என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "படகு போட்டி"
- கோடை விழாவை முன்னிட்டு 2-வது நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.
- ஏற்காட்டில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரம் மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தமிழக அரசு முதன்மை செயலாளர் அபூர்வா நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.
தோட்டக்கலை துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்ட காற்றாலை, பவளப்பாறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்றவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகளிடம் மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்ட் டக், மிக்கி மௌஸ், டாம் அண்ட் ஜெர்ரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று 30,000-க்கும் மேற்பட்ட வண்ணமலர் தட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏற்காட்டில் விளையும் காபி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப சுவைத்து அந்த காபி ரகங்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இக்கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் ஓவியங்கள் உள்ளிட்ட அரிய புகைப்பட கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப் பிராணிகள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி ஏற்காடு படகு இல்ல ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக நேற்று மாலையில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடத்தப்பட்டது. இந்த படகு போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் பிரிவில் முதல் பரிசை சென்னையை சேர்ந்த கரோலின் சில்வியா, கேத்தரின் ஆகியோரும் 2-ம் பரிசை ராசிபுரத்தை சேர்ந்த கஜலட்சுமி, கலைச்செல்வி, 3-ம் பரிசை சேலத்தை சேர்ந்த மலர்கொடி, யாழினி ஆகியோர் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசை சேலத்தை சேர்ந்த பிரவீன், விஸ்வநாதன், 2-ம் பரிசு ராகுல், விக்கி, 3-ம் பரிசை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம், சந்தோஷ் ஆகியோர் பெற்றனர்.
தம்பதியர் பிரிவில் முதல் பரிசை சென்னையை சேர்ந்த பானு-லியாஸ், 2-ம் பரிசை நாமக்கல்லை சேர்ந்த சீனிவாசன்-உஷா தேவி, 3-ம் பரிசை சேலத்தை சேர்ந்த மலர்கொடி-விஜயகுமார் ஆகியோர் தட்டி சென்றனர்.
கோடை விழாவை முன்னிட்டு 2-வது நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இன்று மதியம் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி ஏற்காடு மான்போர்ட் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏற்காட்டில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரம் மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும் இரவில் மழை கொட்டியது. இதனால் ஏற்காடு மிகவும் குளிர்ச்சியான நிலையில் காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குளிர்ந்த காற்றை சுவாசித்தப்படி கோடை விழாவை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.
- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது
- இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.
தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் படகு போடி நடப்பது வழக்கம்.
இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட படகு போட்டி மீண்டும் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 19 சுண்டன் வள்ளங்கள் உள்பட 72 வள்ளங்கள் போட்டியில் பங்கேற்றன.
- போட்டியில் வெற்றி பெற்ற படகுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகு போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி 69-வது நேரு கோப்பை படகுப்போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.
9 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. 19 சுண்டன் வள்ளங்கள் உள்பட 72 வள்ளங்கள் போட்டியில் பங்கேற்றன. வீரர்கள் துடுப்பு போட படகுகள், ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். இதனால் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வேகமாக துடுப்புகளை செலுத்தினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற படகுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராயபுரம்:
காசிமேட்டில், வண்ணாரப்பேட்டை போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காசிமேடு கடலில் படகு போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
இதனை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் இளைய அருணா, போலீஸ் இணை கமிஷனர் ரம்யாபாரதி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
கிரிக்கெட் மற்றும் படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் சிவா, இயக்குனர் விக்னேஷ்ராஜா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி, இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி, ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள் ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
- வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
மாமல்லபுரம்:
கோவளம் கடற்கரையில், அகில இந்திய அளவிலான அலைச்சறுக்கு, மற்றும் பாய்மர படகு சாகச விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நேற்று மாலை தொடங்கியது. இதனை தமிழ்நாடு பாய்மரப் படகு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட பாய்மரப் படகு சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, போட்டியை தொடங்கி வைத்தார். தமிழகம்-பாண்டிச்சேரி கடற்படை அதிகாரி ரவிக்குமார் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள், தமிழக கடலோர காவல்படை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த போட்டியில் ராணுவம், கடற்படையை சேர்ந்த 48 வீரர்கள் உள்பட இந்தியா முழுவதும் இருந்து 15 மாநிலங்களை சேர்ந்த படகுபோட்டி குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக ஓபன், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதேபோல் பார்முலா கைட் போட்டியும், ஓபன் முறையில் நடக்கிறது.
இதில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள் ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
இந்த அலைச்சறுக்கு மற்றும் பாய்மர படகு போட்டி வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை கட்டணமின்றி அனைவரும் கண்டு ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவர் குப்பங்களில் இருந்து தலா 2 படகுகள் வீதம் 46 படகுகள் இப்போட்டியில் கலந்துக் கொண்டன.
- 1000 மீனவர்களுக்கு மீன் பிடி கூடை, பொது மக்களுக்கு வேட்டி, புடவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்போரூர்:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை கோவளத்தில் படகுப்போட்டி நடை பெற்றது. விழாவுக்கு சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப் போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான எல்.இதயவர்மன் வரவேற்றார்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவர் குப்பங்களில் இருந்து தலா 2 படகுகள் வீதம் 46 படகுகள் இப்போட்டியில் கலந்துக் கொண்டன. படகுப் போட்டியின் இறுதிப் போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற கானத்தூர், கோவளம் மற்றும் செம்மஞ்சேரி கிராம மீனவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1000 மீனவர்களுக்கு மீன் பிடி கூடை, பொது மக்களுக்கு வேட்டி, புடவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர். ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீ.ஆ.வைத்தியலிங்கம், வீ.தமிழ்மணி, து.மூர்த்தி, ஆர்.டி.அரசு, மாவட்டக்குழு தலைவர்கள் மனோகரன், செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றியக்குழு துணைத்தலை வர் சத்யா சேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர், செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பா ளர் எல்லப்பன், கோவளம் கிளை தி.மு.க. செயலாளர் அருள்தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாவலூர் மகாலட்சுமி ராஜாராம், படூர் தாரா சுதாகர், முட்டுக்காடு சங்கீதா மயில்வாகனன், கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், கானத்தூர் வள்ளி எட்டியப்பன், சிறுசேரி துணைத் தலைவர் ஏகாம்பரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அருண்குமார், சுரேஷ் மற்றும் தி. மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் நன்றி கூறினார்.
- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தனர்.
- போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரை வரை இன்று கடலில் படகு போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடலில் காற்றும், சீற்றமும் காணப்பட்டதால் படகு போட்டி நடத்த கூடாது என்று கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர். மேலும் கன்னியாகுமரி போலீசாரும் கடற்கரைக்கு சென்று படகு போட்டி நடத்த கூடாது என்று கூறினர்.
ஆனால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தனர். இதனால் போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசாரின் தடையை மீறி கடலில் படகு போட்டி நடந்தது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் உத்தரவை மீறி கடலில் படகு போட்டி நடத்தியது பற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
- 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
- 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன.
புதுச்சேரி:
காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கார்னிவெல்லின் ஒரு பகுதியாக மீனவ கிராமங்களுக்கிடையே படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, காளி குப்பம், மண்டபத்தூர், கீழக்காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன. இப்போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் தொடங்கி வைத்தார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போட்டியில் முதல் இடத்தை காளிகுப்பம் மீனவர்களும், 2-ம் இடத்தை மண்டபத்தூர் மீனவர்களும், 3-ம் இடத்தை கீழக்காசாக்குடி மேடு மீனவர்களும் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற மீனவர்களுக்கு 18-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும் என கலெக்டர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.
- ஆலப்புழாவின் புன்னமட காயலில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
- 2-வது பரிசு நடுப்பாகம் சுண்டன் படகு குழுவிற்கு கிடைத்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஓணப்பண்டிகை காலத்தில் படகு போட்டிகள் நடைபெறும்.
இதில் ஆலப்புழாவின் புன்னமட காயலில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த போட்டியை காண நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதுபோல வெளிநாடுகளில் இருந்தும் இப்போட்டியை காண பலர் வருவதுண்டு.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக நேரு படகு போட்டி நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால் நேரு படகு போட்டிக்கான அறிவிப்பு வெளியானது.
அதன்படி ஆலப்புழாவில் நேற்று பகல் 11 மணிக்கு இந்த போட்டி நடந்தது. இதில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் கலந்து கொண்டன. இந்த போட்டியை அந்தமான், நிகோபார் தீவுகளின் துணை நிலை கவர்னர் தொடங்கி வைத்தார்.
போட்டி தொடங்கிய 4.30.77 நிமிடங்களில் மகாதேவிக்காடு காட்டில் தெக்கத்தில் சுண்டன் பாம்பு படகு குழுவினர் முதல் பரிசை பெற்றனர்.
இக்குழுவினர் இதற்கு முன்பு 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த படகு போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தனர்.
இப்போதும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 3-வது முறையாக நேரு கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். 2-வது பரிசு நடுப்பாகம் சுண்டன் படகு குழுவிற்கு கிடைத்தது.
- இந்த போட்டியில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்றன.
- வெளிநாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
புன்னமடா:
கேரளாவில் நடைபெறும் வருடாந்திர படகுப் போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றது. ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நேற்று 68-வது நேரு கோப்பைக்கான படகுப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை அந்தமான் நிகோபார் தீவு துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்றன. 150 அடி நீளமுள்ள பாம்பு படகு ஒன்று சுமார் 100 துடுப்பு வீரர்களால் இயக்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பள்ளத்துருத்தி படகு சங்கத்தை சேர்ந்த படகு 1.15 கி.மீ.பந்தய தூரத்தை 4.30 நிமிடங்களில் கடந்தது. இதையடுத்து மூன்றாவது முறையாக அந்த சங்கத்தை சேர்ந்த துடுப்பு வீரர்கள் நேரு கோப்பையை கைப்பற்றினர்.
இதையடுத்து அவர்கள் கொண்டாட்டங்கள் ஈடுபட்டனர். வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் இந்த படகு போட்டியை கண்டு ரசித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்