search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து பெட்டகம்"

    • 1,182 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.
    • இதில் 18,677 மாணவி களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரணி பள்ளியில் கர்ப் பிணிகள், மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங் கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி னார்.

    பின்னர், அவர் பேசியதாவது:-

    இரும்புப் பெண்மணி திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை மூலம் ஊட்டச்சத்து பெட்ட கங்கள் வழங்கப்பட்ட2-இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் 43,755 வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 18,677 மாணவி களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப் பட்டது. ரத்தசோகை குறை பாடுள்ளவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டது. தீவிர ரத்தசோகை உள்ள 1,182 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக திருச்சுழி தொகுதியில் உள்ள 18 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவிகள், 7 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதைப் போல மாவட்டத்தின் மற்ற வட்டாரங்களில் தீவிர ரத்தசோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட கத்தினை பெற்றோர்கள் மூலம் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்களில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரு குழந்தைக்கு மாதந்தோறும் ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப் படும். 3-வது மாத முடிவில் மதிப்பீடு செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். எனவே இரும்பு சத்து குறைபாட்டை போக்க தற்போது வழங்கப் பட்டு வரும் மாத்திரைகள் ஊட்டச்சத்து பொருட்க ளோடு, அன்றாட உணவில் சமச்சீரான ஊட்டச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொண்டு வரும் பட்சத்தில் ரத்த சோகை குறைபாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய நகர் நல மையத்தில் செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் சீதாராமன் முன்னிலை வகித்தார். அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மரம் வளா்ப்பு சேவை பிரிவு மாவட்ட தலைவா் ராஜகுலசேகர பாண்டியன் கர்ப்பிணி பெண்களுக்கு ஆப்பிள், ஆரஞ்ச், உலர்திராட்சை, பிஸ்தா, பாதாம்பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி வாழ்த்தி பேசினார். ஊட்டச்சத்து பெட்டகத்திற்கான நிதிஉதவியை சங்கத்தின் குடும்ப தலைவா் சதீஷ் என்ற லெட்சுமணன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பட்டயத்தலைவா் எம்.எஸ்.சரவணன், முன்னாள் தலைவா் திருமலைக்குமார், முன்னாள் செயலா் அபுஅண்ணாவி, உறுப்பினா் தேன்ராஜ் காதர்மைதீன், செவிலியா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் ரோட்டரி சங்க பட்டய தலைவர் எஸ்.ரகுநாதன் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர் வெங்கடசுப்பு தலைமையில், செயலாளர் அருண்குமார் முன்னிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் ரோட்டரி சங்க பட்டய தலைவர் எஸ்.ரகுநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவது, மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்குப் சத்தான ஊட்டச்சத்து வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்

    வேலூர் மாவட்டத்தில் முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 215 குழந்தை களின் தாய்மார்களுக்கு 430 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1206 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1206 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மொத்தம் 1636 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1027 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட முழுவதும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க படுகிறது.

    • குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • முகாமை கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து, குழந்தைகள் மற்றும் தாயர்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்வரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழக முதல்&அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களில் பயனடையும் பயனாளிகளில், மிக கடுமையான ஊட்டச்சத்து குறையுள்ள 939 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா 2 ஊட்டசத்து பெட்டகம் என 1,878 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,485 குழ்நதைகளின் தாய்மார்களுக்கு தலா ஒரு ஊட்டசத்து பெட்டகமும் என மொத்தம் 3,363 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது.மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு, அதாவது 56 நாட்களுக்கு ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதற்காக பசை வடிவிலான ஊட்டசத்து மருந்து வழங்கப்படுகிறது. மேலும், ஊட்டசத்து பெட்டகத்தில் புரோட்டின் பவுடர் 1 கிலோ, பேரிச்சை பழம் 1 கிலோ, இரும்பு சத்து சிரப் 3, டவல் 1, நெய் அரை கிலோ மற்றும் குடற்புழு நீக்கும் மாத்திரை 1 ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும், அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு, ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இங்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களை உட்கொண்டு, தங்களின் ஊட்ட சத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு கண்காட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பாக குழந்தைகளுக்கு வாராந்திர சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை வழங்கினார். 

    • முதல்-அமைச்சரின் சீரிய திட்டம்
    • கலெக்டர் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் ஊட்டச்சத்து குறை பாடுள்ள, பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரையிலான 2,583 குழந்தைகள் மற்றும் 56 நாட்கள் ஊட்டச்சத்து உண வுகளை சாப்பிட பாலூட்டும் தாய்மார்களுக்கும் தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்து பெட்ட கம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, ஊட்டச்சத்து பெட்ட கத்தை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ரா ணிப்பேட்டை மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரை 64 ஆயி ரத்து 599 குழந்தைகள் ஊட் டச்சத்து குறைபாடு உள்ள வர்களாக கணக்கெடுக்கப் பட்டுள்ளனர். இவர்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் 2,583 பேர் என கண்டறியப் பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட தமிழ்நாடு முதல்- அமைச்சரின் சீரிய திட்டமான ஊட்டச் சத் தினை உறுதி செய் திட்டத் தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்படுகிறது.

    இந்த உணவுகள் ஊட்டச் சத்து குறைபாடு கண்டறியப் பட்ட குழந்தைகளுக்கு 56 நாட்கள் தொடர்ந்து கிடைக் கும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங் கப்பட்டு, குழைந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்து ஊட்டச்சத்து உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது.

    கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைக ளின் தாய்மா ர்களுக்கு ஊட் டச்சத்து பெட்டகம் தலா இரண்டு வழங்க ப்படுகிறது. மிதமான ஊட்டச்சத்து குறை பாடுள்ள 1,081 குழந்தைகளுக்கும், அவர்க ளின் தாய்மார்க ளுக்கும் தலா ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்படு கிறது. இந்த பெட்டகத்தில் ஊட்டச்சத்து பவுடர், பேரிச் சம்பழம், நெய், வைட்டமின் டானிக், குடற்புழு நீக்க மாத் திரை, டவல், டம்ளர் ஆகிய வைகள் உள்ளது.

    அதே போன்று 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,960 குழந்தைகளின் ஊட்டச் சத்திற்காக உணவு வழங்கப்ப டுகிறது. ஆகவே தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகளை தவறாமல் சாப்பிடவும், குழந் தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை தொடர்ந்து வழங்கி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அம்சப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
    • விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.தமிழக மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.

    மின்சார சிக்கன வார விழா

    மின்சார சிக்கன வாரவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் உப மின் நிலையத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளாமல் வயிற்றில் உள்ள குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஒரே முதல்வரான மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.

    கருவில் இருக்கும் குழந்தைகள் கூட கருணாநிதியின் மகன் பெயர் சொல்லும் அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆயிரக்கனக்கான ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் இந்த மருத்துவமனை வளர்ச்சிக்கு நான் எப்போதும் உறு துணையாக இருப்பேன் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர் வனராஜ், ஒன்றிய கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவிகள் வழங்கப்பட்டது.
    • 11 பொருட்கள் உள்ளடக்கிய ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகத்தை 15-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி யில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவிகள் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல் தலைமை மருத்துவமனை துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் ராமச்சந்திரன் தலைமையேற்று கருத்துரை யாற்றினார். நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த் நாராயணன், தலைமை செவிலியர் லெட்சுமி, அறக்கட்டளை திட்ட உதவியாளர் சுரேஷ்கு மார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை இயக்குனர் மற்றும் சிறப்பு அழை ப்பாளர்கள், சுண்டல், பாசி பயிறு, முட்டை, நிலக்கடலை பருப்பு உட்பட 11 பொரு ட்கள் உள்ளடக்கிய ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகத்தை 15-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினர். உணவே மருந்தெனும் தலைப்பில் வனம் நேச்சுரல்ஸ் பிரதீப்கு மார், ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரையாற்றினார்.

    ஆத்தூர் அரசு மருத்துவ மனை தொற்று நோய் பிரிவு சார்பாக, செவிலியர் நித்யா மற்றும் சரண்யா ஆகியோர் பயனாளிகளுக்கு ஊட்ட ச்சத்து சிற்றுண்டியை வழங்கினர். காசநோய் பிரிவிலிருந்து கார்த்திகா, ஜாக்குலின் மேரி ஆகியோர் கலந்துகொண்டனர். காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாண்டியராஜன் நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் செய்திருந்தார்.

    பாரத பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காசநோய் பிரிவு 2025-க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கிப் பல்நோக்குப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசும் சீரிய முனைப்போடு காசநோய் இல்லாத தமிழகம் 2025 என்ற இலக்கை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் முனைப்பில் இக்கூட்டமைப்பு தொடர்ச்சி யாக ஊட்டச்சத்து நல உதவிகளை வழங்கி காச நோயாளிகளின் உடல்நலம் மற்றும் சமூக நலம் பேணி வருவது குறிப்பிடத்தக்க செயலாகும்.

    ×