search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வீரர்கள்"

    • இந்தியா இதுவரை 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. நாளையுடன் இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன்.

    இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பாரீசில் இருந்து இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

    துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா மற்றும் பிரனவ், மோனா அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    • கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
    • வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

    இந்திய வீராங்கனை ப்ரித்தி பால் 100 மீ. டி35 ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், 10 மீ. ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கமும் வென்றிருப்பது பெருமைக்குரியது.

    கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இன்று மனு பாகெர் பங்கேற்கிறார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    துப்பாக்கி சுடுதல்:

    பெண்களுக்கான10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று : இளவேனில், ரமிதா ஜிண்டால், பகல் 12 45 மணி.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று : அர்ஜூன் பாபுதா, சந்தீப் சிங், பிற்பகல் 2 45 மணி.

    பெண்களுக்கான10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி: மனு பாகெர், மாலை 3 30 மணி.

    பேட்மிண்டன்:

    பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று : பி.வி.சிந்து (இந்தியா) -பாத்திமா நபாஹா (மாலத்தீவு), பகல் 12.50 மணி.

    ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று : எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) - பாபியன் ரோத் (ஜெர்மனி), இரவு 8 மணி.

    துடுப்பு படகு:

    ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் ரிபிசாஜ் சுற்று : பால்ராஜ் பன்வார், பகல் 1.06 மணி,

    டேபிள் டென்னிஸ்:

    பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று : ஸ்ரீஜா அகுலா (இந்தியா) - கிறிஸ்டினா கால்பெர்க் (சுவீடன்), பிற்பகல் 2 15 மணி.

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று : சரத் கமல் (இந்தியா) - டெனி கொஜூல் (சுலோவேனியா), மாலை 3 மணி.

    பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று : மணிகா பத்ரா (இந்தியா) - அன்னா ஹூரேசி (இங்கிலாந்து), மாலை 4 30 மணி.

    நீச்சல்:

    ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று : ஸ்ரீஹரி நடராஜ் பிற்பகல் 2 30 மணி.

    பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று : தினிதி தேசிங்கு, பிற்பகல் 2 30 மணி.

    டென்னிஸ்:

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று : சுமித் நாகல்-கோரென்டின் மவுடெட் (பிரான்ஸ்), மாலை 3 30 மணி.

    ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று 1 - ரோஹன் போபண்ணா-என் ஸ்ரீராம் பாலாஜி vs கேல் மான்ஃபில்ஸ்/எட்வர்ட் ரோஜர்-வாசெலின் (பிரான்ஸ்) - பிற்பகல் 3 30 மணி.

    குத்துச்சண்டை:

    பெண்கள் 50 கிலோ எடைபிரிவு தொடக்க சுற்று :நிகாத் ஜரீன் (இந்தியா)-மேக்சி கரினா கோட்ஜெர் (ஜெர்மனி), மாலை 3.50 மணி.

    வில்வித்தை:

    பெண்கள் அணிகள் பிரிவு கால்இறுதி : அங்கிதா பகத், தீபிகா குமாரி, பஜன் கவுர் , மாலை 5 45 மணி.

    • பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் ரூ. 8.5 கோடி வழங்கவுள்ளதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம் என்பதை பிசிசிஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    நம் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்! ஜெய் ஹிந்த்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
    • லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது

    டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்களுக்கு நேற்று மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக மரைன் டிரைவில் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை உற்சாகப் படுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது ஊர்வலத்தின்போது மரைன் டிரைவ் சாலை வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அனைவரும் ஒன்றுதிரண்டு விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

    • இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் பெரில் என்ற புயல் அவர்களை மேலும் 2 நாட்கள் பர்பட்டாசில் காக்க வைத்து விட்டது. இதனையடுத்து பர்பட்டாசில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    இந்நிலையில் உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூட திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    பேரணி முடித்தபின் மும்பை வான்கடே மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது. அந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    இருப்பினும், அங்கு சகஜ நிலை திரும்ப தாமதமானதால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் நாளை அதிகாலை டெல்லியில் தரையிறங்கும். வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.


    நாடு திரும்புவதை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உலகக் கோப்பையுடன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் போஸ் கொடுத்தனர்.


    • புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
    • பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

    பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் தங்கினர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    இருப்பினும், அங்கு சகஜ நிலை திரும்ப தாமதமானது. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்தியா அணி நாளை காலை நாடு திரும்புகிறது. அணியுடன் புறப்படும் சிறப்பு விமானம் நாளை அதிகாலை டெல்லியில் தரையிறங்குகிறது.

    பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்பாடு செய்து விமானம் மூலம் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என அனைவரும் நாடு திரும்புகின்றனர்.

    வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளதால் நாளை டெல்லி விமான நிலையத்தில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

    • கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்த நிலையில் அட் லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

     

    பலத்த மழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் முடங்கி உள்ளனர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர்  இந்திய வீரர்கள் ஹில்டன் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

     

     

    இதனால் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே இன்று மாலை 6 மணிக்கு பார்படாஸிலிருந்து விமானம் மூலம் இந்திய அணி கிளம்ப உள்ளது.

    இன்று [ஜூன் 2] ஒரு இரவு பயணத்தின்பின் நாளை [ஜூன் 3] காலை 7.45 மணியளவில் இந்திய அணி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது. எனவே டெல்லி விமான நிலையத்தில் நாளை கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. 

    • பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது.
    • அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்திய அணி வெற்றி பெற்றதும் வீரர்கள் மைதானத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது. அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. 

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

     

    ரோகித்சர்மா மைதானத்தில் குப்புற படுத்து கையால் தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதோடு தேசிய கொடியை தனது கைகளால் நிலை நிறுத்தினார். கோலியும், பாண்ட்யாவும் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவுடன் சந்திப்பு.
    • பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து விளக்கினர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்குபெறுவார்கள். இந்தியா சார்பில் ஏற்கனவே 97 வீரர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், மேலும்,120 தடகள வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என புதிதா பதவியேற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

    மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவுடனான சந்திப்பின் போது, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட்டின் தயார் நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பில், விளையாட்டுத்துறையின் புதிய இணை அமைச்சர் ரக்ஷா காட்சே, விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் மாண்டவியா கூறுகையில், " நான் இன்று முதல் முறையாக ஐஓஏ அதிகாரிகளை சந்தித்தேன். அங்கு அவர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து என்னிடம் விளக்கினர்.

    சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க ஏற்கனவே 97 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 115 முதல் 120 தடகள வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

    • இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர்.
    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இந்திய அணி ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோவை சுப்மன் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் வைரலாக பரவியது.

    அதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கில், உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆகியோர் முகத்தில் வண்ணம் பூசி இருந்தது. பின்னணியில் ராங் பார்சே பாடல் ஒலிக்க, அனைத்து வீரர்களும் ஜாலி மனநிலையில் இருந்தனர்.

    ×