என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீவிர சோதனை"
- தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
- போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
- அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் அடுத்த கண்ணாரபேட்டையில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை 2 பேர் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் கடலூர் பச்சையாங்குப்பம் சேர்ந்த தீனா (வயது 20), கண்ணாரப்பேட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் ராமநத்தம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரையும், கஞ்சாவும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் திட்டக்குடி புலிகரம்பலூர் சேர்ந்த ராஜ்குமார் (34) என்பதும், அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
- ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2-வது நாளாக திருப்பூர் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
- தீவிர சோதனை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.
அதில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மது பாட்டில்களை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த மல்லி (வயது 35), இவரது நண்பர் ராம்மோகன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் சொகுசு கார் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சுதந்திர தின விழா முன்னிட்டு நடவடிக்கை
- போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
ஜோலார்பேட்டை:
நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குறிப்பாக பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரெயில் நிலயங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, உஷாராணி உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று முதல் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிளாட்பாரங்கள், தண்டவாளங்கள் பயணிகளின் இருக்கைகள், உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
- அனைத்து ெரயில்களிலும் தீவிர மோப்ப நாய், மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்தனர்.
விழுப்புரம்:
நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மத்திய மாநில போலீசார் கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையிலான 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ெரயில்வே போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருடன் இணைந்து ெரயில் நிலையத்திலும், அனைத்து கோவில்களில் ஆயுதம் ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதேபோல புதிய, பஸ் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்து பணி செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலையில் மோப்ப நாயுடன் விரைந்து வந்த வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள், விழுப்புரம் ெரயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ெரயில்களிலும் தீவிர மோப்ப நாய், மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்தனர். ெரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் ேசாதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் விழுப்புரம்ெரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
- இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
- பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.
கடலூர்:
பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனை யொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இப்பணியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லியோ மற்றும் பீட் ஆகிய மோப்ப நாய்களுடன் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருவதோடு, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் அந்தந்த ெரயில் நிலையங்களில் ெரயில்வே போலீசார் வெடிகுண்டு கருவிகள் கொண்டு ெரயில் பயணிகள் மற்றும் ெரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.
- ரெயில் நிலைய நுழைவாயில் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர்.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு நாளை மாலை முதல் மிக அதிக அளவில் பயணம் செய்ய உள்ளனர்.
தொலை தூர பயணத்துக்கு பொது மக்கள் ரெயில் பயணங்க ளை அதிக அளவில் தேர்ந்தெடுத்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள் ரெயிலில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாடு அல்லது வணிகரீதியாக ரெயில்களில் யாரேனும் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ரகங்கள் எடுத்து செல்கின்றனரா? என்று போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரெயில் நிலைய நுழைவா யில் பகுதியில் இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணன் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். பட்டாசு ஏதேனும் உள்ளதா? என போலீசார் தீவிரமாக சோ தனை செய்து வருகின்றனர்.
மேலும் ரெயில் நிலையத்தில் வரும் ஒவ்வொரு ரெயில்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை வரும் 24-ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
சோதனையின் போது பயணிகள் பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடி க்கப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- கோவை ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தற்போது இருந்தே சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
கோவை,
கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதையொட்டி ரெயில்களில் பட்டாசுகள், வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்கள் போன்றவற்றை பயணிகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இதையடுத்து, தற்போது இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, ரெயில்களில் பட்டாசுகள், கிப்ட் பாக்ஸ்கள் கொண்டு செல்வதை தடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில்வே போலீசார் சார்பில் ஒரு சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசாரும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் சார்பில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசாரும் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு ரெயில் நிலையத்தில் சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகள் கொண்டு வரும் உடமைகளை நுழைவாயில் அருகே வைத்து ஸ்கேன் செய்து சோதனை செய்து வருகின்றனர். இதனை மீறி பயணிகள் பட்டாசுகளை ரெயிலில் எடுத்து சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள பார்சல் அனுப்பும் பிரிவிலும் போலீசார் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பி வருகின்றனர்.
அதேபோல், ரெயில் நிலைய வளாகம் மற்றும் பிளாட்பாரங்களில் வைக்க ப்பட்டுள்ள பொருட்களை, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள போத்தனூர், வடகோவை, பீளமேடு உள்ளிட்ட பிற ரெயில் நிலையங்களிலும் அந்தந்த பகுதி ரெயில்வே போலீசார், பாதுகாப்புப் படைத்துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை ஆகி வருவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தி உள்ளார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடலூர் கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம், கம்மியம் பேட்டை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சோதனையில் ஈடுபட்டபோது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனையானது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடலூர் எம். புதூர் சேர்ந்த ஏழுமலை (வயது 36), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகர் தீனா என்கின்ற தினகரன் (20) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி (19) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்