என் மலர்
நீங்கள் தேடியது "புவிசார் குறியீடு"
- வித்தியாசமான ருசியை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
- தூத்துக்குடி முதலூருக்கு வந்து இங்கு தேங்காய்பால் அல்வா செய்து விற்பனை செய்த தொடங்கினார்.
நெல்லை:
உலக அளவில் புகழ் பெற்றது நெல்லை அல்வா. ஆனால் அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் முதலூரில் தயார் செய்யப்படும் மஸ்கோத் அல்வா அதற்கு போட்டியாக பொதுமக்களால் விரும்பப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் தேங்காய்ப் பாலில் செய்யும் அல்வா சிறப்பு பெற்றது. மஸ்கட்டில் இருந்து இலங்கைக்கு சென்றவர்கள் இந்த அல்வாவின் மணத்தை இலங்கைக்குப் பரப்ப, அங்கிருந்து புலம் பெயர்ந்த முதலூர்காரர்கள் நெல்லை, தூத்துக்குடிக்கு இந்த அல்வாவை செய்து கொடுக்க, இன்று முதலூர் மண்ணின் முக்கியத் தொழிலாகி விட்டது மஸ்கோத் அல்வா.
1966-ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது மஸ்கோத் அல்வா வரலாறு. ஜோசப் ஆபிரகாம் என்பவர் தேங்காய்ப்பாலுடன் முந்திரி பருப்பு, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு மஸ்கோத் அல்வா தயார் செய்தார். வித்தியாசமான ருசியை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது பல ஆண்டுகளை கடந்து ஜோசப் ஆபிரகாம் அவரது மகன் ஜெயசீலன் என தொடர்ந்து இந்த அல்வா தொழில் ஈடுபட்ட நிலையில் அவரது பேரன் சைமன் ஐசக் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, எனது தாத்தா தனது மூத்த மகள் தேவகனியுடன் சேர்ந்து இலங்கையில் வசித்த போது இந்த அல்வாவை பற்றி அறிந்தார். பின்னர் அவர் தூத்துக்குடி முதலூருக்கு வந்து இங்கு தேங்காய்பால் அல்வா செய்து விற்பனை செய்த தொடங்கினார். நாளடைவில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இன்று முதலூர் அல்வா என்றால் நாடு முழுவதும் தெரியும் படி மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.
தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏறுப ஆன்லைன் மூலமும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. எனினும் அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கடைசியாக திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அந்த வரிசையில் முதலூர் மஸ்கோத் அல்வாவிற்கும் புவிசார் குறியீடு வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மஸ்கோத் அல்வாவிற்கும் புவிசார் குறியீடு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
- வேறு எந்த வகை வாழைப்ப ழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.
- பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம்.
திருவட்டார் :
கன்னியாகுமரி மாவட்ட த்தில் வாழை விவசாயம் அதிக அளவில் நடை பெறுகிறது. செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோ ட்டை, பேயன், ரஸ்தாளி, சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழை ரகங்கள் பயிரிடப்படு கின்றன. மட்டி வாழை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆரம்ப த்தில் விளைந்த காட்டு ரக வாழை ஆகும். அது மெல்ல மெல்ல நாட்டுப்ப குதிகளுக்கும் பரவியது. மட்டியின் சிறப்பே அதன் ருசியும், மணமும் தான். வேறு எந்த வகை வாழைப்ப ழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.
முன்பு பேச்சிப்பாறை, குலசேகரம், அருமனை உள்ளிட்ட மலைப்பகுதி களில் மட்டுமே மட்டி வாழைக்கு லைகள் அதிகமாக விற்பனைக்கு வரும். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மட்டி வாழைக்குலைகள் அதிகமாக பயிரிடுகி றார்கள். இதனால் எப்போதும் சந்தையில் கிடைக்கும் பழ ரகங்களில் ஒன்றாக மட்டி விளங்குகிறது.
மாவட்டத்தில் நடைபெறும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டி வாழைப்பழமும், முந்திரிப்பருப்பும் தவறாமல் இடம்பெறும். மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல், பொதுவாக மஞ்சள் நிறத்தில் தான் காணப்படும். மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூ டியது.
வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்பு சுவையும். மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட்டத்தில் மட்டிப்பழத்தை குழந்தைக ளுக்கு மிகவும் விரும்பி அளி ப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் முதலில் மட்டி வாழைப்ப ழத்தை நசுக்கி கொடு க்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
மட்டி வாழையை நட்டு 11 முதல் 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யலாம். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோவும் அதற்கு மேலும் எடை இருக்கும். ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும். ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. மட்டிப்பழம் பற்றிய நிகழ்வு ஒன்றும் சரித்திரத்தில் இடம்பெ ற்றுள்ளது.
தற்போது இந்த மட்டி பழத்துக்கு அரசு புவிசார் குறியீடு கொடுத்திருப்பதை தொடர்ந்து அதன் விலை ரூ.160-க்கு விற்பனை ஆகிறது.
- உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மை உள்ள மணலினால் இங்குள்ள பனைகளில் கிடைக்கும் பதனீர் தனிச்சுவையாக இருக்கும்.
- உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் உடன்குடி புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மை உள்ள மணலினால் இங்குள்ள பனைகளில் கிடைக்கும் பதனீர் தனிச்சுவையாக இருக்கும். மேலும் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றிக்கு தனிச்சுவையும், மருத்துவ குணமும் உண்டு. எனவே உலகம் முழுவதும் உடன்குடி பனங்கருப்பட்டிக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது.
தனிச்சிறப்பு கொண்ட இந்த கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும், உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் உள்ள விவசாயிகள், பனைத்தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த அமைப்பினர், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் உடன்குடி வட்டார பனங்கருப்பட்டி, கற்கண்டு தயாரிப்பாளர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவர் சந்ரசேகரன் தலைமையில் செயலாளர் ஷேக்முகமது முன்னிலையில் உடன்குடி மெயின் பஜாரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
இதில் பொன்ஸ்ரீராம், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க நிறுவனர் முகைதீன், வாடாப்பூ, சமூக ஆர்வலர் அசோக் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது
- சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை.
அவிநாசி:
சேவூர் சுற்றுவட்டார பகுதி மழை மறைவு பிரதேசம். இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் முதன்மையான இடம்பிடித்திருப்பது நிலக்கடலை. சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது. பனை மரம் போல் வறட்சியை தாங்கி வளரும் ஒரு உன்னத பயிராக விவசாயிகள் இன்றும் இதனை கருதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடுகோரி இப்பகுதி விவசாயிகள் கடந்த வாரம் அவினாசி வந்த மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
இது குறித்து சேவூர் பகுதி நிலக்கடலை விவசாயிகள் கூறியதாவது:-
சேவூர், குட்டகம், தண்ணீர்பந்தல்பாளையம், போத்தம்பாளையம், தாமரைக்குளம், பாப்பான்குளம், முறியாண்டாம்பாளையம், கானூர், நடுவச்சேரி, வடுகபாளையம், மங்கரசுவலையபாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம் என 30 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை விவசாயம் நடந்து வருகிறது. வறட்சியை தாங்கி வளர்வதால் இப்பகுதி விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இந்த நிலக்கடலை சாகுபடி உள்ளது. மழை பெய்யும் போது கிடைக்கும் நிலத்தடி நீர் மற்றும் நீராதாரத்தை கொண்டு விளையும் மானாவாரி பயிர் என்பதால், பலரும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம்.
சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை. குறிப்பாக செம்மண் கலந்த சரளை மண் என்பதால், மண்ணில் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது. அதேபோல் விளையும் கடலைச்செடியிலும் பருப்புகள் மிகவும் உருப்படியாகவும், தரமாகவும் மற்றும் சத்து நிறைந்து ஆரோக்கியமாக இருப்பதால், இங்கு உற்பத்தி செய்யும் கடலைக்கு ஏக மவுசு. அதேபோல் கடலை பருப்பி, கடலை எண்ணெய் மற்றும் வறுகடலைக்கு இந்த கடலைகள் நன்கு சுவையாகவும், இயற்கையாகவும் விளையும் தன்மை கொண்டதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. அதேபோல் சுவையுடன், சத்தும் சேர்ந்திருப்பதால் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
அதேபோல் கடலை எண்ணெய்யை பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணை நிறுவனம் மூலம் மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி, விவசாயிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். மானாவாரி விவசாயம் என்றால் ஆண்டுக்கு ஒருமுறையும், கிணற்று பாசனம் என்றால் ஆண்டுக்கு இருமுறையும் விளைவிப்போம். 100 நாட்கள் தான் இதன் அறுவடை காலம். எங்கள் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் குறுகிய நிலப்பரப்பில் விளையும் சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி, சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சேவூர் நிலக்கடலை இந்த பகுதியில் 4600 ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு கிலோ மூட்டை 60 கிலோ ஆகும். நல்ல தரமான, சுவையான, சத்தான பருப்பாக இங்கு விளையும் கடலை இருப்பதால் பொதுமக்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல்களின் படி, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை நடைபெறுகிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.
சேவூர் கடலை மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் வெகு பிரசித்தம். இதனை நாடும் நுகர்வோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். புவிசார் குறியீடு கோரி விவசாயிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். இதனை அரசு தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
புவனேஸ்வர்:
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த சட்னி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது.
புவிசார் குறியீடு அங்கீகாரமானது அந்தப் பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.
- ஐதராபாத்தின் லாட் பஜாரில் விற்பனை செய்யப்படும் வளையல்.
- தெலுங்கானாவில் புவிசார் குறியீடு பெறும் 17வது பொருள் இதுவாகும்.
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் லாட் பஜாரில் விற்பனை செய்யப்படும் லாக் (Lac) வகை வளையல்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
அதன்படி, தெலுங்கானாவில் புவிசார் குறியீடு பெறும் 17வது பொருள் இதுவாகும்.
- தலையாட்டி பொம்மை, வீணை, நரசிங்க ம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்பட 10 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
- இன்னும் 24 வகையான பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தலையாட்டி பொம்மை, வீணை, நரசிங்க ம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்பட 10 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சி நாளை வரை (21-ந் தேதி) நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். இன்னும் 24 வகையான பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு ள்ளார்.
மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி செய்து வருகிறோம்.
பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பாரம்பரிய புவிசார் குறியீடு பெற்ற பொருட்களையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.