search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகை"

    • புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
    • பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.

    வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

    • பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200, கிரேந்தி ரூ.50, கனகாம்பரம் ரூ.400,

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூ சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, குமாரபுரம், புதியம்புத்தூர், ஆவரைகுளம், ராதாபுரம் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூ, மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, சங்கரன்கோவில், ராஜ பாளையம், கோவில்பட்டி ஆகிய இடத்தில் இருந்து மல்லிகை பூவும், திருக் கண்ணங்குடி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரோந்தி, பட்டர் ரோசும், சேலத்தில் இருந்து அரளி பூவும், தோவாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சம்பங்கி பூ, ரோஸ் கோழி கொண்டை அருகம்புல், தாழம்பூ ஆகியவைகள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து விற்பனையாகி வருகிறது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தோவாளை சந்தையில் ஒரு கிலோ பிச்சி பூ மற்றும் மல்லிகை பூ கிலோ ரூ.1000-க்கும் இன்று விற்பனையானது. அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200, கிரேந்தி ரூ.50, கனகாம்பரம் ரூ.400, துளசி ரூ.30, பச்சை ரூ.7 எனவும், மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை
    • இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதிகளில் இருந்து கேந்திபூக்களும் நெல்லை மாவட்டம் பழவூர் உள்பட பல்வேறு பகுதிக ளில் இருந்து பிச்சி, மல்லிகை பூக்களும் அதி களவு விற்பனைக்கு வருகி றது.

    மேலும் பெங்களூர், ஓசூர், சேலம், சத்தியமங்கலம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி இன்று பூக்கள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது. பூக்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்திருந்தனர்.

    இதனால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியி ருந்தது. சில்லறை வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை பலரும் பூக்களை வாங்கி சென்றனர். இதனால் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை, பிச்சி பூக்களின் விலை வழக்கத்தை விட 2 மடங்கு உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை யானது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தாமரை பூக்கள் விற்பனைக்கு குறைவாக வந்திருந்தது. இதனால் தாமரை பூவின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி ரூ.200, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.100, மஞ்சள்செவந்தி ரூ.170, வெள்ளை செவந்தி ரூ.200, அரளி ரூ.290-க்கு விற்பனை யானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு ஆயுத பூஜையையொட்டி ஏராள மான வியாபாரி களும், பொதுமக்களும் பூக்கள் வாங்க வந்திருந்த தால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • விநாயகர் பூஜைக்காக பூக்களும் அதிக அளவில் விற்பனையாகும்.
    • சிவகாமிபுரம் பூ சந்தையில் பிச்சி பூ-ரூ.1,250-க்கு விற்பனையானது.

    தென்காசி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை யொட்டி முழு முதற் கடவுளான விநாயகருக்கு படையலிட அவல், பொறி உள்ளிட்டவை வாங்குவது வழக்கம். மேலும் விநாயகர் பூஜைக்காக பூக்களும் அதிக அளவில் விற்பனையாகும்.

    இதனையொட்டி தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பூ சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனையானது. பிச்சி பூ-ரூ.1,250, சம்பங்கி-ரூ.350, கேந்தி பூக்கள்-ரூ.40, கோழி கொண்டை-ரூ.50, முல்லை ரூ.1,000, பச்சை கொழுந்து-ரூ.40 என இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வறட்சி காரணமாக தோட்டங்களில் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதற்கு பெரிதும் சிரம் அடைந்தனர்.

    இதனால் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையா னூர், கல்லூரணி, சிவநாடா னூர், முத்து மாலைபுரம், பெத்த நாடார்பட்டி, சாலைப்புதூர், கரிசலூர், ஆலங்குளம், வீரகேர ளம்புதூர், ஆண்டிப்பட்டி, அத்தியூத்து, முத்து கிருஷ்ணபேரி போன்ற பகுதிகளில் பூக்கள் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்பட்டது.

    இதனால் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் பூக்களின் வரத்தும் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாகவே பூக்களின் விலை உயர்ந்துள்ளது எனவும், இன்றும், நாளையும் பூக்களின் விலை மேலும் உயரும் எனவும் வியாபாரிகள் கூறினர்.

    • கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
    • பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலூர், திருவள்ளூர், பெரிய பாளையம், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் பெருமளவு குறைந்துவிட்டது.

    வரத்து குறைவால் கடந்த ஒரு மாதமாகவே பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும். இதனால் கோவில் வழிபாட்டுக்கும் பெண்கள் தலையில் சூடவும் பூக்கள் வாங்குவார்கள்.

    ஆனால் தேவையான அளவுக்கு பூக்கள் வராததால் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. சாமந்தி பூ கிலோ ரூ.220, ரோஜா ரூ.100 முதல் ரூ.120, மல்லிகை கிலோ ரூ.800, சேர் ரூ.250 வரை அதிகரித்துள்ளது.

    பெண்கள் தலையில் சூட விரும்பும் மல்லி விலை உயர்வால் ஒரு முழம் ரூ. 50-க்கு விற்கப்பட்டது.

    சாதாரணமாக இருபது, முப்பது ரூபாய்க்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வைக்கும் பெண்கள் விலை உயர்வை பார்த்து பூ வாங்க முடியாமல் தவித்தனர்.

    இதற்கிடையில் பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது. அந்த பூக்களையும் வாங்கி சூடுகிறார்கள்.

    மல்லிகை பூக்களை தலை நிறைய சூடி மகிழ்ந்தும், அதன் வாசனையை ரசித்தும் மகிழ்ந்த பெண்கள் பிளாஸ்டிக் பூக்களை சூடி பூ வைக்கும் ஆசையை நிறைவேற்றி கொள்வது பரிதாபமானது.

    சாமந்தி பூக்கள் ஐதராபாத்தில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் பெருமளவு பூக்களை அங்கு அனுப்புகிறார்கள். மேலும் எல்லா பூக்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் இன்னும் பூக்கள் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரி எஸ்.பி.எல்.பாண்டியன் கூறினார்.

    • கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
    • இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, துளசி, கோழிபூ போன்ற பல பூக்கள் வந்து விற்பனையாகிறது.
    • சந்தையில் இருந்து தினமும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் கேரள வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை கொள்முதல் செய்கின்றனர்

    கன்னியாகுமரி :

    தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற மலர் சந்தைகளில் ஒன்று குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை ஆகும்.

    இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி குமாரபுரம், புதியம்புத்தூர், ராதாபுரம், மாடநாடார் குடியிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூவும், திண்டுக்கல், மதுரை, மானா மதுரை, கொடை ரோடு, வத்தலகுண்டு, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன. பெங்களூருவில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர்ரோஸ், தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, துளசி, கோழிபூ போன்ற பல பூக்கள் வந்து விற்பனையாகிறது.

    இந்த சந்தையில் இருந்து தினமும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் கேரள வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை கொள்முதல் செய்கின்றனர்.

    தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை சந்தையில் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விலையேற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்துக்கும் பிச்சிப்பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் இன்று விற்பனையானது. மற்ற பூக்களும் விலை உயர்ந்தே காணப்பட்டது.

    • கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.
    • இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம்  (1 கிலோ கணக்கில்) ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர்,

    காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்கு றிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமா பாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருமண முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிக ரிப்பது வழக்கம். கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம்  (1 கிலோ கணக்கில்) வருமாறு:-

    குண்டுமல்லிகை-ரூ.1400, முல்லை- ரூ. 800, ஜாதிமல்லிகை-ரூ.400, காக்கட்டான்ரூ-.320, கலர் காக்கட்டான்- ரூ.280, மலைக்காக்கட்டான்-ரூ.280, அரளி-ரூ. 280, வெள்ளை அரளி-ரூ.280,

    மஞ்சள் அரளி- ரூ.280, செவ்வ ரளி-ரூ. 320, ஐ.செவ்வரளி-ரூ.320, நந்தியாவட்டம்- ரூ.280, சி.நந்திவட்டம்-ரூ.280, சம்மங்கி -ரூ.50, சாதா சம்மங்கி-ரூ.50 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் முகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் சீசன் காரணமாக குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது சீசன் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதி யாக சரிந்துள்ளது. வரும்

    நாட்களில் முகூர்த்த

    தினங்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வரும் போது மீண்டும் பூக்கள் விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 1 கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை
    • ஓணம் பண்டிகை விற்பனை களை கட்டியது

    கன்னியாகுமரி:

    ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

    தமிழக மற்றும் கேரள வியாபாரிகள், பொதுமக்கள் சந்தைக்கு படையெடுத்து வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களின் வருகையை கருத்தில் கொண்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வரவழைக்கப்பட்ட போதி லும், பூக்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

    அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லி கைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. நாளை மறுநாள் நடைெபறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி மக்கள்அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட இருப்பதால் பூக்களுக்கு வரும் நாட்களில் மேலும் அதிக கிராக்கி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தற்போது தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்திற்கும் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும், சேலம்அரளி, சம்பங்கி ஆகியவை கிலோ ரூ.400க்கும், கனகரம்பரம் ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும் விற்கப்ப டுகிறது.

    மற்ற பூக்களும் விலை உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் 150 டன் பூக்கள் விற்பனையாகியுள்ளது.ஓணம் பண்டிகை விழா நாளில் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இதை விட அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் 200 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள்இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ×