சிவப்பு மலர்களுடன் காண்போரின் மனதை ஆர்ப்பரிக்கும் வகையில் இந்த மரம் காட்சியளிக்கிறது.
அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிலர் பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.
ஆனால், அப்பகுதி மக்களுக்கு இந்த மரத்தின் பெயர் மற்றும் இதன் சிறப்புகள் தெரியவில்லை.
எனவே, பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மரத்தை யாரும் வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
- கடற்கரையில் மாலை நேரங்களில் இதமான குளிர் காற்று வீசுகிறது.
- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி:
உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
தமிழ் புத்தாண்டை முன்னிட் டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரியில் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு பொதுத்தேர்வு முடிவடைத் துள்ளதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ண மாக உள்ளனர்.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மாலை நேரங்களில் கடற்க ரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்க ரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ண மாக உள்ளனர். இதில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இத னால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டிஉள் ளது. இந்த சுற்றுலா தலங் களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப் பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீ சாரும் தீவிர கண் காணிப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.
- ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
- 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய3மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 600-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடவில்லை. சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட்ட உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்