search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருள்"

    • குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது.
    • இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையின் கேரள அரசு மருத்துவமனை மீண்டும் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது. இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

     

    இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையின் கேரள அரசு மருத்துவமனை மீண்டும் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சாலை விபத்தில் சிக்கிய அந்த நபர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் சிகிச்சையில் நடந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. தனது கையில் மர்மமான பொருளை வைத்து மருத்துவர்கள் தைத்துள்ளதாக அந்த குற்றம் சாட்டியுள்ளார்.

    தனது கையை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்பொழுது அதில் மர்மமான வடிவத்தில் பொருள் ஒன்று இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பபோவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் சமூக அலுவலர் மணிகண்டன், கிஷோர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
    • 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையில மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை அதிரடியாக கல்லடி மாமூடு பகுதியை சேர்ந்த ராஜேஸ் (வயது 40) என்பவர் புகையில விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    உடனே போலீசார் அவரின் வீட்டை சோதனை செய்த போது 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவருக்கு எங்கியிருந்து புகையிலை பாக்கெட் வருகிறது எந்த பகுதியில் விற்பனை செய்து வந்தார் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தாரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் நில அளவை காட்சியரை, சரஸ்வதி மஹால் நூலக காட்சியரை, உலோக கற்சிற்ப காட்சியரை உள்பட 12 காட்சியரைகள் ஏற்படுத்தபட்டு உள்ளது.

    இது தவிர 7டி திரையரங்கம், பறவைகள் பூங்கா, குழந்தைகளை கவரும் ரயில், இசை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சி மற்றும் பட்டறை கூடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த கூடத்தில் மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறை தொடர்ந்து நடத்திட தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உலக பாரம்பரிய தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) மாணவர்களுக்கான ஒரு நாள் கைவினைப் பொருள் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

    தஞ்சையில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறும்.

    இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் 9842455765 மற்றும் 9443267422 என்ற எண்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வதுதான் இந்த பயிற்சியை நோக்கமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
    • உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இதற்கிடையே கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர்தர ரக போதை பொருளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து போதை தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளாவை சேர்ந்த வாலிபர்களும் கல்லூரி மாணவர்களும் சீரகபாடியில் தங்கி இருந்து மொத்தம் பேட்டமையின் என்ற உயர்ரக போதை பொருளை விற்பனை செய்வது தெரிய வந்தது . நேற்று அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலன் கே பிலிப் (23), பி.இ. 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவர் மற்றும் பி.இ. இறுதி ஆண்டு படித்து வரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த சித்தாரப்பட்டியை சேர்ந்த மாணவர் உள்பட 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .

    அப்போது பெங்களூரில் இருந்து உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. கண்ணாடி இழை போன்ற ஒரு கிராம போதை பொருளை கசக்கி பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை போதை இருக்கும் என கூறப்படுகிறது .

    அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்பிலான போதை பொருள் ,நவீன எடை எந்திரம் மற்றும் போதைப்பொருள் டெஸ்டிங் மெஷின் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக இந்த மாணவர்கள் அங்கே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது . தொடர்ந்து 3 பேரிட்மௌம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 3 பேரின் பிண்ணணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? இவர்கள் சேலம் தவிர வேறு எங்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×