என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி தஞ்சம்"

    • காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.

    இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.

    உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.

    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
    • காரமடை அருகே உள்ள தோளம்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடுகபாளைத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் திருப்பூர் மங்கலம் அருகே உள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்த சத்யா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதுஎன முடிவு செய்து மணமகனை தேடி வந்தனர்.

    இது குறித்து இளம்பெண் தனது காதலனிடம் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காரமடை அருகே உள்ள தோளம்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்தனர்.

    திருமணம் செய்து கொண்ட 2 பேரும் பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
    • இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் ஜஜினா (23). இவர் அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்ப வர் மகன் பிரபு என்கிற சக்திவேல் என்பவரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.

    • பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்
    • கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி (வயது 20). அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (21) இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

    சாருமதியின் பெற்றோருக்கு இது தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்து சாருமதி வெளியேறினார்.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து சாருமதி ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்தார். 

    • பேய்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியை சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
    • போலீசார் இரு தரப்பினரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணும், கருங்கடல் பகுதியை சேர்ந்த சாத்தராக் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் கடந்த 8-ம் தேதி மாயமாகினர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சாத்தான்குளம் போலீசார் புகாரை பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் நேற்று மாலை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சாத்தராக் மற்றும் முத்துமாரி தம்பதியினர் வந்தனர். அவர்கள் தங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறினர்.

    இதன் அடிப்படையில் இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்த இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்தின் பேரில் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

    பேய்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியை சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் கடந்த 8-ம் தேதி தங்களது வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளனர். அது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த இருவரும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். உடனே போலீசார் இரு தரப்பினரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருவரும் மேஜர் என்பதால் சாத்தான்குளம் போலீசார் அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    • பூபதி (வயது 23) அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பூபதி (வயது 23) அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் வேலை பார்த்து வருகிறார். பக்கத்து ஊரான செட்டியாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்.இவரது மகள் சிம்மாசினி (21). இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர். இருவர்கள் இருவரும் கடந்த 1-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் உள்ள ஒரு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுநேற்று பாதுகாப்பு கேட்டு வேலகவுண்டம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசிய போலீசார் திருமணம் செய்து கொண்ட இருவரும் மேஜர் என்பதால் சிம்மாஷினியை பூபதியுடன் அனுப்பி வைத்தனர்.

    • பிரவீன்( வயது 23). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
    • மீனாவுக்கும் பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நல்லகுமரன்பாளையத்தை சேர்ந்த ரமேஷ். இவரது மகன் பிரவீன்( வயது 23). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். அப்போது, பரமத்திவேலூர் அருகே நன்செய் இடை யாறு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் மீனா( 28 ) என்பவர், கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

    இதில், மீனாவுக்கும் பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 8-ந் தேதி திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வேலகவுண்டன்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர்கள், தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு இருப்பதால், பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், காதலன் வயதை விட, காதலியின் வயது அதிகம் என்பதால் பெற்றோர் அவர்களை ஏற்க மறுத்தனர். இருவரும் திருமண வயதில் இருப்பதால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், மேலும் காதல் ஜோடியை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது எனக் கூறியும் பெற்றோர்களை அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • காதல் ஜோடி பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு, ஏப். 9-

    கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு ஸ்ரீ ராமபுரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் தினேஷ்குமார் (23). பி.காம் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    திருப்பூர் மாவட்டம் கம்பால குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் கோவர்ஷினி (20). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் தினேஷ்குமாரும், கோவர்ஷினியும் கோபி பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இரு விட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி இன்று காலை பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நேரடியாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார், கோவர்ஷினி தஞ்சம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
    • இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கோவிந்தசாமியின் சொந்த ஊரான சொரக்காப்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெங்களுரு காவல் நிலையத்தில் தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதையறிந்த ஐஸ்வர்யா மற்றும் கோவிந்தசாமி இருவரும் நேற்று மாலை தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஏலாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன். இவ ரது மகன் விக்ரம் (வயது 22), அந்தப்பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், மல்லபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் சினேகாவும் (20) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு சினேகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சினேகா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் பகுதியில் சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பெண் வீட்டார் வரவில்லை. அதைத்தொடர்ந்து விக்ரம் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத் தனர்.

    • வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.
    • பெற்றோருடன் செல்ல மறுத்து தனது காதல் கணவருடன் செல்வதாக தெரிவித்தார்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் காவியா (வயது19). இவர் ஏரியூர் தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ விலங்கியல் இரண்டா மாண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த ஞாயிற்று க்கிழமை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது தந்தை சந்திரன் ஏரியூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன காவி யாவைத் தேடி வந்தனர்.

    இந்நிலையில் கல்லூரி மாணவி காவியா, அதே கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாமாண்டு படித்து வரும் ஏரியூர் அருகே உள்ள காணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் மகனான கண்ணன் (23) என்பவரை காதலித்து வந்ததாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ள காவியாவின் பெற்றோர் சம்மதிக்க வில்லை என்பதால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி நேற்று ஏரியூர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

    காவியா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து தனது காதல் கணவருடன் செல்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஏரியூர் போலீசார் காவியாவை அவரது கணவர் கண்ண னுடன் அனுப்பி வைத்தனர்.

    ஏரியூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவனும் மாணவியும், காதல் திருமணம் செய்து கொண்டு, ஏரியூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது மகள் ஆர்த்தி (வயது 19). ஆர்த்தியும், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி தண்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காதல்ஜோடி விக்னேஷ் மற்றும் ஆர்த்தி பாதுகாப்பு கேட்டு, ஜோலார்பேட்டை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதன் எடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×