search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முறைகேடு புகார்"

    • அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது.
    • டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.

    இந்த புகாரை ஏற்றுக்கொண்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை, மத்திய மந்திரி குமாரசாமி, பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் முருகேஷ் நிரானி, சசிகலா ஜோலே, ஜனார்த்தன ரெட்டி உள்பட 4 பேர் மீதான முறைகேடு வழக்கு விசாரணைக்கு லோக் அயுக்தாவுக்கு அனுமதி வழங்குமாறு கவர்னரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

    மேலும் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்தும் குமாரசாமி உள்பட 4 பேர் மீதான முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர அனுமதி வழங்க வலியுறுத்தினர்.

    இதனால் கோபம் அடைந்த கவர்னர், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர லோக்அயுக்தா அனுமதி கேட்டுள்ள விவரங்கள் பற்றி அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர், தன்னிடம் உள்ள வழக்குகளுக்கு லோக்அயுக்தா அனுமதி கோரிய விஷயம் அரசுக்கு எப்படி தெரியும் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நிலையில், பெங்களூருவில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள அர்க்காவதி லே-அவுட் நில முறைகேடு தொடர்பாக 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கெம்பண்ணா ஆணையத்தின் அறிக்கையின் நகலை வழங்கும்படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் சமயத்தில் முதல்-மந்திரியாக சித்தராமையா தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கவர்னர் அடுத்தடுத்து பல்வேறு விஷயங்களுக்கு அறிக்கை வழங்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது. கவர்னர் அனுப்பும் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கக்கூடாது என்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் மந்திரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் கெலாட்டை திரும்ப அழைக்குமாறு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொடர்ந்து கர்நாடக அரசு, கவர்னர் இடையேயான மோதல் விவகாரம் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி மனு அளிக்க வந்தார்.
    • அக்கடவல்லி ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

    இன்று காலை இவர் ஏற்கனவே அளித்த 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில், அக்கடவல்லி ஊராட்சியில் கடந்த 1.5.2011 முதல் 28.4.2021 வரை ரூ.9 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை என பல்வேறு துறை அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் கடந்த 2021-ம் ஆண்டு கடலூர் வந்த முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், எங்கள் பகுதிக்கு விசாரணை நடத்த வந்த அதிகாரிகளும் ஊராட்சியில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. அதனால் இதனை எங்களால் விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.

    அதன் பிறகு தற்போது வரை விசாரணை நடைபெறவில்லை. அதனால் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தாசில்தார் சுந்தரராஜன் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானது.
    • காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கீழ்செட்டி தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன் (வயது 53). இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 2015-17-ம் ஆண்டுகளில் இவர் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றியபோது உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இழப்பீடு மற்றும் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு போலீஸ்) விசாரணை நடத்தினர். அதில் தாசில்தார் சுந்தரராஜன் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானது.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 குழுக்களாக பிரிந்து தாசில்தார் சுந்தரராஜன் வசிக்கக்கூடிய கீழ்செட்டி தெருவில் உள்ள வீடு மற்றும் அரசு ஊழியர் குடியிருப்பு, சுந்தரராஜனுடன் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணியாற்றிய விழுப்புரம் செல்வராஜ் நகரை சேர்ந்த தேவிகா மற்றும் முறைகேடுக்கு இடைத்தரகராக இருந்த வளவனூர் அருகே உள்ள தாதாம்பாளையத்தை சேர்ந்த முருகன் ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    தாசில்தார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய (பொறுப்பு) பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம் உள்பட பல இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. கடந்த வாரம் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 4 பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை தற்காலிக ஊழியர் உள்பட 5 பேருக்கு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 5 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது துணை வேந்தர் மீது போடப்பட்ட வழக்கின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மட்டுமே அந்த அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை வேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு திரண்டனர். கவர்னர் வருவதற்கு முன்பாகவே அங்கு திரண்டிருந்த 156 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30 போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர் வசதி மையம், கணினித்துறை அலுவலகம், தமிழ்துறை அலுவலகம், ஆவணங்கள் பாதுகாக்கும் அலுவலகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் தீனதாயன் யோஜனா கிராமின் கவுசல்யா அலுவலகம் ஆகிய 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் சோதனையை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 14 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமக நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார். இவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானதையடுத்து தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் ராஜ்மோகன்குமார் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெட்டியார்சத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை மேற்கொண்டதில் பல்வேறு குறைபாடுகளும், அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டது கண்டறிய ப்பட்டது.
    • தருமத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊராட்சி செயலாளர் மீது தக்க நடவடிக்ைக எடுக்குமாறு ரெட்டி யார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்திருந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி நிதியில் 1.4.2020 முதல் 30.10.2021 வரை கணக்குகளை ரெட்டியார்சத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை மேற்கொண்டதில் பல்வேறு குறைபாடுகளும், அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டது கண்டறிய ப்பட்டது.

    இதுகுறித்து தருமத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊராட்சி செயலாளர் மீது தக்க நடவடிக்ைக எடுக்குமாறு ரெட்டி யார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இதற்கு உரிய விளக்கம் அளிக்காமல் தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஊராட்சி நிதியில் கடும் குறைபாடுகள் மற்றும் நிதியிழப்புகள் கண்டறியப்பட்ட காரணத்தால் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார த்தின்கீழ் தருமத்துப்பட்டி ஊராட்சியில் அனைத்து கணக்கும் பி.எப்.எம்.எஸ்.களில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரெட்டி யார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், 2-ம் நபர் கையெழுத்திடும் அதிகாரத்தை தருமத்து ப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் தற்காலிகமாக மாற்றம் செய்து ஆணையிட ப்பட்டது. இதற்கான உத்தரவை கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.

    • எரணம்பட்டி ரேசன் கடையில் போடி பொது வினியோக திட்ட சார்பதிவாளர் மற்றும் சங்கத்தின் கள அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பொருட்களின் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறி யப்பட்டன.

    தேனி:

    தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது, உத்தமபாளையம் அருகே ராமகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் எரணம்பட்டி ரேசன் கடையில் போடி பொது வினியோக திட்ட சார்பதிவாளர் முனிராஜா மற்றும் சங்கத்தின் கள அலுவலர் பிரித்விராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பொருட்களின் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறி யப்பட்டன. இதனை தொடர்ந்து ரேசன்கடை விற்பனையாளர் ஈஸ்வரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. மேலும் உத்தம பாளையம் குடிமை ப்பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் முறை கேடுகளில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீரெங்கநாததுரை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீரெங்கநாததுரை. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஆவினுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் நெல்லை ஆவினில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர், தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளர் ஸ்ரீரெங்கநாததுரையை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • இதுநாள் வரை ஒரு சொட்டு குடிநீர்கூட வந்தது இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மத்தூர்,

    மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் பயன்பாட்டில் உள்ள வீடுகளில் தனி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் அளவில் முழுமையாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சாலாமரத்துபட்டி ஊராட்சியில் ரூ.74.85 லட்சம் மதிப்பில் 1122 புதிய வீட்டு குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    குறிப்பாக சாலாமரத்துப்பட்டி, சாலாமரத்துப்பட்டி காலணி பொடார், பாப்ரிகானூர் ஆகிய கிராமங்களுக்கு 15-வது மானிய குழு நிதியிலிருந்து ரூ.29.69 லட்சம் மதிப்பில் போடப்பட்ட 320 வீட்டு குழாய் இணைப்புகள் அனைத்தும் போலியானவை என்றும், பெயரளவிற்கு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு இணைப்புகளை கொடுக்கப்பட்டு நிதி எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

    15-வது மானிய குழு நிதியிலிருந்து போடப்பட்ட வீட்டு குழாய்கள் தரமற்று இருப்பதாகவும், இணைத்து ஒரு வருட காலமாகியும் இதுநாள் வரை ஒரு சொட்டு குடிநீர்கூட வந்தது இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாயில் போதிய குடிநீர் வந்துக்கொண்டிருக்கையில் புதிய இணைப்பு எதற்கு என மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழாய்கள் அமைத்தபின் பரிசோதனை கூட செய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவை முழுவதும் உடைந்து சேதமாகி ஆங்காங்கே பைப்புகள் தொங்கியவாறும், பைப் அமைக்க பயன்படுத்திய தூண்கள் மட்டுமே காட்சி பொருளாக உள்ளது.

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மதியழகனிடம் கேட்டதற்கு, சாலமரத்துப்பட்டி பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழாய்கள் தான் போடப்பட்டது. ஆனால் கிராம மக்கள் வேண்டுமென்றே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் போடப்பட்ட பைப்புகளை பிடுங்கி எரிந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் ஓலைப்பட்டி பகுதியில் உள்ள குழாய்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து இன்னும் இணைப்புகள் வழங்கவில்லை என்றும் உடனடியாக வழங்கி விடுவதாக தெரிவித்தார்.

    இது குறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமியிடம் கேட்டதற்கு, ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து உதவி பொறியாளர் ஜமுனாவிடம் கேட்டதற்கு, நான் பணியில் பொறுப்பேற்ற பிறகு ஜி.ஐ. பைப்புகளும், பித்தளை டேப்-களும் பொருத்தப்பட்டுள்ளது, நான் வருவதற்கு முன்பு நடநத்து பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்தார். எனினும் கடந்த ஓராண்டாக தண்ணீரே வரவில்லை என கேட்டதற்கு, தண்ணீர் வருகிறது என தெரிவித்தார்.

    • பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர் செய்திதுறை இயக்குனர், செயலாளர், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பினார்.
    • செய்தி மக்கள்தொடர்பு அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பி.ஆர்.ஓ அலுவலகத்தில் புகைப்பட கலைஞராக இருப்பவர் ஈஸ்வரன். இவர் செய்திதுறை இயக்குனர், செயலாளர், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

    திண்டுக்கல் பி.ஆர்.ஓ அலுவலகத்தில் வத்தலக்குண்டுவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். இவரும் கணக்கர் செல்வநாயகியும் இணைந்து போலி பில் தயாரித்து புகைப்படம் எடுக்கும் கருவிக்கு உபகரணங்கள் வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். மேலும் பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் புகார் அளிக்கப்பட்டது. அரசு பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து ஈஸ்வரன் தெரிவிக்கையில், செய்திமக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஒரு கணக்குநோட்டு மட்டும் பராமரிக்கப்படுகிறது.

    கொரோனா சான்றிதழை தூக்கி எரிந்துவிட்டு தற்போது தெரியாது என்கின்றனர். மக்களின் வரிபணத்தை வீணடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளேன். இதற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

    இதனிடையே இன்று செய்தி மக்கள்தொடர்பு அலுவலகத்தில் இளையேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களை தவிர யாரையும் அறைக்குள் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து ஆவணங்களும் சோதனை செய்யப்பட்டன. இதன்பின்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.

    ×