search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுப்பணி"

    • தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.
    • பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.

    இதனால் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத நிலை நீடித்து வந்தது. ஆகய தாமரைகளை அகற்ற அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் ஆகாயதாமரைகள் அகற்றம் பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், கவுன்சிலர் சுபாஷ், புரவு தலைவர் பேராசிரியர் மகேஷ், தி.மு.க நிர்வாகி தாமரை பிரதாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இலவச பயிற்சி வகுப்புகளும் மற்றும் அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
    • கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது

    கடலூர்:

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் மற்றும் அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு களும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வு வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல்நிலை தேர்விற்கான பாடவாரியான மற்றும் முழு மாதிரி தேர்வுகள் 17- ந்தேதி முதல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இந்த இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தேர்வாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு 9-ந் தேதி முதல் 16-ந் ேததி வரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.குரூப் 1, குரூப் 2 தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கள் இம்மாதிரி தேர்வுகளில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
    • தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    திருநங்கையர்கள் வாழ்வில் முன்னேற தமிழக அரசு திருநங்கையர்கள் நலவாரியம் ஒன்றை அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.

    இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுப்பணி என்றால் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு அலாதியான விருப்பம் இருக்கும் சூழலில், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கையர் சமுதாயத்தில் இருந்து ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திருநங்கை ஸ்ருதி கூறியதாவது:-

    தலையாரிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் வந்துள்ளேன். இது எங்கள் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.

    நான் மேன்மேலும் வளர்ந்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்வேன். திருநங்கைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன். எங்கள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய வேலம்மாள் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவரது பணியை கருணை அடிப்படையில் வழங்குமாறு மகள் சீனியம்மாள் மனு செய்தார். இந்த நிலையில் சீனியம்மாளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் சீனியம்மாளின் மகனிடம் பேசும் அதிகாரி ரூ. 15 ஆயிரம் கொடுத்தால் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதாக கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    கலெக்டர் அலுவலக அதிகாரியே லஞ்சம் கேட்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×