என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிவாரண உதவி"
- வெடிவிபத்தில் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சதீஷ்குமார் (வயது 34) பலத்த தீக்காயங்களுடன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
- துாத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
- தமிழக அரசு கேட்ட, ரூ.21,000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண தொகையை, மத்திய அரசு வழங்க வலியுறுத்தி இன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து இருந்தது.
அதன்படி சென்னை சாஸ்திரிபவன் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை திரண்டனர். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட 600 பேர் பங்கேற்றனர். இவர்களில் 100 பேர் பெண்கள் ஆவர்.
போராட்டம் குறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
கனமழை மற்றும் வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
துாத்துக்குடி மாவட்டம் இன்னும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வீடுகள், கடைகள், குறு,சிறு தொழில் நிறுவனங்கள், விவசாயம், மீன்பிடி தொழில், உப்பளங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாசம் அடைந்துள்ளன. ஆனால், தவிக்கும் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட மத்திய அரசு முன்வரவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 21,000 கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், மத்தியஅரசு இதுவரை உரிய நிவாரணம் வழங்கவில்லை. எனவே தமிழக அரசு கேட்ட, ரூ.21,000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிம் ரூபாயும் வழங்க உத்தரவு.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில்
வெவ்வேறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள், தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, பனஞ்சேரியை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் சாந்தி, திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்டம், அமைந்தகரையைச் சேர்ந்த சதீஷ் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
- 4 ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து உணவு வினியோகித்து வருகின்றன.
- அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட முதியவர் ஒருவரையும், கர்ப்பிணி பெண் ஒருவரையும் மீட்டனர்.
தூத்துக்குடியில் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப் பட்டுள்ளது. பல இடங்களில் ஆபத்தான அளவுக்கு தண்ணீர் ஓடி கொண்டிருக் கிறது. இதனால் யாரும் அந்த கிராமங்களுக்குள் செல்ல முடியவில்லை.
154 ராணுவ வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். இது தவிர பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
ராணுவ வீரர்கள் சிறு சிறு ரப்பர் படகுகளில் உணவு, தண்ணீரை கொண்டு கிராமங்களில் வினியோகிக்கி றார்கள். ஆபத்தான இடங்களி லும் கயிறு கட்டி தண்ணீருடன் போராடி பணி செய்கி றார்கள். ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் உயிரை யும் பணயம் வைத்து சென்று உதவி வருவதை பொது மக்கள் பாராட்டுகிறார்கள்.
தரை வழியாக ராணுவ வீரர்கள் உதவி வரும் நிலை யில் கடற்படை மற்றும் விமானப் படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர் களும் தொடர்ந்து உணவு வினியோ கித்து வருகின்றன.
ஹெலிகாப்டர் சத்தம் கேட்டால் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தாழ்வாக பறந்து உணவு பொட்ட லங்களை போடுகிறார்கள்.
ஒரு இடத்தில் காலியான பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நின்றனர். அந்த பகுதியில் காற்றின் வேகமும் குறைவாக இருந்ததால் கைக்கு எட்டுவது போல் ஹெலிகாப்டரை தாழ்வாக பறக்க செய்து வாசலில் இருந்த படி வீரர் ஒருவர் உணவு பொட்டலங்களை வழங்கினார்.
வைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று மட்டும் 3.2 டன் உணவு பொட்டலங்களை வினியோகித்தனர். இன்றும் உணவு வினியோகத்தை தொடர்ந்து அவசர மருத்துவ உதவி தேவைப் பட்ட முதியவர் ஒருவரையும், கர்ப்பிணி பெண் ஒருவரை யும் மீட்டனர்.
- எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்
பொன்னேரி:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரை பகுதிக்கும் பரவியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் மதிவாணன். மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன், சுற்றுச்சூழல் அதிகாரி லிவிங்ஸ்டன் ஆகியோர் நேரில் பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது கடலில் எண்ணெய் கழிவு கலப்பால் 20நாட்களாக வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி, கோட்டைக்குப்பம் ஊராட்சி, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி அவுரிவாக்கம் ஊராட்சி, பழவேற்காடு ஊராட்சி ஆகிய ஊராட்சி மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் 33 கிராம மீனவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து 33 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், பழவேற்காடு கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவினால் மீன்கள், இறால்கள் நண்டுகள் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
- நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
- மிச்சாங் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.
சென்னை:
மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மழைநீர் வெளியேற்றுதல், உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல், நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, எழும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 99-வது வார்டு, மெக் நிக்கல் சாலை, சர்வோதயா காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும், புதிய பூபதி நகர், ஓசங்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கும், திருநங்கைகள் காப்பகத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 59-வது வார்டை சேர்ந்த டி.என்பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தேவராஜ் முதலியார் தெரு, மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மிச்சாங் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா ராஜன், தயாநிதி மாறன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் இளம்சுருதி, ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுந்தர்ராஜன், பரிமளம் மற்றும் முரளி, ராஜசேகர், ஜெகதீஷ், பிரபாகரன், வேலு சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
இதனை தொடர்ந்து புதுப்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தொடர் வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டத்தில் பாக்குமரங்கள், வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
நிவாரண உதவி
இந்த நிலையில் கொலை யுண்ட இளம்பெண் குடும்பத்தாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் கபிலர்மலை யூனியன் அலுவலகத்தில் வழங்கினார்கள்.
மேலும் அவரது 2 குழந்தைகளுக்கு வருங்கால வைப்பு நிதியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்கள். வாழை, பாக்கு மரம் மற்றும் டிராக்டர் எரித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, புஷ்பராஜன், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர்.சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன், அ. குன்னத்தூர் ஊராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற ரமேஷ், ஆனங்கூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் சசிகுமார், பொன்னுவேல், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.
- 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் அடங்கிய 287 மனுக்களும், மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.
மொத்தம் 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாரா யணன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
- தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணிப்பூர் மாநில முதல் மந்திரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பிவைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்கு மாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும், மேலும், இது தொடர்பாக எடுக்கப் பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தவும் கோரியுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கோர விபத்தில் 5 பேர் பலியாகியும், 91 பேர் காயமடைந்தனர்.
- அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் வழங்கி ஆறுதல்
கடலூர்:
நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் 2 பஸ் நேருக்கு நேர் மோதி நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகியும், 91 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் நேரில் பார்வை யிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய தோடு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர் விபத்தில் இறந்த குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிவாரண உதவி அறிவித்ததை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்காண காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்கள். கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்து அனுமதிக்கப்பட்ட நபர்க ளை அமைச்சர்கள் எம். ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகர தி.மு.க செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாள ர்கள் சுப்பிரமணி, தன ஞ்ஜெயன், விஜய சுந்தரம், பகுதி செயலா ளர்கள் சலீம், நடராஜன் , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழி ல்நுட்ப அணி ஒருங்கிணை ப்பாளர் கார்த்திக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்த தாரர் ராஜசேகர், மாநகர துணை செயலாளர் சுந்தர மூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, கவுன்சிலர்கள் பார்வதி, சாய்த்துனிஷா சலீம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 3 நாள்களில் 4 பகுதிநேர ஆசிரியா்கள் உயிரிழந்துள்ளனா்
- தலா ரூ.10 லட்சம் வழங்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது
திருப்பூர் :
உயிரிழந்த பகுதிநேர ஆசிரியா்களின் குடும்பங்க ளுக்கு முதல்வா் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட ஒருங்கி ணைப்பாளா் கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் கடந்த மே 10 -ந் தேதி முதல் மே 12 ந் தேதி வரையில் 3 நாள்களில் 4 பகுதிநேர ஆசிரியா்கள் உயிரிழந்துள்ளனா். இதில், கரூரைச் சோ்ந்த பிரதாப் என்ற பகுதி நேர கணினி ஆசிரியா் சாலையோரத்தில் நின்று டீ அருந்திக் கொண்டி ருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2012 ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக மாதம் ரூ.10 ஆயிரம் என்ற குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பகுதிநேர ஆசிரியா்கள் இறந்தால் தற்காலிக ஊழியா்கள் என்பதால் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் எந்தவிதமான நிதியுதவியும் வழங்கு வதில்லை. இந்த நிலையில் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் குடும்ப ங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆகவே, அரசு துறையில் பணியாற்றி மாணவா்களின் தனித் திறமையை உயா்த்திய உயிரிழந்த பல பகுதிநேர ஆசிரியா்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கூறினார்.
- விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 70 சதவீத நெற்பயிர்கள் வடகிழக்கு பருவ மழையையே நம்பி சாகுபடி செய்யப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.
2022-ம் ஆண்டில் வட கிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் ஏறத்தாழ 1 லட்சம் ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையின்றி கருகி வீணாகி உள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்