search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் எளிமையான வழிகள்
    X

    தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் எளிமையான வழிகள்

    • தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
    • பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சியை தாய்ப்பால்தான் அதிகமாக நிர்வகிக்கிறது. பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. நோய்களை எதிர்த்து போராடும் ஆன்டிபயாடிக்குகளை வழங்குவதிலும் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

    * தாய்ப்பால் சுமார் 90 சதவீத நீரால் ஆனது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சுமார் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அல்லது பால் (அ) பழச்சாறு போன்றவற்றை குடிக்க வேண்டும்.

    * தாய்ப்பால் அதிகமாக சுரக்க பச்சை காய்கறிகள், முட்டை, பால், பூண்டு, வெங்காயம், திராட்சை சாறு, கோழி மற்றும் இறைச்சி சூப்களை சாப்பிட வேண்டும்.

    * தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். குழந்தை தூங்கும்போது தாயும் தூங்க முயற்சி செய்ய வேண்டும்.

    * மார்பகங்களில் எப்போதும் குழந்தைக்கு பால் சுரக்கும். குழந்தைக்கு பாலூட்டும்போது மார்பகங்களில் மேலும் பால் அளவு அதிகரிக்கும்.

    * பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 10 நிமிடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    * குழந்தை தூங்கிவிட்டால் மெதுவாக எழுப்ப முயற்சித்து பால் கொடுக்க வேண்டும்.

    * பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    Next Story
    ×