என் மலர்
நீங்கள் தேடியது "புதுமைப்பெண் திட்டம்"
- புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
- "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
ஊட்டி
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்க்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கக் கூடிய ஒரு மகத்தான திட்டம் இத்திட்டமாகும்.
நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் முதற்கட்டமாக அரசு கலைக்கல்லூரி ஊட்டி மற்றும் கூடலூர், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவிகள் என மொத்தம் 163 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கி பற்று அட்டைகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
புதுமைப்பெண்கள் திட்டத்தில் பயன் அடைந்த மாணவிகள் கூறியதாவது:-
மாணவி சுகாஷிணி:
எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம். நான் 6 -ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சேலம் ஆட்டயம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தேன்.அதன் பின்னர் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பதற்கான இடம் கிடைத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.
எனக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
. இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும், அவருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவி ஆர்.வர்சினி:
நான் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தற்பொழுது பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறேன். நான் அரசு பள்ளியில் படித்த காரணத்தினால் எனக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் எண்ணிக்கை அதிகமாகும்.
எனது தோழிகளுக்கும் இத்திட்டத்தினை பற்றி எடுத்துக் கூறி உயர்கல்வி கற்க ஊக்கப்படுத்துவேன். பெண்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்பதனை உணர்த்தும் வகையில், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கிய, முதல்-அமைச்சருக்கு நீலகிரி மாவட்ட கல்லூரி மாணவிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
- முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆணையை அமைச்சர் வழங்கினார்.
- திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர்.
பல்லடம் :
அரசுப்பள்ளிகளில் படித்து தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்ட தொடக்க விழா பல்லடம் அருகே அருள்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 க்கான ஆணையை வழங்கி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர். அதில் முதல் கட்டமாக 609 மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மாணவிகளின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு அந்த தொகை அரசால் செலுத்தப்பட்டுவிடும். ஒரு பெண் உயர் கல்வி கற்பதின் மூலம் அக்குடும்பமே முன்னேற்றம் அடையும் என்கிற தொலைநோக்கு சிந்தனையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பெண் கல்வி வளர்ச்சி அடையும், எதிர்கால சமுதாயம் மேம்பாடு அடையும் என்றார்.விழாவில் திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் , பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாவட்ட சமூக நல துறை அலுவலர் அம்பிகா நன்றி கூறினார்.
- புதுமைப்பெண் திட்ட தொடக்க நிகழ்ச்சி தென்காசி இ.சி.ஈ. மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- அரசு கொண்டுவந்திருக்கும் இந்த வாய்ப்பை மாணவ -மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
தென்காசி:
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் நேற்று பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட தொடக்க நிகழ்ச்சி தென்காசி இ.சி.ஈ. மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்து உள்ளார். குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க இயலாத மாணவிகளுக்கு இந்த திட்டம் பேருதவியாக அமையும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவராக இருத்தல் வேண்டும். எனவே பெண் குழந்தைகளின் விருப்பத்தை ஆய்வுகளின்படி அவர்களது மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையில் அரசு கொண்டுவந்திருக்கும் இந்த வாய்ப்பை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ -மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தனுஷ் குமார்எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஷகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதய கிருஷ்ணன்,தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா,தென்காசி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, கடையம் செல்லம்மாள், செங்கோட்டை திருமலை செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் வெங்கட்ராம ரவி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 375 மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டது.
- இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான ஏ.டி.எம். கார்டுகள், புதுமைப்பெண் பெட்டகத்தை வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க திட்டமான புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தொழில் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். எனவே மாணவிகள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் விழா நடந்தது.
- 538 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மதுரை
'தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு, உயிர் கல்வி பயில செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்' என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். இதற்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் செய்தனர். இதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இன்று ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 'புதுமைப்பெண்' தொடக்க விழா, சென்னையில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் முழுவதிலும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது. மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் புதுமைப் பெண் திட்டம் தொடக்க விழா இன்று காலை நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 538 மாணவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி வழங்கி, தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுமைப் பெண் திட்டம் பெண் கல்விக்கான புரட்சிக்கரமான திட்டம்.
- இந்தியா முழுவதும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சென்னை:
சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற "புதுமைப் பெண்" திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும், அதை கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று ஆசிரியர் தினம் என்பதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சமுதாயத்தின் அடிப்படை ஆசிரியர்கள்தான்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் டெல்லி வந்திருந்தபோது டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது, "தமிழ்நாட்டில் இதே போன்று கட்டமைப்புடன் பள்ளிகள் உருவாக்கப்படும்" என்று கூறினார்.
ஆனால் 6 மாதத்துக்குள் இதை இங்கு கொண்டு வந்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். டெல்லியை போல் தகைசால் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டிலும் இன்று தொடங்கப்பட்டு உள்ளன.
புதுமைப் பெண் திட்டம் பெண் கல்விக்கான புரட்சிக்கரமான திட்டம். இந்த திட்டம் மூலம் ஏராளமான மாணவிகள் உயர்கல்வி பயில வழி வகுக்கும்.
தமிழ்நாடு, டெல்லியை போன்று அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களிடம் இருந்து நல்ல விசயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவியர் திறமை இருந்தும் வறுமை காரணமாக தங்கள் படிப்பை கைவிடும் சூழல் உள்ளது.
ஆனால் புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறிதான். எனவே நல்ல, தரமான இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
மத்திய-மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். அரசுப் பள்ளிகளை மூடினால் ஏழை-எளிய குழந்தைகள் கல்வி கற்க எங்கே செல்வார்கள்? அப்படி இருந்தால் நாடு வளராது.
இனி கல்வி சார்ந்த புதிய திட்டங்களை தொடங்கும்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன். நானும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லிக்கு வருமாறு மு.க.ஸ்டாலினை அழைப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்த தகைசால் பள்ளிகள் விவரம் வருமாறு:-
முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, காமராஜ் நகர், சென்னை மாவட்டம் தி.நகர், அசோக் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர், நந்திவரம், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி, வாணியம்பாடி, தருமபுரி மாவட்டம் தருமபுரி, விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், சேலம் மாவட்டம் சேலம் நகரம், குகை, ஈரோடு மாவட்டம் ஈரோடு, நீலகிரி மாவட்டம் கூடலூர், கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி, கரூர் மாவட்டம் குளித்தலை, திருச்சி மாவட்டம் திருச்சிராப்பள்ளி, கடலூர் மாவட்டம் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் மதுரை தெற்கு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், கிருஷ்ணகிரி மாவட்டம்- கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடங்கப்படுகிறது.
மாணவர்களின் திறன்களை வளர்க்கவும், விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை அதிகரிக்கவும், வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்தவும் இந்தப் பள்ளிகள் தளமாக விளங்கும்.
இதே போல் இந்த கல்வியாண்டிற்கு சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோவை, திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தொடங்கப்படுகிறது.
- புதுமைப்பெண் திட்டம் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
- அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முதற்கட்டமாக 304 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏ.டி.எம்கார்டு, வழிகாட்டி கையேடு ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
திண்டுக்கல்:
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்பாட்டில் இருந்த மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், உயர்கல்வி உறுதிதிட்டமாக புதுமைப்பெண் திட்டம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த திட்டம் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 92,297 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1390 மாணவிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா இன்று ஜி.டி.என் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட சமூகநலஅலுவலர் புஷ்பகலா வரவேற்புரையாற்றினார். கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முதற்கட்டமாக 304 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏ.டி.எம்கார்டு, வழிகாட்டி கையேடு ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி, எம்.எல்.ஏ காந்திராஜன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மேயர் இளமதி, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, துைணமேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன்மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், உயர்கல்வியில் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல், பெண்களின் சமூகபொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றிற்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
- "புதுமைப் பெண்" திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகளின் விபரங்கள் கடந்த சில மாதங்களாக கல்லூரிகளின் வாயிலாக சேகரிக்கப்பட்டு வந்தது.
- முதல் கட்டமாக 1 லட்சம் மாணவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1000 உதவித் தொகை இன்று முதல் அனுப்பப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் ஏற்கனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாற்றப்பட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள் உயர்கல்வி அல்லது பட்டயப் படிப்பு, தொழிற்படிப்புகளில் சேரும் போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் "புதுமைப் பெண்" திட்டம் என்றும் இதற்கு பெயரிடப்பட்டது.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கி உள்ளது.
இந்த திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகளின் விபரங்கள் கடந்த சில மாதங்களாக கல்லூரிகளின் வாயிலாக சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி சுமார் 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 1 லட்சம் மாணவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1000 உதவித் தொகை இன்று முதல் அனுப்பப்படுகிறது.
இந்த திட்டம் இன்று தமிழக அரசால் முறைப்படி தொடங்கப்பட்டது.
சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இதற்கான விழா இன்று காலையில் நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "புதுமைப்பெண்" திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
டெல்லியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளை பின்பற்றி அந்த மாடலில் இந்த பள்ளிகளில் வகுப்புகளை நடத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்துக் கொண்டு கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
- கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
- 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.
புதுமைப்பெண் திட்ட தொடக்கவிழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.