search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 பேர் கைது"

    • தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்ற மது விற்ற 9பேர் கைது செய்தனர்.
    • மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியின்றி மது விற்றவர்களிடம் இருந்து 270 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கம்பைநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாவளவன் மற்றும் போலீசார் மொரப்பூர் சாலையில் உள்ள ஜெயம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகம்படும்படி ஒருவர் கையில் சாக்குமூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் போலீசாரையும் கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    உடனே போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அரூர் அருகே நவலை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ்வரன் (வயது52) என்பவர் அனுதியின்றி சாக்கு மூட்டையில் 30 மதுபாட்டில்களை விற்ப னைக்காக எடுத்து சென்றது தெரியவந்தது. யஉடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று அரூர் போலீஸ் சப்-இன்ஸ்–பெக்டர் நாகராஜூக்கு பேரேரி கிராமத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தபோது, பேரேரி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (32) என்பவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அனுமதியின்றி விற்பனை செய்ததும், மேலும் அதிக போதை வருவதற்காக ஊமத்தங்காய் சாறை பிழிந்து கலந்து இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று பொம்மிடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியில் உள்ள வினோ பாஜி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (45) என்பவர் மதுபாட்டில்கள் விற்றதும், அதில் ஊமத்தங்காயை சாறு பிழிந்து கலந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை செய்ததில் பாலக்கோட்டில் ஒருவரும், மற்ற இடங்களில் 5 பேரும் என மாவட்டம் முழுவதும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மொத்தம் 270 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது.
    • வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீசார் சோதனையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகணேஷ் (21), சையத் இப்ராஹிம் (26), ரேணுகா (29), மணி (21), தனபாலன் (20), வினோத் பாண்டியன் (23), ரதின் (20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (31) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வரப்பாளையம், கடத்தூர், ஈரோடு டவுண், கோபி போலீசார் அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட சரகங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சட்ட விரோத மாக மது விற்றுகொண்டி ருந்த பெரிய சோமூர் ஆனந்தன் (49), ஈரோடு மாரப்பன் தெரு பூங்கோதை (38), சிங்கம்பேட்டை சரவ ணன் (58),

    அம்மாபேட்டை சுப்பிரமணி (60), தர்மபுரியை சேர்ந்த அகிலன் (30), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கௌரி சங்கர் (37), ராயர்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்த 32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு இடையூராக மது அருந்தி கொண்டிருந்த கோபி பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (25), தமிழ ரசு (23) ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிங்காரப்பேட்டை, பேரிகை, ஓசூர் டவுன், அட்கோ, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சந்து கடைகள் மற்றும் பீடா கடைகளில் சோதனை செய்தனர்.
    • கல்லாவி சங்கர் (44), சிங்காரப்பேட்டை பாரதி (45), மத்தூர் ஜெயக்குமார் (40) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட போலீசார் கிருஷ்ணகிரி, மத்தூர், கல்லாவி, சிங்காரப்பேட்டை, பேரிகை, ஓசூர் டவுன், அட்கோ, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சந்து கடைகள் மற்றும் பீடா கடைகளில் சோதனை செய்தனர்.

    இதில், கெலமங்கலத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது51), ஓசூர் அட்கோ பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (36), பேரிகையைச் சேர்ந்த முரளி (33), பாகலூரைச் சேர்ந்த பாரதி (30), ஓசூர் டவுன் சந்தியா (35), சாமல்பட்டி சினிவாசன் (60), கல்லாவி சங்கர் (44), சிங்காரப்பேட்டை பாரதி (45), மத்தூர் ஜெயக்குமார் (40) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஹான்ஸ், பான்பாராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    • அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆங்காங்கே வாகன சோதனை, ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் கோபி உள் கோட்டம் மற்றும் ஈரோடு டவுன் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன், கோபி, வெள்ளி த்திருப்பூர், பங்களாபுதூர், அந்தியூர், கடத்தூர், மலையம் பாளையம், சத்தியமங்கலம் போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறு கிறதா? என்பதை கண்காணி க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மதுவிலக்கு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இ.வி.கே. சம்பத் சாலை, மூலப்பட்டறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுரை, மேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (45) என்பதும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிட மிருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சூரம்பட்டி மலைய ம்பாளையம், சிறுவலூர் என மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
    • அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி ஆதிபரா சக்தி கோவில் அருகே செயல்படாமல் உள்ள தனியார் நூல்மில் குடோனில் சூதாட்டம் நடைபெறுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவயிடம் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த இம்தியாஸ், தனசேகர், அமீர், ஜான் தேவராஜ், கண்ணன், கோகுல், ராஜேஷ்குமார், சசிகுமார் ஆகிய 8 பேர் என்பதும், இவர்களை சூதாட மில் காவலாளி பிரகாஷ் அனுமதித்ததும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், 10 செல்போன்கள், 4 மோட்டார்சைக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், பகலில் மரவள்ளி சிப்ஸ் விற்கும் தள்ளுவண்டி கடையும் நடத்தி வந்தார்.
    • பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி அடுத்த சின்னக்குயில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்ப டுவதாக கோவை மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் சிறப்பு படையினர் பாப்பம்பட்டி அடுத்த திருமுருகன் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்தனர்.

    அங்கு மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் துரத்தி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த சிவக்குமார்(39), சவுரிபாளையத்தை சேர்ந்த சுதாகரன் (42), இருகூர் பூங்கா நகரை சேர்ந்த செல்வகுமார்(45), செலக்கரைசலை சேர்ந்த குருநாதன் (49) என்பதும், விற்பனைக்காக அங்கு குட்காவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1.5 டன் எடையுள்ள குட்கா, கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இதில் கைதான செல்வகுமார் இருகூரில் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், பகலில் மரவள்ளி சிப்ஸ் விற்கும் தள்ளுவண்டி கடையும் நடத்தி வந்தார். இவரை ஆசை வார்த்தை கூறி குட்கா விற்பனையில் ஈடுபடுத்தி உள்ளனர். இவர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், அவரது மனைவி தனது மகனுடன் போலீஸ் நிலையத்தில் வந்து அழுதார்.

    துடியலூர் போலீசாருக்கு வெள்ளக்கிணறு குளம் அருகே சில கல்லூரி மாணவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பதாக ரகசிய தகவல் வந்தது. போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கல்லூரி மாணவர்கள் கோட்டையாம்பாளை யத்தை சேர்ந்த ரவிந்தரன்(21), கீரநத்தத்தை சேர்ந்த நந்தகுமார் (22), சரவணம்பட்டியை சேர்ந்த சதீஸ்வரன் (19), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அக்‌ஷய்குமார் (22), கோவில்பாளையத்தை சேர்ந்த தினேஸ்வரன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கல்லூரி மாணவர்களுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து கஞ்சாவை சப்ளை செய்யும் முகேஷ் பட்டேல் (23) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.  

    • சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    கரூர்

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் அழகுராம், சட்டம் -ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர், உதயகுமார் மற்றும் போலீசார், கரூர் டவுன், வாங்கல், வேலாயுதம் பாளையம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அப்பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ராமசாமி, சிதம்பரம், செந்தில்குமார், ராஜ சேகர், தமிழரசன், ரமேஷ், அஜித் குமார், ரவி, ஜோதிமுருகன், ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிட மிருந்து, 158 மதுபாட்டில்களை போலீசார் பறி முதல் செய்தனர்.

    • புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.
    • 1,380 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது, பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஹூசைன், 31, சவுகத்துல்லா, 48, காவேரிப்பட்டணம் கனகராஜ், 42, குண்டியல்நத்தம் சீனிவாச கவுடா, 70, ஊத்தங்கரை ரவி, 46, சிவம்பட்டி சங்கர், 55, சாமல்பட்டி மகபூப் ஜான், 72, கல்லாவி சந்திரா, 50, சிங்காரப்பேட்டை காதர் உசேன், 63, ஆகிய, 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 1,380 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் 129 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவு பேரில் மாவட்டம் முழுவதும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த அதிரடி சோதனை யில் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு ட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்கப்படுகிறதா? என சோதனையிட்டனர்.

    அப்போது வெள்ளோடு அடுத்த ஞானிபாளையம், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் என மொத்தம் 129 பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் பங்களாபுதூர், சென்னி மலை, அம்மாபேட்டை, வீரப்பன்சத்திரம், தாலுகா, சூரம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ப னைக்கு வைத்திருந்ததாக மாவட்டம் முழுவதும் 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×