என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்மார்கள்"

    • கர்ப்பிணி பெண்கள் ஓய்வெடுக்கும் அறையும் ஏற்பாடு
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதில் பெண் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களில் சிலர் கர்ப்பிணி தாய்மார்களாகவும், சிலர் கைக்குழந்தையுடனும் வந்து சாமி கும்பிட்டு விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் இட வசதி இல்லை. திறந்த வெளியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அவல நிலை இருந்து வந்தது. எனவே இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தை களுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் வரை அமைக்க வேண்டும் என்று பெண் பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதேபோல கர்ப்பிணிகள் தங்கி இளைப்பாறு வதற்கு வசதியாக ஓய்வறை வசதி செய்துதர வேண்டும் என்றும் பெண் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் தாய் மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வாசலுக்கு அருகில் தாய்மார்கள் பாலூட்டும் அறையும், கர்ப்பிணிகள் ஓய்வெடுக்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பெண் பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

    • குழந்தைக்கு மாதங்கள் அதிகரிக்கும் போது மூக்கு அல்லது தொண்டை காற்றுப்பாதையில் சில அடைப்புகள் இருக்க கூடும்.
    • குழந்தை வாய் வழியாக சுவாசிக்கும் போது அது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்க கூடும்.

    குழந்தை விழித்து கொண்டிருப்பதைவிட தூங்கும் போது தான் அம்மாக்கள் அதிகமாக கவனிப்பர்கள். எல்லா அம்மாக்களுக்கும் இது பொருந்தும். குழந்தையின் கை விரல்கள் கால் விரல்கள், கால்கள், குட்டி கண்கள், மூக்கு துவாரங்கள், சிறிய காதுகள் என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்க தோன்றும்.

    அவர்கள் தூங்கும் போது குழந்தையை உற்று நோக்கும் அம்மாக்கள் குழந்தை வாயை திறந்த நிலையில் தூங்குவதையும் கவனித்திருப்பார்கள். இது அடிக்கடி நிகழ கூடியதுதான் ஆனால் குழந்தை வாய் திறந்து தூங்கினால் அது கவனிக்க வேண்டிய விஷயம் தான்.

    பிறந்த குழந்தை 3 முதல் 4 மாதங்கள் வரை வாயால் சுவாசிக்கமாட்டார்கள். அதே நேரம் குழந்தைக்கு மாதங்கள் அதிகரிக்கும் போது மூக்கு அல்லது தொண்டை காற்றுப்பாதையில் சில அடைப்புகள் இருக்க கூடும். அதனால் தான் வாய்வழியாக சுவாசம் நடைபெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இது பொதுவானது என்றாலும் இது சிக்கலான நிலைமைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தொடரும் போது வாய் வழியாக சுவாசிப்பது குழந்தைக்கு பழக்கமாகிவிடும்.


    ஆனால் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கும் போது அது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்க கூடும். மூக்கு சுவாசம் போன்று இது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் மூக்கு வழியாக குழந்தை சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதற்கு முன்பு அதில் இருக்கும் மாசு வடிகட்டப்படுகிறது. நாசி சுவாசம் நுரையீரலில் ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை அதிகரிக்க செய்கிறது. குழந்தையின் உடலில் ஆக்ஸிஜன் அதிகரித்தால் அது குழந்தையின் உயிர் ஆற்றலை மேம்படுத்த செய்யும். மேலும் இது நுரையீரலுக்கு சுவாசம் சீராக கிடைக்கும். ஆனால் வாய் வழியாக சுவாசித்தல் நல்லதல்ல.

    குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருக்கும் போதும் இது நிகழலாம். அதனால் குழந்தை தூங்கும் போதெல்லாம் இதை கவனியுங்கள். இது குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகவும் இருக்கலாம். குழந்தை வாய் திறந்து தூங்கும் போது மூச்சுத்திணறல் மூச்சு விடுதலில் சிரமம் இருந்தாலும் இந்நிலை உண்டாகலாம்.

    குழந்தைக்கு சளி உண்டாகும் போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் அல்லது சளியால் சுவாசம் தடைபடலாம். அதனால் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கலாம். அல்லது ஏதேனும் ஒவ்வாமையால் இது உண்டாகியிருக்கலாம்.எனினும் சளி இருக்கும் போது குழந்தைக்கு உடனே சரியாக்க முடியாது என்பதால் அவர்கள் வாய் வழியாகத்தான் நிம்மதியான சுவாசத்தை பெறுவார்கள்.

    வாய் வழியே சுவாசம் என்பது குழந்தைக்கு உண்டாகும் மூச்சுத்திணறல் அறிகுறியாகவும் இருக்கலாம். குழந்தை மல்லாந்து படுத்திருக்கும் போது குழந்தையின் காற்றுப்பாதை ஏதேனும் சிறு வகையில் அடைப்புக்கு உள்ளாகியிருக்கலாம். இதற்கு டான்சில் அல்லது அடினாய்டு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.


    குழந்தைகள் குறட்டை விடுகிறார்களா என்று நினைக்காதீர்கள். அம்மாக்களுக்கு தெரியும் குழந்தையின் குறட்டை சத்தம். குழந்தை தூங்குவதில் சிரமம் இருக்கும் போது, இருமல் வரும் போது, மூச்சுத்திணறல் இருக்கும் போது உண்டாக கூடும்.

    சில குழந்தைகள் வேறு நோய் தாக்குதல் காரணங்களாலும் மூக்கு வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கலாம். அதனால் குழந்தை வாய் வழியாகவே எப்போதும் சுவாசித்தால் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் குழந்தைக்கு சுவாசப்பாதை தொற்றுடன் வேறு அறிகுறிகள் இருந்தால் அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    குழந்தை வாயை திறந்து தூங்கினாலே அது ஏதோ குறைபாடாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். சாதாரணமாக சளி பிரச்சனை இல்லாத நேரத்திலும் வாய் வழி சுவாசம் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    • தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
    • பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சியை தாய்ப்பால்தான் அதிகமாக நிர்வகிக்கிறது. பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. நோய்களை எதிர்த்து போராடும் ஆன்டிபயாடிக்குகளை வழங்குவதிலும் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

    * தாய்ப்பால் சுமார் 90 சதவீத நீரால் ஆனது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சுமார் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அல்லது பால் (அ) பழச்சாறு போன்றவற்றை குடிக்க வேண்டும்.

    * தாய்ப்பால் அதிகமாக சுரக்க பச்சை காய்கறிகள், முட்டை, பால், பூண்டு, வெங்காயம், திராட்சை சாறு, கோழி மற்றும் இறைச்சி சூப்களை சாப்பிட வேண்டும்.

    * தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். குழந்தை தூங்கும்போது தாயும் தூங்க முயற்சி செய்ய வேண்டும்.

    * மார்பகங்களில் எப்போதும் குழந்தைக்கு பால் சுரக்கும். குழந்தைக்கு பாலூட்டும்போது மார்பகங்களில் மேலும் பால் அளவு அதிகரிக்கும்.

    * பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 10 நிமிடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    * குழந்தை தூங்கிவிட்டால் மெதுவாக எழுப்ப முயற்சித்து பால் கொடுக்க வேண்டும்.

    * பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    • தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.
    • தற்போது 2023-24-ல் இது 45.5 ஆக மேலும் குறைந்திருக்கிறது.

    சென்னை:

    கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு டாக்டர்கள் பணியிடம் காலியாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசு மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2001-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின்போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் கடந்த 2018-20-ல் 54 ஆக குறைந்தது.

    தற்போது 2023-24-ல் இது 45.5 ஆக மேலும் குறைந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.
    • விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும்.

    ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமை செய்யும் விஷயம் தாய்மைப்பேறு அடைவதாகும். குழந்தையை கருவில் தாங்கி அதை சீராக போற்றி வளர்த்து, பெற்றெடுத்து, சீரும் சிறப்புமாக வளர்க்கும் பொறுப்பு தாய்க்கே உரியது.

    குழந்தைப்பேறுக்குப் பின்னர் உடலில் உள்ள காயங்களை ஆற்றும் வகையில் மஞ்சள் செயல்படுகிறது. மஞ்சளில் விட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் அடங்கியிருப்பதால் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற காயங்களை அது விரைவாக குணப்படுத்துவதோடு, உடல் வீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. அதனால் ஒரு டம்ளர் பசும்பாலுடன் சிறிதளவு நல்ல மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.

    குழந்தை பேற்றுக்குப்பின் பின்னர் தாயின் உடலில் பல்வேறு சத்துக்களின் இழப்பு ஏற்பட்டு, உடல் பலவீனமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டிய பெரும் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அதனால், அவர்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.

    குழந்தை பெற்றெடுத்த பின்னர் தாயின் உடல் நிலையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் மனநிலையில் அந்த தாய் பல சிக்கல்களை சந்திக்கிறாள். அந்த சிக்கல்களை தாங்கும் அளவுக்கு அவள் தன்னை உடல் ரீதியாக தகுதியுள்ளவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தாய்-சேய் நல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அந்த வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது அந்த தாய்க்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் உடல் நலனை ஏற்படுத்தும். அத்துடன் பிரசவத்தால் ஏற்பட்ட உடல் வலி, காயங்கள் ஆகியவை விரைவில் குணமடையும் விதத்திலும் அந்த உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரக்க உதவுவதாகவும் அந்த உணவு அமைவதும் அவசியம்.

    ஒரு நாளைக்கு 3 முதல் 4 அவுன்ஸ் புரதச்சத்து அடங்கிய உணவுகளை அந்த தாய் எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் 4 அல்லது 5 முறை பால் மற்றும் பால் பொருட்களை உண்ணலாம். அதன் மூலம் உடலுக்கு தேவைப்படும் புரதம், கால்சியம் ஆகியவை ஈடுகட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், பல்வேறு விதைகள் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும். அதன் மூலம் உடல் சோர்வு, எடை குறைதல், வாந்தி வருதல் ஆகிய சிக்கல்கள் விலகும். பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உடல் சோர்வை அகற்றும் விதமாக இரும்புச்சத்து, விட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, பிரக்கோலி ஆகியவற்றை உண்ணலாம். அத்துடன் கீரை வகைகள், எள் சேர்த்த தின்பண்டங்களையும் உட்கொள்ளலாம்.

    • 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.
    • கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் கீரைகள், பழங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தா தலைமை வகித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு கீரைகள் மற்றும் பழங்களை வழங்கினார்.

    முன்னதாக 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.

    இதில் கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    இதில் மருத்துவர்கள் இந்திரா, பார்கவி, மருந்தாளுனர் சக்திவேல் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்து கூறினர்.
    • தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தில் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் ரொட்டேரியன் பிவி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலையில் டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி டெல்டா சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் காளிதாஸ், செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் மாணிக்கவாசகம், மதன் அழகரசன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இறுதியில் செயலர் ரொட்டேரியன் ராஜதுரை நன்றி கூறினார்.

    ×