என் மலர்
நீங்கள் தேடியது "சேவல்"
- வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில் மழை.
- வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
வேலூரில் 105.1 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, திருத்தணியில் 102 டிகிரி, சென்னையில் 101 டிகிரி, கரூர், மதுரை, தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்துள்ளது.
வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
வேலூர் மாநகரில் சத்துவாச்சாரி, வள்ளலார், காட்பாடி, திருவலம், கொணவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
- வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கம் கெடுகிறது.
- அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என டாக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.
போபால்:
இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் அலோக் மோடி. இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது:
எனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.
இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என சஞ்சய் சிங் தெரிவித்தார்.
- கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதன் பேரில் சேவல் சண்டை நடத்திய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4 ஆயிரம் மதிப்பிலுள்ள சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி. சப்-இன்ஸ்பெக்டர். மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்திய அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோகுல்(வயது 23), ராஜகோபால்(26), பவானி, இளங்கோவன்(43), ஈரோடு எலக்ட்ரீசியன் தினேஷ்(29), ஈரோடு நிதி நிறுவன அதிபர் உதயன்(32), ஈரோடு, போட்டோ கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன்(28) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் பறிமுதல்.
- வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள்கோவில் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்று போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது சுந்தரபெருமாள் கோவில் மணவாளம்பேட்டை தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் ஆதிகேசவன் (வயது 19), சுந்தர பெருமாள் கோவில் வெள்ளாளர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (19) ஆகிய 2 பேரும் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் பவானியை சேர்ந்த சுரேஷ்(வயது 38,), ஈரோட்டை சேர்ந்த பாஸ்கரன்( 48,) கனகராஜ்( 28,) குப்பாண்டபாளை யத்தை சேர்ந்த சவுந்தர்( 27,) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
- சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான்.
தெலுங்கானா மாநிலம் மகபூப நகர் மாவட்டத்தில் உள்ள பூரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சேவல் ஒன்றை கையில் பிடித்து சென்றான். அந்த சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான். அதே நேரம் அந்த சேவல் யாருடையது என தெரியாததால் போலீசார் அதை பாதுகாப்பதற்காக முடிவு செய்து சேவலை போலீஸ் நிலைய சிறையிலேயே அடைத்து வைத்து அதற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்த செய்தி அப்பகுதியில் பரவ தொடங்கியதும் மக்கள் பலரும் போலீஸ் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலை பார்த்து வருகிறார்கள்.
- சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோரையர் பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (34), சூரமங்கலம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபதி (44), சுபாஷ் (30), பிரபு (33),ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 11 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
- தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர்.
- நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் பொங்கல்(சங்கராந்தி) பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
இதில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த பந்தயங்களுக்கென்று இப்பகுதிகளில் சேவல்கள் தனித்துவமான முறையில் வளர்க்கப்படுகின்றன.
அவற்றுக்கு தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களைப் பார்த்து ஆந்திராவில் வளர்க்கப்படும் பந்தய சேவல்களை வாங்க தாய்லாந்தில் இருந்து 4 பேர் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு பகுதிக்கு வந்தனர்.
அப்போது அவர்கள் அனைவரும் ரங்காபுரம் என்னும் ஊரில் பந்தய சேவல்களை வளர்க்கும் ரத்தைய்யா என்பவரை சந்தித்து ரூ.3 லட்சம் கொடுத்து பந்தய சேவல்களை தங்களது நாட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இதைப் பார்த்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேர் என்னிடம் வந்து ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்ற சேவலை விலைக்கு கேட்டனர்.
அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் ரூ.3 லட்சம் கொடுத்து மற்றொரு பந்தய சேவலை அவர்கள் வாங்கிச் சென்றனர் என்றார்.
- போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இலுப்பைகிணறு என்ற இடத்தில் கும்பலாக ஆட்கள் நின்று கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சேவல் சண்டை சூதாட்டத்துக்கு ஏற்பாடு செய்த வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.
அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (36), ஆத்தூர் பேட்டை செல்வம் (31), ஏத்தாப்பூர் முருகன் (41), இடையப்பட்டி ஞானசேகரன் (41), வடுகத்தம்பட்டி சரவணகுமார்(33), தும்பல் கோபி (23), காடையாம்பட்டி ஸ்ரீராம்(21), ஏத்தாப்பூர் சசி (25) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 11 வாகனங்கள், ரூ.4,060 ரொக்கம் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
- வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.
இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-
வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.
சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
- இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
- சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.
திருவள்ளூர்:
திருவள்ளுர் அடுத்த தங்கனூர் கிராமத்தில் தைப்பூ சத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி கோர்ட்டு அனுமதியுடன் நேற்று தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் ஒரே நேரத்தில் 136 சேவல்கள் மோதின. இதற்காக தனித்தனியாக மோதும் களங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதனை காண திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து இருந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டி களைகட்டியது.
நேற்று வரை மொத்தம் 724 சேவல்கள் களத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.
இன்று 2-வது நாளாக தங்கனூரில் சேவல் சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பார்வையாளர்களும் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளித்தது. இன்று 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் மோதுகின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றதாக போட்டியை நடத்தும நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் சேவல் சண்டை போட்டிகள் முடிந்தன. போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க காசு மற்றும் சான்றிதழ்,கோப்பைகள், கியாஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.