என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத யாத்திரை"

    • கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு, நேற்று முன்தினம் ராகுல்காந்தியின் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது.
    • கன்னியாகுமரி முதல் டெல்லி செங்கோட்டை வரை 108 நாட்களில் 49 மாவட்டங்கள் வழியாக 3 ஆயிரத்து 122 கி.மீ. தூரம் கடந்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு, நேற்று முன்தினம் ராகுல்காந்தியின் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது. டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்துக்குள் நுழைந்தது. பாக்பட் அருகே மாவிகளன் கிராமத்தில் யாத்திரை முடித்துக் கொள்ளப்பட்டது.

    அதையடுத்து, ராகுல்காந்தியும், பிரியங்காவும் டெல்லி திரும்பினார்கள். நேற்று அவர்கள் டெல்லியில் இருந்து மாவிகளனுக்கு வந்து சேர்ந்தனர். உத்தரபிரதேசத்தில் 2-வது நாள் யாத்திரை அங்கிருந்து தொடங்கியது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மாநில காங்கிரஸ் தலைவர் பிரிஜ்லால் காப்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ராகுல்காந்தி வழக்கம்போல், வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து பங்கேற்றார். குபா கோவிலை அடைந்தவுடன், காலைநேர பயணம் முடிவடைந்தது. மாலையில் அங்கிருந்து பராட் நகர்வரை நடந்தது.ராகுல்காந்தி 3 தடவை எம்.பி.யாக இருந்த அமேதி தொகுதியை சேர்ந்த 1,400 காங்கிரஸ் தொண்டர்கள், வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து நடந்து சென்றனர்.

    இந்த நடைபயணம், கன்னியாகுமரி முதல் டெல்லி செங்கோட்டை வரை 108 நாட்களில் 49 மாவட்டங்கள் வழியாக 3 ஆயிரத்து 122 கி.மீ. தூரம் கடந்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    • ராகுல் காந்திக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • சி.ஆர்.பி.எப். மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் 'ஒற்றுமை பயணம்' பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது அவர் ஜம்மு- காஷ்மீரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    குடியரசு தின விழா மற்றும் ராகுல்காந்தி பாத யாத்திரையையொட்டி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக ராகுல் காந்தி செல்லும் வழி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    ஆனால் இந்த பாதுகாப்பையும் மீறி ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் நேற்று காலை இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

    இந்தநிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் பாத யாத்திரை இன்று காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

    சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு- பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஹிராநகர் பகுதியில் இருந்து அவர் பாதயாத்திரை சென்றார். இதனால் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    தேசிய கொடியை கையில் ஏந்தி ராகுல்காந்தி தனது ஆதரவாளர்களுடன், பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    அவர் சம்பா மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியை கடந்து செல்லும்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கூறும்போது:-

    ராகுல் காந்திக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சி.ஆர்.பி.எப். மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒற்றுமை பயணம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.
    • அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.

    அவருக்கு போட்டியாக பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமும் பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்துள்ளார்.

    நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் இருந்தபோது உள்கட்சி விவகாரங்கள் பற்றி கடுமையாக விமர்சித்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்தார். எனது 8 வருட கடின உழைப்பு, பணம், தனிப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு தூக்கி எறிந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஜனவரி 27-ந் தேதி பாத யாத்திரை புறப்படுவதாகவும் களத்தில் சந்திப்போம் என்றும் கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் அண்ணாமலை திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை தொடங்க போவதாக அறிவித்துள்ளார்.

    இப்போது அவரது பாத யாத்திரைக்கு போட்டியாக காயத்ரியும் தனது பாத யாத்திரையை தொடங்க முடிவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14-ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது.

    ஜனவரி 27-ந் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது "சக்தி யாத்திரையை" ஏப்ரல் 14-ந் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம்.

    அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக்கட்சியின் மாநிலத்தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது.
    • பாதுகாப்பு அளிக்கும்வரை நடைபயணத்தை தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் அறிவித்தது.

    ஜம்மு:

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.

    இதற்கிடையே, காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடைபயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், இதுகுறித்து ஜம்மு போலீசார் கூறுகையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பயணத்தின்போது பங்கிஹாலில் பெருங்கூட்டம் இணைவது குறித்து அமைப்பாளர்கள் எந்த தகவலும் தரவில்லை என விளக்கமளித்தனர்.

    • ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா தாக்குதலில் வீரர்கள் வீரமரணமடைந்த இடத்தில் ராகுல்காந்தி மலர் வைத்து மரியாதை.
    • பாத யாத்திரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றிய பின் யாத்திரை நிறைவடைகிறது.

    கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கிய பாத யாத்திரை தற்போது காஷ்மீரை அடைந்துள்ளது. பாத யாத்திரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றிய பின் யாத்திரை நிறைவடைகிறது.

    இந்நிலையில், பாதயாத்திரை இன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, 40 வீரர்கள் உயிரிழந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா தாக்குதலில் வீரர்கள் வீரமரணமடைந்த இடத்தில் ராகுல்காந்தி மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் லெத்போராவில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நடைபாதையின்போது பிரியங்கா காந்தியும் இணைந்துக் கொண்டார்.

    இடைவேளைக்காக நிறுத்தப்பட்டிருந்த யாத்திரை அவந்திபோராவில் இருந்து மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரை இன்று இரவு பந்தாசௌக்கில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    • 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.
    • நடைபயணம் நிறைவு பிறகு எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார்.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.

    அவரது நடைபயணத்தின்போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின்போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில், ராகுல்காந்தியின் பாத யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை இன்று நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    • பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    தென்காசி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை தென்காசி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய நிலையில் கடையம் பகுதியில் பாதயாத்திரை முடித்துவிட்டு இரவில் தென்காசி கீழப்புலியூரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்ற பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தென்காசி ரெயில்வே மேம்பாலத்தில் பாத யாத்திரை சென்று கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டி க்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களின் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து ஒளிர விட்டவாறு உற்சாகமாக கையசைத்து பாதையாத்திரை மேற்கொண்டனர். இது அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

    • விவசாயி என்பதால் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
    • தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாத யாத்திரை செல்வதாக வாலிபர்கள் கூறினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் வாலிபர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. விவசாயி என்பதால் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி, கோடஹள்ளி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கிராமத்தில் இருந்து, 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாத யாத்திரை செல்வதாக கூறினர்.

    சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள், திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற நிலையில் தற்போது சாம்ராஜ்நகர் மாவட்டம் கோடஹள்ளி கிராமத்தில் இருந்தும் வாலிபர்கள் பாத யாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது.
    • தொடக்க விழா நடக்கும் இடத்தை வேறு பகுதிக்கு காங்கிரஸ் மாற்றி உள்ளது.

    இம்பால்:

    காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார்.

    அதுபோல நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

    அதன்படி மணிப்பூரில் இருந்து மும்பை வரை ராகுல் நடைபயணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாளை ராகுல் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.

    மணிப்பூர் தலைநகா் இம்பாலில் அமைந்துள்ள ஹப்தா காங்ஜிபங் அரசு மைதானத்தில் நடைபயண தொடக்க விழாவை நடத்த காங்கிரஸ் சாா்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து இம்பால் கிழக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

    தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழுவதைத் தவிா்க்கும் வகையில் அரசு, மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளா்களுடன் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் தனது உத்தரவில் கூறி இருந்தார்.

    மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வசதியாக, நடைபயண தொடக்க நிகழ்வில் பங்கேற்கும் நபா்கள் அனைவரின் பெயா் மற்றும் கைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே கலெக்டர் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்' என்றும் அவர் கூறி இருந்தார்.

    இந்த நிலையில், தொடக்க விழா நடக்கும் இடத்தை வேறு பகுதிக்கு காங்கிரஸ் மாற்றி உள்ளது. இது தொடர்பாக மணிப்பூா் மாநில காங்கிரஸ் தலைவா் கெய்ஷம் மேகசந்திரா கூறியதாவது:-

    நடைபயண தொடக்க விழாவை ஹப்தா காங்ஜிபங் அரசு மைதானத்தில் நடத்திக்கொள்ள அனுமதிக்கக்கோரி கடந்த 2-ந் தேதி அரசிடம் அனுமதி கடிதம் சமா்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, மாநில முதல்வா் பிரைன் சிங்கை கடந்த 10-ந் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

    இதன் காரணமாக, கடைசி நேரத்தில் இம்பாலி-லிருந்து 34 கி.மீ. தொலைவுக்கு அப்பால் கோங்ஜோம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் மைதானத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு தவுபால் போலீஸ் துணைக் கண்காணிப்பாளா் நேற்று முன்தினம் இரவு அனுமதி வழங்கினாா். நடைபயணத்தை காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜூன காா்கே கொடியசைத்துத் தொடங்கி வைப்பாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் யாத்திரைக்கான 'தொடக்க விழா நிகழ்விடம் மாறியபோதும், நடைபயண வழித்தடத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

    மணிப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் நடைபயணம், 67 நாட்களில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மும்பையில் வருகிற மாா்ச் 20-ந் தேதி நிறைவடைய உள்ளது.

    • ஜனவரி 18-ந்தேதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தில் குறைந்தது 5 மாவட்டங்கள் வழியாக பயணிப்பார்.
    • இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும்.

    கோஹிமா:

    மணிப்பூர் எல்லையில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள குசாமா கிராமத்திற்கு ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்களுடன் வருகை தந்தார். இந்த யாத்திரையை மணிப்பூர் மாநிலம் தவு பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தனது பயணத்தின்போது, நாகா கோகோ உள்ளிட்ட நாகா பழங்குடி அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தேவாலய அமைப்புகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கிரிடி தியுனுவோ தெரிவித்தார்.

    ஜனவரி 18-ந்தேதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தில் குறைந்தது 5 மாவட்டங்கள் வழியாக பயணிப்பார். இன்று (செவ்வாய்க்கிழமை), விஸ்வேமா கிராமத்தில் இருந்து நாகாலாந்து யாத்திரையைத் தொடங்கும் அவர், தலைநகரை அடைந்ததும், இரண்டாம் உலகப்போர் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்.

    இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும். இது 6,713 கி.மீ தூரம், பெரும்பாலும் பஸ்களில் மட்டுமல்லாமல் நடந்தே பயணித்து, மார்ச் 20 அல்லது 21 அன்று மும்பையில் முடிவடையும்.

    • முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
    • உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.

    இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

    வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

    புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.

    • ராகுல்காந்தி இன்று காலை பீகார் மாநிலம் கிஷன் கஞ்ச் பகுதியில் நடைபயணத்தில் ஈடுபட்டார்.
    • ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்புகின்றன.

    பாட்னா:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2-வது கட்ட பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவர் இன்று காலை பீகார் மாநிலம் கிஷன் கஞ்ச் பகுதியில் நடைபயணத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய கூட்டணி ஆட்சியில் பல்வேறு மதங்கள் மற்றும் ஜாதிகளை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்புகின்றன.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    ×