என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்"

    • 28 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை பார் ஒன்று உள்ளது. இதன்அருகே மது பாட்டில்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சிலுவை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடை பார் அருகே ஒருவர் மது பாட்டில்களை ரகசியமாக விற்பனைசெய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவரது பெயர்துரைசாமி (வயது 52) என்றும் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 28 குவாட்டர் மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் அதிரடி நடவடிக்கை
    • விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் மதுப்பாட்டில்களை முதியவர் ஒருவர் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த முதியவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொட்டாரம் கிட்டங்கி பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 62) என்பதும் அவர் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளி செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே ஆழ்வார் கோவில் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மைக்கேல் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை கடையின் ஷட்டர்கள் திறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் கடையின் மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே அவர் அங்கு விரைந்து வந்தார்.

    அப்போது கடையில் இருந்து மது பாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் போலீ சுக்கும் டாஸ்மார்க் மேலதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கடையில் இருந்த 2074 மது பாட்டில்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கொள்ளை போன மது பாட்டில்களின் மதிப்பு ரூ4.5 இலட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் கொள்ளையடித்து கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பயணிகளுக்கு மத்தியில் இயற்கையை அளிக்கும் சிலரும் இருப்பது தான் வேதனையாக உள்ளது.

    கோத்தகிரி,

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் சாலையாக இருந்து வருகிறது கோத்தகிரி மேட்டுப்பாளை யம் சாலை. இந்த சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் இயற்கை அழகை ரசித்தவாறே வாகனங்களை இயக்குவது வழக்கம்.

    குறிப்பாக பவானிசாகர் மற்றும் மேட்டுப்பாளையம் காட்சி முனையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்து செல்வதுண்டு.

    ஆனால் இயற்கையை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிக ளுக்கு மத்தியில் இயற்கையை அளிக்கும் சிலரும் இருப்பது தான் வேதனையாக உள்ளது.

    காரணம் இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் குறிப்பிட்ட சில இடங்களில் தங்களின் வாகனங்களை சாலையோ ரம் நிறுத்தி விட்டு மது அருந்து கின்றனர்.

    அவ்வாறு மது அருந்திய பின்னர் பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இவர்கள் மதுபாட்டி ல்களை வீசும் பகுதி யானை வழித்தட மாகவும், மற்ற வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகவு ம் உள்ளது.

    இதனால் யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் அந்த பகுதியில் வர முடியாமல் போய்விடுகி ன்றன.

    இதே போன்று காட்டின் சாலைகளில் மது பாட்டிகள், பாலிதீன் கவர்களை போட்டு விட்டு செல்வதனால் காலப்போ க்கில் வனங்களில் உள்ள வன விலங்குகள் அழியும் நிலையும் காணப்படும்.

    எனவே வன அதிகாரிகள் இது போன்று செயல் படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.அங்குள்ள கருவேலம் மரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு நின்றவரை விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த மருதூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டான் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.அங்குள்ள கருவேலம் மரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு நின்றவரை விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதன் அடிப்படையில் அவரை மருதூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர் புவனகிரி அடுத்த நாலாம் தெத்து கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 43 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுவை மாநில 1726 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
    • வி.சி.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புதுவை மாநில மதுபான பாட்டில்களை இவர் பரங்கிப்பேட்டை பகுதியில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,

    அதன்படி நேற்று நள்ளிரவு நேரத்தில் கரிக்குப்பம் கிராமத்திற்கு சென்ற போலீசார், வி.சி.க. நிர்வாகி சத்தியமூர்த்தி வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 36 பெட்டிகளில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 1726 மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர். இவை அனைத்தும் புதுவையில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் என போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதனை கடத்தி வர பயன்படுத்தபட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்ராஜாராம், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். புதுவையில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணை செயலாளர் சத்யமூர்த்தி மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய சத்தியமூர்த்தியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
    • மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது. தெரிய வந்தது.

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்அந்தியூர் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் மூலக்கடை பள்ளியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது

    இந்த நிலையில் இன்று மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று கடைகளில் மது பாட்டிலை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக அந்தியூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது

    இதனை அடுத்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அப்போதுபள்ளிபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் (52) என்பவர் கைகளில் வைத்துக்கொண்டு மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

    அவரை பிடித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் வைத்திருந்த மது பாட்டலையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்

    • திருமங்கலம் அருகே 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சின்னசாமி என்பவரிடம் 200 மது பாட்டில்கள் இருந்தன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாகைக்குளம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அறிவழகன் என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 135 மது பாட்டில்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த சின்னசாமி என்பவரிடம் 200 மது பாட்டில்கள் இருந்தன.

    மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில்கள் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
    • கீழக்குயில்குடி சமணர்மலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் கீழக்குயில்குடி சமணர்மலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து சோதனை செய்ததில் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த கீழக்குயில்குடியை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்த 40 மது பாட்டில்கள், விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. முருகனிடம் மதுபாட்டில்களை வாங்கி வருமாறு கூறிய அமிர்த வள்ளி (52) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • முருகன் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவுபடி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிறுவத்தூர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் (வயது 47) அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் முருகனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • சதீஷ்குமார் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருபாலபந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு அந்தோணி முத்து உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாடாம் பூண்டி கூட்டுச்சாலை அருகே சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சதீஷ்குமார் (வயது 35) மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 270 மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில் மற்றும் மது பாட்டில் கடத்துவதற்கு பயன்படுத்திய டாட்டா ஏ.சி.வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டார்.
    • மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆசிர்வாதம் (வயது 44) என்பவர் தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல் பெரியமாமாட்டு பஸ் நிறுத்தம் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அங்கிருந்த 17 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (35) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×