என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள்"

    • விலை உயர்ந்த நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
    • வழக்கு பதிந்து திருடப்பட்ட சிலைகளை போலீசார் தேடிவந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே மேலகா சாக்குடி கிரா மத்தில், புதுச்சேரி இந்து அறநிலை த்துறைக்கு சொந்த மான நாகநா தசுவாமி தேவஸ்தானத்தைச்சேர்ந்த வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இந்த பெருமாள் கோவிலில், கடந்த 1963-ம் ஆண்டு நடைபெற்ற திருட்டின் போது, விலை உயர்ந்த நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து திருடப்பட்ட சிலைகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள 2 சிலைகளையும் மீட்டுதருமாறு, கோவில் நிர்வாகத்தினர், புதுச்சேரி இந்து அறநிலைத்துறை மற்றும் காவல்துறை தலைமை யகத்திற்கு புகார் அளித்தனர். தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி, காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் லெனி ன்பாரதி, செந்தில்குமார், பிரவீன்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம், சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை, இந்து அறநிலை யத்துறைக்கும், காவல்துறை தலைமை யகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நாகையில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
    • அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை வைத்தார்.

    நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழமையும் சிறப்பும் மிக்கது.

    எனவே அது தனித்துவத்துடன் இயங்குவதற்கு ஏற்ப, பாரம்பரிய அரசு கட்டடத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அக்கட்டடத்தை முழுவதுமாக அருங்காட்சியகத்திற்கு ஒதுக்க வேண்டும்.

    நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.

    அவற்றை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நாகப்பட்டினம் பெளத்த சிலைகளை நிரந்தரமாக காட்சிப்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    இது குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.

    • கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை வேண்டும்.
    • பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டு உள்ளது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன், தலைமை கொறடா கோவி. செழியன், ஏடுகள் குழு உறுப்பினர்கள் செல்வம் எம்.எல்.ஏ, பொன்னுசாமி எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கலைத்தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட கைவினை படைப்புகளை பார்வையிட்டு இன்று பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தை ஆய்வு செய்தோம். ஆவின், எரிசக்தி, பூம்புகார் நிலையம், என அனைத்தையும் ஆய்வு செய்தோம்.

    இதில் ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 88 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 57 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு மீதி உள்ள பாலை முனையத்திற்கு அனுப்பப்படுகின்றன.

    பசுக்கள் நல்ல முறையில் பராமரித்து தரமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அருங்காட்சியங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, கைவினை பொருட்களை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன் முன்னிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் சோலை குணசேகரன், மீனவரணி மாவட்ட செயலாளர் ராமநாதன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் வையத்துரை மாரி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், குருசாமி, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன்,முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார்,கோச்சடை ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் யோகராஜ், ஜோதிமுருகன் மற்றும் முத்திருளாண்டி, துதிதிருநாவுக்கரசு, சோலை இளவரசன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், வேல்முருகன், கீழமாத்தூர் தங்கராஜ், குமரேசன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சவர்ணம், சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 சிலைகளையும் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
    • புதுப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடி தொழிலுக்கு சென்று வரும் நிலையில் கடற்கரையோர பகுதியில் கற்சிலை ஒன்று தென்பட்டதை கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

    இதனை எடுத்து மூன்று சிலைகளையும் மீட்ட மீனவர்கள் இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை யினர் விரைந்து சென்று சிலைகளை கைப்பற்றிய நிலையில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் அளித்தனர்.

    இதனை எடுத்து கடற்கரையோரம் மீட்கப்பட்ட இரண்டடி உயரம் உள்ள பெருமாள் கற்சிலை ஒரு அடி உயரமுள்ள பெருமாள் சிலை அதேபோல் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை ஆகிய மூன்று சிலைகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் பாதுகா ப்பாக ஒப்படைத்தனர்.

    தீவு கிராம கடற்கரையோர பகுதியில் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலைகள் எப்படி தீவு கிராம பகுதிக்கு வந்தது என்பது குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

    • மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது.
    • சிதிலம் அடையாமல் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடந்த 8-ந்தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் இருப்பதை கண்டறிந்து தகவல் அளித்ததன் பேரில் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் இருப்பதாக தகவல் அறிந்த வி.ஏ.ஓ. பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள், துவாரபாலகர , சிம்மவாகனி என தெரியவந்தது

    மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து குறிப்பாக இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள்.

    ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

    ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்ற கோணத்திலும் புதுப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது சீர்காழி சட்டநாதர் கோவில்.
    • இங்கு தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
    • தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் கோவிலில் வைத்து பராமரிப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் கடந்த 16-ம் தேதி யாகசாலை பூஜைக்காக மேற்குகோபுர நந்தவனத்தில் பள்ளம் வெட்டியபோது கிடைத்த ௨௨ ஐம்பொன் சுவாமி சிலைகள், 412 முழுமையாகவும், 84உடைந்த நிலையிலும் கிடைத்த தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே பாதுகாப்பு பெட்ட அறையில் வைத்து சீல்வைக்கப்பட்டு இரண்டடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரி மாநில சபாநாயகர் ஆர்.செல்வம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

    மாசிலாமணி சுவாமிகள் நிலையத்தில் தருமபுரம் ஆதீனம் 27}ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

    அவருக்கு கோயில் பிரசாதங்கள், கும்பாபிஷேக பத்திரிக்கை ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கினார். பின்னர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த சபாநாயகர் ஆர்.செல்வம், கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன்சிலைகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனத்துடன் இணைந்து பார்வையிட்டார்.

    பின்னர் திருஞானசம்பந்தர் சந்நிதி கருங்கல் மண்டபமாக அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக அதில் திருஞானசம்பந்தருக்கு உமையம்ம் ஞானப்பால் வழங்குவது போன்று சிறப்பம் செதுக்கப்பட்ட கருங்கள் கல்வெட்டை எடுத்துவைத்து பணிகளை தருமை ஆதீனத்துடன் இணைந்து தொடக்கிவைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.செல்வம் கூறுகையில், சட்டநாதர்சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மூலம் கோயிலின் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு தெரிய வருகிறது. கிடைக்கப்பெற்ற சிலைகள், செப்பேடுகளை பராமரிப்பதற்கும், பரிபாலம் செய்வதற்கும், முழு உரிமையோடு தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    மத்திய அமைச்சர் கிருஷ்ணாரெட்டியின் பிரதிநிதியாக செப்பேடுகள், ஐம்பொன் சிலைகளை பார்வையிட்டோம். கோயில் வளாகத்திலேயே சிலைகள்,செப்பேடுகளை வைத்து வழிபடவும், இவற்றை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் கோயிலில் வைத்து பாரமரிப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்தார்.

    அப்போது பாஜக மாவட்ட தலைவர் க.அகோரம், புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் அருள்முருகன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சரண்ராஜ் உடனிருந்தனர்

    • 10 அடி உயரம் கொண்ட ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை கலைநயத்துடன் உருவாக்கி உள்ளனர்.
    • ஈரோடு மாவட்டம் பாசூரில் புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கு கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவினாசி :

    அவினாசி புது பஸ் நிலையம் பின்புறம் திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வரா சிற்பக் கலைக்கூடம் நடத்தி வருபவர் ஸ்தபதி கன்னியப்பன்.

    இவரது தலைமையில் சரவணகுமார், ரமேஷ் உள்ளிட்ட சிற்பிகள் கடந்த ஒரு மாதமாக கருங்கற்களால் 10 அடி உயரம் கொண்ட ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை கலைநயத்துடன் உருவாக்கி உள்ளனர். இது குறித்து சிற்பி கூறுகையில், "ஈரோடு மாவட்டம் பாசூரில் புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கு கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர். 

    • கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
    • குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    • 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது
    • விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.

    பல்லடம்

    விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம்புதூரில் கடந்த 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து விநாயகர் சிலைகள் தயாரிப்பு குழுவினர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 400 சிலைகள் தயாரித்தோம். இந்த ஆண்டுக்கான சிலைகள் தயாரிப்பு பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.இங்கு இது வரை 150சிலைகள் மட்டுமே வடிவமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.3 அடி முதல் 16 அடி வரையிலான சிலைகள் ரூ.3500 முதல் ரூ.34 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் கிழங்கு மாவு, பேப்பர் தூள் மூலம் தயாரித்து வாட்டர் பெயிண்டிங் அடித்துள்ளோம். விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.

    மேலும் மூலப் பொருட்கள் விலை உயர்வு,தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் விநாயகர் சிலைகள் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்
    • விநாயகர் சதுர்த்தி விழா தற்போது களை கட்ட தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க ப்படும். குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்பட பல்வேறு இந்த அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களிலும், வீடுக ளிலும், கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைக்கப்படும்.

    அகஸ்தீஸ்வரம், ராஜா க்கமங்கலம், தோவாளை, மேல்புறம் உள்பட மாவட்ட த்திலுள்ள 9 ஒன்றியங்க ளிலும் 10,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஒரு அடி முதல் 12 அடி வரை உயரம் உள்ள விநாயகர் சிலைகள் பூஜை க்காக வைக்கப்படுகிறது. அன்ன விநாயகர், தாமரை விநாயகர், மயில் விநாயகர், சிம்ம விநாயகர், ராஜ விநாயகர், கருட விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பூஜை க்கு வைக்கப்படும். தற்போது விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்து மகா சபா சார்பில் தெற்கு சூரங்குடியில் விநா யகர் சிலைகள் தயாரிக்க ப்பட்டு வருகிறது. இதே போல் வில்லுக்குறி பகுதியி லும் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் நிறைவடைந்து வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    விநாயகர் சிலை பிரதி ஷ்டை செய்வதற்கு போலீ சார் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை அறி வித்துள்ளனர். ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிதாக வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்து அமைப்பினர் வேறு சில இடங்களிலும் புதிதாக விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்ய அனுமதி வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து ள்ளனர்.

    இதுதொடர்பாக போலீ சார், அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே கரைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும். புதிதாக வேறு இடங்களில் கரைக்கக்கூடாது. பிறர் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள க்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தொட ர்பாக பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டு விநாயகர் விழாவை உற்சாகமாக வழக்கத்தை விட விமர்சையாக கொண்டாடுவதற்கும் தயாராகி வருகிறார்கள். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா தற்போது களை கட்ட தொடங்கியுள்ளது.

    ×