என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நுழைவு வாயில்"
- பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
- சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி நேற்று ஒரு மர்ம கார் வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற நுழைவு வாயில் மீது பயங்கரமாக மோதினார்.
இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இது தற்செயலாக நடந்த விபத்தா?அல்லது சதி செயலில் ஈடுபடும் வகையில் அவர் காரை மோதினாரா? என்பது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் வெளியூரில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.
வெள்ளை மாளிகையில் இது போன்ற அத்துமீறல்கள் அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு பராக் ஒபாமா அதிபராக இருந்த போது ராணுவ வீரர் ஒருவர் வெள்ளை மாளிகை புல்வெளி பகுதியில் சட்டைப்பையில் கத்தியுடன் நுழைந்து பரபரப்பாக்கினார்.
இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை வேலியை அளந்த ஒருவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
- பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.
அதே போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியை சின்ன கோடம்பாக்கம் என்று பெயர் பெற்று திகழ்ந்தது.
மேலும் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இருந்தே கோபிசெட்டிபாளையம் பல வரலாற்று சிறப்புகளையும் பெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வரலாற்று சின்னங்களும் கம்பீரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோபி செட்டி பாளையத்தில் கடந்த 1-12-1958-ம் ஆண்டு 45-வது அரசியல் மாநாடு நடை பெற்றது. இதையொட்டி கோபி கிழக்கு பகுதியிலும் (கரட்டூர்), மேற்கு பகுதியிலும் (குடிநீர் மேல்நிலை தொட்டி அருகிலும்) நகராட்சி சார்பாக அப்போதே 2 நுழைவு வாயில்கள் (ஆர்ச்) கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதை அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
அப்போது முதல் ஈரோடு, சத்தியமங்கலம் ரோட்டில் கோபிசெட்டிபாளையம் என வளைவு அமைக்கப்பட்டு தூண்களுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக பொதுமக்களை வரவேற்கும் வகையில் நிலைத்து நின்று வந்தது.
இந்த நிலையில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு கரட்டூர் ஆர்ச் மீது லாரி மோதியதில் அது இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து புதியதாக கிழக்கு பகுதியில் உள்ள ஆர்ச் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில் சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரோடுகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரோடு-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கோபிசெட்டி பாளையம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான நுழைவு வாயில் (ஆர்ச்) ரோடுகள் வரிவாக்கம் பணிக்காக அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று (புதன் கிழமை) இரவு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக எந்திரங்கள் மூலம் பணியாளர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அகற்றினர். இதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.
கோபியின் பெருமையை நிலை நாட்டும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- திருப்பூர் மாவட்டம் காங்கயம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்ககான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்
- பஸ் நிலையம் வரும் பயணிகள் இருசக்கர வாகனத்தில் எப்படி நுழைந்து செல்வது என்று மனக்குமறலுடன் சென்று வருகிறார்கள்.
காங்கயம்:
ருப்பூர் மாவட்டம் காங்கயம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்ககான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் காங்கயம் பஸ் நிலையத்தின் இருபுறமும் சென்னிலை மெயின் ரோடு பிரிவு உள்ளது.
இதில் தினமும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஏனோ, தானோ என்று நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் இருசக்கர வாகனத்தில் எப்படி நுழைந்து செல்வது என்று மனக்குமறலுடன் சென்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.
இதனால் சில நேரம் பஸ்சிற்கு வரும் பயணிகள் அவச அவசரமாக ஓடி வரும்போது அங்கு நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் மீது மோதி கீழே விழும் பரிதாப நிலைமை நீடித்து வருகிறது.
எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் உடனடியாக ஓழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஙகயம் பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காங்கயம் நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
- அவர்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத்துள்ளோம்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். இவர்களில் தனியார் காண்டிராக்ட் ஒப்பந்த தொழிலாளர்கள் 13 பேர் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். என்.எல்.சி. சுரங்கம் -1 பாயிண்ட் நுழைவு வாயில் முன் அவர்கள் உள்ளிருப்பில் ஈடுபட்ட னர். அவர்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத் துள்ளோம். பாதிக்கப்பட்ட எங்க ளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
- நகராட்சி பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கவுன்சிலர் வசந்தன் கோரிக்கை வைத்தார்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், ஆணையாளர் முகமது சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் மாரியப்பன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சுரண்டை பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்தவரும், சுரண்டை நகரில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான எஸ்.வேலாயுத நாடார் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் சுரண்டை பஸ் நிலையத்தில் கலைஞர் படிப்பகம், பொன்ரா மருத்துவமனை அருகில் கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கவுன்சிலர் வசந்தன் பேசு கையில், சுரண்டை 6-வது வார்டு மற்றும் சுரண்டை நகராட்சி பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.கவுன்சிலர் அமுதா சந்திரன் பேசுகையில், கட்டிட அனுமதி நிலுவை இல்லாமல் விரைந்து வழங்க வேண்டும் என்றார்.கவுன்சிலர் வேல்முத்து பேசுகையில், சுரண்டை காமராஜர் மார்க்கெட் அருகில் காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் மற்றும் கடைகளு க்கான உரிம கட்டணங்களை அபராதம் இல்லாமல் வசூலிக்க வேண்டும் அதற்கு இந்த மன்றம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மேற்கண்ட கோரிக்கைகள் மன்றத்தில் விவாதத்திற்கு விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- முன்னாள் மாணவர்கள் கட்டி கொடுத்தனர்
- 70-க்கும் மேற்பட்டோர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்தில் உள்ள 1969-ம் ஆண்டு 1975-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சங்கமம் நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 1975ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்து சந்திப்பு நிகழச்சி நடத்தினார்கள்.
இதில் சுமார் 70-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் இதில் 1975ம் ஆண்டு தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் ஆசிரியைகள் மேடையில் அமர வைத்து கேடயம் வழங்கி சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கவுரவ படுத்தினார்கள்.
மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது சொந்த செலவில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூர் அரசு பள்ளி நுழைவுவாயில் கட்டி கொடுத்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கும் தொடக்கப்பள்ளி உள்ளது.
- நுழைவுவாயில் கதவு இல்லாததால் மிக எளிமையாக குழந்தைகள் சாலைக்கு வெளியே வரமுடியும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கும் தொடக்கப்பள்ளி உள்ளது இதில் 5 வயது முதல் 9வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படித்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்த தொடக்கப் பள்ளியில் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் நுழை வாயில் கேட் இல்லாததால் குழந்தைகளுக்கு பாது காப்புஇல்லாமல் இருக்கிறது. நுழைவாயில் கதவு இல்லாததால் மிக எளிமையாக குழந்தைகள் சாலைக்கு வெளியே வரமுடியும். அப்பொழுது அவ்வழியில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது. வருமுன் காப்போம் என்ற வாசக த்துக்குஏற்றவாறு குழந்தைகளுக்கு விப த்து ஏற்படுவதற்கு முன்னதா கவே நுழை வுவாயிலில் பாதுகா ப்பான கேட் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தை களின் பெற்றோர் கோரி க்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்