என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்துக்கள்"
- மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.
- இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர்.
இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த கிராமத்தில் சாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.
அதன்படி இன்று இஸ்லாமியர்களால் மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கிராமத்தைக் காட்டிலும் காசவளநாடு கிராம இந்து மக்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் மொகரம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். மொகரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்துக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து பயபக்தியோடு பண்டிகைக்கு தயாராகி வந்தனர்.
அதன்படி இன்று இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அந்த கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத் துண்டை சாத்தி வேண்டிக்கொண்டனர். பின்னர் அங்குள்ள அல்லா கோவிலுக்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதையடுத்து அந்த பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன் அல்லா சாமியை சுமந்து வந்தவர்கள் முதலில் தீ மிதித்தனர். பின்னர் பயபக்தியுடன் மற்ற பொதுமக்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் திருநீறு, எலுமிச்சை பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனால் இன்று அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டது.
இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம் என்றனர்.
- அமாவாசை நாட்களில் இந்துக்கள் ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
- அமாவாசை நாளான இன்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தென்காசி:
தமிழகத்தில் அமாவாசை நாட்களில், இறந்த தங்களின் முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு மற்றும் அருவிக்கரை உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி அமாவாசை நாளும் இன்றே வருவதால் பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவிக்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காலை முதல் அர்ச்சகர்கள் முன்னிலையில் பலர் தர்ப்பணம் செய்து குற்றாலநாதர் கோவில் மற்றும் சன்னதி பகுதிகளில் உள்ள தெய்வங்களை வழிபட்டனர்.
- திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர்.
திருப்பூர் :
கோவில் விவகாரத்தில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்வது போல் கபட நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து முன்னணி சாடியுள்ளது. இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மேல்பதி வீரணம்பட்டி காளி கோவிலிலும் இதே காரணத்தால் பூட்டி சீல் வைத்தனர்.சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர். இந்து சமுதாயம் அனுமதிக்கக்கூடாது. இந்து சமுதாய ஒற்றுமை அவசியம். சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் இந்துக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இரு சமூகங்களிடையே பிரச்னை என்றால் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சமூக பெரியவர்களை அழைத்து சுமூக முடிவு எடுத்திருக்க வேண்டும்.
வேற்று மதத்தினரை அழைத்து சமூக நல்லிணக்கம் மேற்கொள்வதென்பது கபட நாடகம். வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களிலும் பிரச்னை எழும் போது அதிகாரிகள் வழிபாட்டு இடங்களுக்கு உடனடியாக சீல் வைத்துள்ளனரா? அமைதி கூட்டத்துக்கு இந்து அமைப்புகளை, இந்து சமுதாய பெரியவர்களை அழைத்துள்ளனரா?இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், இந்து சமூகத்தில் ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் ஏற்படவும் இந்து முன்னணி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
- இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
திருப்பூர் :
சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் தொடர்ந்து இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை குறைந்தது 3மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாராளுமன்ற சபாநாயகரை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்