என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமண நிகழ்ச்சி"
- தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை பார்ப்பது மகிழ்ச்சி.
- உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சகோதரி திருமண விழா நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மண மக்களை வாழ்த்தி பேசுகையில், என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும்.
நாங்கள் பாராளு மன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம். தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் மனதை வெல்வதும் ,சிந்தனை வெல்வதும் தான் எங்கள் கனவு.
பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக இன்று முடிக்க வேண்டும் என பேராவலில் அவருடைய பிள்ளைகள் நாங்கள் களத்தில் பாய்கின்றோம்.
என் தோளுக்கு துணையாக என் படைக்கு வலிமைமிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மாள் இயங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோல்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
உயர்ந்த லட்சிய நோக்கம் உள்ளது. உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.
- இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி - ஜனாதிபதி இரங்கல்
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 13 பேர் படு காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.
நேற்று (ஜூன் 2) இரவு ராய்கரில் உள்ள பிப்லோடி கிராமத்துக்கு அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்த்துள்ளது. இதில் டிராக்டருக்கு அடியில் பலர் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், ஜேசிபி இயந்திரத்தின் உதவிவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு படுகாயமடைந்த 145 பேரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஒருவர் கூறுகையில், டிராக்டரில் அளவுக்கு அதிகமான நபர்கள் அமர்ந்திருந்தந்தாலும் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாலும் விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமைத்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
- சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.
அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி மைக்கேல் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.
இந்த நிலையில் பூசாரி வைத்திருந்த மைக்கில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது பூசாரி மைக்கை தூக்கி வீசினார்.
மைக் அருகில் இருந்த சீதம்மா என்பவரை மின்சாரம் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆட்டோ மூலம் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இறந்த பெண் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறிது நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் திருமண மண்டபத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது.
- கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 219 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடாசரை நகரில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது ஏழைகளை அவமதிக்கும் செயல் எனக்கூறியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓம்கார் சிங், எந்த விதிமுறைகளின் கீழ் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது? என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஆனால் கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். அந்த மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
அப்போது சில பெண்கள் மாதவிலக்கு பிரச்சினை இருப்பதாக கூறியதால், மருத்துவக்குழுவினரே அந்த பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தியதாகவும், இதில் 4 பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால், அவர்களை திருமணத்துக்கு அனுமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
- திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும்.
- நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் தாத்தா நடனமாடுவதை இன்ஸ்டாகிராம் வீடியோ படம்பிடித்துள்ளது.
நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் 96 வயது தாத்தா உற்சாகமாக நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும். அந்த வகையில் நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் தாத்தா நடனமாடுவதைப் படம்பிடித்துள்ள வீடியோ மக்களின் இதயங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விருந்தாளிகள் இசைக்குழுவின் இசையில் முதியவர் நடனமாடுவதை 76,600 பார்வையாளர்கள் பார்த்து ரசித்து தங்களது லைக்குகளை தெரிவித்துள்ளனர்.
- திருமண நிகழ்ச்சியில் கமல் குமாருக்கும் 12 வயது சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த சிறுவன் பழச்சாறு பாட்டிலை எடுத்து கமல்குமார் தலையில் அடித்தான்.
உத்தரபிரதேச மாநிலம் பெரலி அருகே உள்ள ரத்னா நந்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரி சங்கர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் கமல் குமார் (வயது 11) 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று இவன் பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான். பின்னர் சிறுவர்களுடன் சேர்ந்து நடனமாடினான். அப்போது அவனுக்கும் 12 வயது சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அவனை கமல் குமார் கீழே தள்ளினான். ஆத்திரம் அடைந்த சிறுவன் பழச்சாறு பாட்டிலை எடுத்து கமல்குமார் தலையில் அடித்தான். இதில் அவனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே கமல் குமார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே அவன் இறந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
- திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
- காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்காக வந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்