search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிமனை"

    • அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்,
    • டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்


    நாகர்கோவில் :அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும், போதிய தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் அற்புதராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சுவாமி, செந்தில்குமார், நடேசன் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
    • இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டையில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் இம்பீரியல் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு வாகனங்களின் பழுது நீக்கும் பணிமனையின் சுற்றுச்சுவர் மீது மோதி பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போக்குவரத்து கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • 2 வண்டிகளில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள அறை ஒன்றில் பஸ்சின் பழைய சீட்டுகள் மற்றும் பொருட்கள் போடப்பட்டு இருந்தது.

    இந்த அறையில் இன்று மதியம் 12.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தன. தீ மளமளவென்று பரவியதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    மேலும் பயங்கர சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறின. இதை பார்த்த போக்குவரத்து கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 வண்டிகளில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து ஏற்பட்டதை யடுத்து அண்ணா பஸ் நிலை யம் மற்றும் மீனாட்சிபுரம் சாலையில் கடுமையான புகை மண்டலங்கள் ஏற்ப ட்டது.

    பொதுமக்களும் அங்கு திரண்டதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. தீவிபத்தில் டெப்போவை ஒட்டி உள்ள ஓட்டல் ஒன்றின் ஒருபுறமும் எரிந்து சேதம் அடைந்தது. அந்த ஓட்டலின் கண்ணாடிகள் மற்றும் பைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து போக்கு வரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், டெப்போவை ஒட்டி உள்ள ஓட்டலின் மாடியில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி உள்ளனர். அந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள வர்கள் தண்ணீரை ஊற்றி னார்கள்.

    அதன் பிறகு தான் டெப்போவில் பழைய பொருட்கள் வைத்திருந்த அறையில் தீ எரிந்தது என்றனர்.

    இது தொடர்பாக கோட்டார் போலீசில் போக்குவரத்து கழக அதிகாரிகள் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் டெப்போவில் தீவிபத்து ஏற்பட்டதா? ஓட்டலில் ஏற்பட்டதா? தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மேயர் மகேஷ் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    • முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
    • மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது

    வேலூர்:

    பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் 50 ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது.

    ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சி. அலமேலு வரவேற்று பேசினார்.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் என். ரமேஷ் மற்றும் துணைத்தலைவர் என். ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிமொழி மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனையை தொடக்கி வைத்து பேசியதாவது:-

    பணிமனையில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் மிகச் சிறந்த தேர்வு வினா தயாரிப்பா ளராகத் திகழ வேண்டும்.

    நல்ல தரமான வினாக்களை தயாரித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதன் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுமை பெறச் செய்து தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்களாக வர வேண்டும்.

    எந்த நேரத்திலும் கல்விப் பணி ஒன்றையே ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் வினாக்கள்தான் தமிழகத்திலேயே மிகச் சிறந்த வினாவாக இருக்க வேண்டும்.

    ஆசிரியர்களது வாழ்க்கையில் எப்போதும் தேடல் வேண்டும்.

    நிறைய புத்தகங்களை படியுங்கள். அதிக முயற்சி, கடுமையான பயிற்சி மேற்கொண்டு அரசுத் தேர்வுகளில் வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சியை 100 சதவீதம் பெறுவதற்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் சி. குமார் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்,

    கடலூர்:

    கடலூர் முதல் சென்னை வரை செல்லும் சொகுசு பஸ்களில் நடத்துனர் இல்லாமல் செல்வதை கண்டித்தும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் ,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்பிட கோரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன சிறப்பு தலைவர் பாஸ்கர், பணிமனை நிர்வாகி ராஜ், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. 

    • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும்
    • 14-வது ஊதிய ஒப்பந்தம் தொகையை உடனே வழங்கிட வேண்டும்

    கன்னியாகுமரி:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்கிடவும்‌, 14-வது ஊதிய ஒப்பந்தம் தொகையை உடனே வழங்கிடவும், 4 சதவீதம் டி.ஏ. உயர்வை வழங்கவும், நீதிமன்றம் உத்தரவு படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை வலியுறுத்தி திங்கள் நகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிளை தலைவர் மணி கண்டன் தலைமை தாங்கி னார். அமைப்பாளர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னராக மாவட்ட அமைப்பா ளர் குமாரதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சி யின் மாவட்ட பொது செயலாளர் ராஜா, மணி மகேஷ்வர பிள்ளை சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் விஜயன் நன்றி கூறினார்.

    • புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனா்.
    • புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூா் மாவட்டம் உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தனா். அதேபோல தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவைத்தனா். முன்னதாக, தாராபுரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கான கட்டட கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ஜஷ்வந்த் கண்ணன், உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வா் ஆா்.ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ரூ.6.16 கோடியில் தொழிற்பயிற்சி நிலைய பணிமனை-சுற்றுலா மாளிகை கட்டுமான பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • 10,568 ச.அடி. பரப்பளவில் பணிமனை, 4 வகுப்பறைகள், கணினி அறை, கூட்ட அறை, ஆசிரியர்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன் வடிவமைக்கப்பட்ட பணிமனை கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இதேபோன்று பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகையும் கட்டடப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ்

    நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்களுடன் ரூ.2 ஆயிரத்து 877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படவுள்ளன.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி மையம் 4.0 தொடங்கப்படவுள்ளது.

    இந்த புதிய அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் 10,568 ச.அடி. பரப்பளவில் பணிமனை, 4 வகுப்பறைகள், கணினி அறை, கூட்ட அறை, ஆசிரியர்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதில் தொழிற்சாலை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி பிரிவு, உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் பிரிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திப் பிரிவு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    சாத்தூரில் சுற்றுலா மாளிகை கட்டிடமானது, 2 தளங்களை கொண்டதாக கட்டப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கோட்டாட்சியர் அனிதா, நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், நகரசபை தலைவர் குருசாமி, உதவி செயற்பொறியாளர் செந்தூர், வட்டாட்சியர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2 கோடியில் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை பணிமனையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் தொழிற்ப யிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், சமூக பொருளா தார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில் திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்க புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், விருதுநகர் அரசினர் தொ ழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வை யிட்டார்.

    பின்னர், இந்த ஆண்டி ற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கைக்கு அனுமதி க்கப்பட்ட தொழிற்பி ரிவு பயிற்சி யாளர்க ளுக்கு சேர்க்கை ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, தொழிற்ப யிற்சி நிலைய வளாகத்தில் கலெக்டர் மே கநாதரெட்டி மரக்க ன்றினை நட்டு வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மண்டல பயிற்சி இணை இயக்குநர்(திருநெல்வேலி) செல்வக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன், நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் பிருந்தாவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×