search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்பு துறை"

    • கர்நாடகாவில் சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது.
    • 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி உள்ளது. முதலில் இந்த உணவு வட மாநிலங்களில் மக்களின் விரும்பப்படும் உணவாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த உணவு வட மாநில மக்கள் மூலம் தமிழகத்தில் வந்தது. இதன் மூலம் தமிழகத்திலும் பானி பூரியை மக்களின் விரும்பத்தக்க உணவாக மாறியது.

    பானி பூரி குறித்து தவறான கருத்துக்கள் வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் மக்கள் அதனை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பானி பூரி சாப்பிடும் மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று கர்நாடக உணவு பாதுகாப்புதுறை தெரிவித்தது.

    அந்த வகையில் சாலையோரம் உள்ள பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியது.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் ஆணை பிறபிக்கப்பட்டது.

    • ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகைக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

    இதையடுத்து இன்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மங்கலம் ரோடு, மில்லர் பஸ் நிறுத்தம், போயம்பாளையம், தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 5 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து 5 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வியாபாரியான கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • 24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும் என்று சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.
    • கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற உணவு பொருளாக தட்டு வடை செட் உள்ளது. இந்த தட்டு வடை செட்டை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் விரும்பி சாப்பிடுவதால் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் தொடங்கி இரவு 10 மணி வரை தட்டு வடை செட் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.

    குறிப்பாக இந்த தட்டு வடை செட் கடைகளில் , சாதா தட்டு வடை செட், முறுக்கு செட், மாங்காய் செட், பூண்டு செட், பொறி செட், நொறுக்கல், முட்டை நொறுக்கல், கார பொறி உள்பட பல்வேறு வகையான ருசி மிகுந்த செட்கள் விற்கப்படுகின்றன. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் வாங்கி ருசித்து சாப்பிடுகிறார்கள்.

    இந்த நிலையில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள திரு.வி.க. சாலையில் உள்ள துருவன் தட்டுகடை செட் கடையில் அட்சய திருதியையொட்டி 24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும் என்று சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. தொடர்ந்து அந்த கடையில் கடந்த சில நாட்களாக கோல்ட் பாயில் பேப்பரில் தட்டு வடை செட் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி ருசித்து சாப்பிட்டனர். இதனால் அந்த கடையில் கூட்டம் அலை மோதியது.

    இதனை அறிந்த அந்த பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி பாபுராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அந்த தட்டு வடை செட் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோல்டு பாயில் பேப்பரில் உணவு தர குறியீடுகள் ஏதும் இல்லாமல் தங்க தட்டு வடை செட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும் அவை மனித உணவுக்கு ஏற்றதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோல்ட் பாயில் பேப்பரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    உடனடியாக அதனை பகுப்பாய்வுக்கும் அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவின் அடிப்படையில் தட்டு வடை செட் கடை உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ரெஸ்டாரண்டுகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தாபா, ரெஸ்டாரண்ட்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா 2 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் அந்தியூர் பேரூராட்சி இணைந்து அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    அந்தியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் உணவகங்களில் கலர் பொடி, அர்ச்சனா பவுடர், பழைய இறைச்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு எச்சரிக்கை செய்தனர். அந்தியூரில் 15 உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பழைய சமைத்த உணவு 5 கிலோ, பழைய மீன் 2 கிலோ, கலர் பவுடர், பழைய புரோட்டா உள்ளிட்டவைகளை கைப்பற்றி அளிக்கப்பட்டது.

    மேலும் உணவின் தரம் பற்றி புகார் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு கடைக்கும் ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • 6 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • ரசாயன பொடி கலந்து கோழி இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு பலியானார்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

    தமிழகம் முழுவதும் ஓட்டலில் சோதனை நடந்து வருகிறது. குமரி மாவட்டத் தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் குமார் தலைமையில் மாநகர அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கரநாரா யணன் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை ஆகி யோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் கோர்ட் ரோடு, கேப் ரோடு, ஆசாரிபள்ளம், பார்வதி புரம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. 17 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோத னையில் 6 ஓட்டல்களில் ரசாயன பொடி கலந்து கோழி இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அங்கிருந்த 25 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 6 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஓட்டல் களிலும் உணவு பாது காப்பு துறை அதிகாரி களும், சுகாதாரத்து றையினரும் இன்று 2-வது நாளாக சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். உணவு களை பாது காப்பாக வைக்க வேண்டும். தேவையில்லாத ரசாயன பொடிகளை பயன்ப டுத்தக்கூடாது. கெட்டுப்போன உண வுகளை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

     சேலம்:

    நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அசைவ உணவு சாப்பிட்டு மயங்கிய 43 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அதிரடி சோதனை

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைைமயில் அதிகாரிகள் 33 ஓட்டல்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில் சேலம் அஸ்தம்பட்டி, பேர்லேண்ட்ஸ், புதிய பஸ் நிலையம், சாரதா கல்லூரி ரோடு உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர் எடப்பாடி பகுதிகளிலும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த இந்த சோதனைகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 182 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக 1 0 கடைகளுக்கு விளக்கம் ேகட்டு நோட்டீஸ் அனுப்பி ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடை உரிமையாளர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து இந்த கடைகளுக்கு போலீசார் மூலம் சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் கடை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    2-வது நாளாக சோதனை

    தொடர்ந்து 2-வது நாளாக இன்று சேலம் மாநகரில் ஜங்சன், கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளில் ஓமலூர், தம்மம்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அந்தந்த பகுதி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின் போது அதிக அளவில் தரமற்ற இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனை தொடரும் என்றும், ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் வாலிபர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

    அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார். அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் மேலும் பேக்கரி கடை நிறுவனத்திற்கான சான்றிதழை வைத்து கடையை நடத்தியது தெரியவந்தது.

    மேலும் ஆய்வு செய்யும் போது அழுகிய உருளைக்கிழங்கு, தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்தது.இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் அந்த குடிநீர் பாட்டிலை பறிமுதல் செய்து பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    • சென்னிமலை வட்டார பகுதியில் மாம்பழ குடோன்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரின் அறிவுறுத்துதலின் படியும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த மாம்பழ விற்பனை கடைகள், சிறிய மாம்பழ கடைகள் மற்றும் பழ குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சென்னிமலை வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் ஆய்வு செய்தார்.

    அப்போது ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 30 கிலோ அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும் பழ வியாபாரிகளிடம் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதால் அந்த பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    • மார்ச் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், இளநீர்,ஜூஸ், மோர் குடித்து தாகம் தணிக்கின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் பொதுவாக மே மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தற்போது மார்ச் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரி த்துள்ளது. இதன்படி பல்லடம் பகுதியிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், இளநீர்,ஜூஸ், மோர் போன்றவற்றை குடித்து தாகம் தணிக்கின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள ஜூஸ் கடைகளில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்வோர் உபயோகிக்கும் ஐஸ்கட்டிகள் தரமாக இருக்க வேண்டும். அதிக மான வண்ணங்களை குளிர்பா னத்தில் சேர்க்க க்கூடாது, குளிர்பா னம் தயாரிக்கும் இடம் சுத்த மாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். குளி ர்பான தயாரிப்பு பணியா ளர்கள் சுகாதா ரமான முறையில் இருக்க வேண்டும்.

    பழச்சாறு விற்பனை செய்பவர்கள் தரமான பழங்களை பயன்படுத்தி, அதற்கு தேவையான தண்ணீர், பால், போன்ற பொரு ட்களும் தரமாக இருக்க வேண்டும். பூச்சி, ஈக்கள் புகார் வண்ணம் தடுப்பு வசதிகள் செய்து இருக்க வேண்டும் என அறி வுறுத்தி னார்.

    • உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பேக்க ரிகளில் தயாரிக்க ப்படும் கேக்குகள், காரம் மற்றும் இனிப்பு வகைகளில் அதிகப்ப டியான வண்ண ங்கள் கலக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் குன்னூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருள் தயாரித்த ஒரு பேக்கரியில் இருந்த 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரி கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்க ரியில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் மற்றும் கேக்குகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே வண்ணங்கள் சேர்க்கப்பட வேண்டும். மாறாக அதிகப்படியான அளவு வண்ணங்கள் சேர்க்க ப்படும் பேக்கரி களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அனைத்து உணவு வணிகர்களும் தங்களின் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவுப்பொருட்களை சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். பூச்சிகளை பிடித்து அழிக்கும் எந்திரங்களை தங்கள் வளாகங்களில் பொருத்தியிருக்க வேண்டும். பேப்பர்களில் எண்ணை பலகாரங்களை அடுக்கி வைக்கவோ, பஜ்ஜி போண்டா போன்ற உணவுப்பொருட்களை பேப்பரில் வைத்து பரிமாறவோ கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு வாகனத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ இறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் சுகாதாரமற்ற மற்றும் உண்ணத் தகுதியற்ற இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே (சிக்னல் அருகே) ஒரு வாகனத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளடங்கிய அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தனர். அங்கு புறப்பட தயாராக இருந்த வாகனத்தை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அந்த வாகனத்தில் 800 கிலோ அளவில் கன்றுக்குட்டி இறைச்சி இருப்பதும், அது கெட்டுப்போய் இருந்ததும் சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிய டிரைவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த டிரைவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிடிபட்ட இறைச்சி கெட்டுப் போய் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. இந்த இறைச்சி நகரின் எந்தெந்த பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ இறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் தெரியவரும் பட்சத்தில் 9444042322 என்ற எண்ணில் உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்' என்றனர்.

    கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வேப்பேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×