search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கி போட்டி"

    • மாநில அளவிலான ஆக்கி போட்டி திருநெல்வேலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • முடிவில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் முன்னாள் உடற்கல்வி ஆசி ரியர் எல்.ராஜூ நினைவுக் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கிடையே யான 3-ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டிகள் 3 நாட் கள் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளைச் சேர்ந்த 12 அணிகள் விளை யாடின.

    இதன் இறுதிப் போட்டி நேற்று மாலை நடந்தது.இதில் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு விடுதி அணியும், பாண்டிய ராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் திருநெல் வேலி அணி 2:0 என்ற கோல் கணக்கில் பாண்டிய ராஜபுரம் அணியை வென்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நி லைப்பள்ளி அணியும்,3-வது இடத்தை ராமநாத புரம் மாவட்ட விளை யாட்டு விடுதி அணியும், நான்காவது இடத்தை திரு நகர் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி அணியும் பெற்றனர்.

    இதன் பரிசளிப்பு விழா விற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன் தலைமை தாங்கினார். எவர்கிரேட் ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், உதவி செயலர்கள் சரவ ணன், ரமேஷ், இணைச்செயலர் வெள்ளைச்சாமி ஆகி யோர்முன்னிலை வகித்த னர்.

    வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து முதல் பரிசிற்கான கோப்பையினை யும், தொழிலதிபர் சீனிவா சன் இரண்டாம் பரிசிற்கான கோப்பையினையும், மாநக ராட்சி அதிகாரி பாஸ்கரன் மூன்றாம் பரிசிற்கான கோப்பையையும் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங் கினர்.

    ஆட்டநாயகன் விருதினை மாவட்ட விளையாட்டு அலு வலர் சிவா வழங்கினார். முடிவில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.

    • மாவட்ட ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் மதுரை அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் தேசியவிளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை பிரிட்டானியா நீயூட்ரிசன் பவுன்டேசன் சார்பாக 14வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாவட்டஅளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 8அணிகள் விளையாடினர்.இதன் இறுதிபோட்டியில் திருநகர் இந்திரகாந்தி மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட திட்டஅலுவலர் ரஞ்சிதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்டஉடற்கல்வி ஆய்வாளர் வினோத் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினார். முடிவில் உடற்கல்விஆசிரியர் ராஜா நன்றிகூறினார். இதன்ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர்கள் செந்தில்குமார்,சுரேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தராஜ், வாஞ்ஜிநாதன், தேவிப்ரியா, பானுப்ரியா, ஜஹீன்கௌசர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
    • 8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்ட ளையின் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறு கிறது.

    3-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கஸ்டம்ஸ் புனே அணியும், இந்தியன் பேங்க் சென்னை அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் கஸ்டம்ஸ் புனே அணி வெற்றி பெற்றது.

    8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

    9-வது லீக் ஆட்டத்தில் ரெயில் வீல் பேக்டரி பெங்களுரு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சென்னை அணியும், 10-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க், நியூ டெல்லி மற்றும் நிஸ்வாஸ் ஹாக்கி டீம் பாம்போஸ் அணிகளும் மோதுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடை பெறும் இப்போட்டிகளின் தமிழ் நாடு போலீஸ் சென்னை- சாய்-எஸ்.டி.சி. பெங்களூரு அணிகள் மோதுகின்றன,

    இதேபோல் பெட்ரோ லியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோ மோஷன் போர்டு -சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணிகளும் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, நியூ டெல்லி - ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகளும், சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத் - இந்தியன் பேங்க் சென்னை அணிகளும் மோதுகின்றன.

    • கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மகளிர் ஆக்கி போட்டி நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.

    சோழவந்தான்

    தேனி மாவட்டம் பெரிய குளம் தாலுகா தேவதான பட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பாக மகளிர் ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதனை சரவணகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, பெரிய குளம் பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி குழும தலைவர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார்.

    இந்த விழாவில், தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவர் சேகர் மனோகரன், பொது செயலாளர் டாக்டர் செந்தில் குமார், தேனி மாவட்ட ஆக்கி செயலாளர் சங்கிலி காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    4 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.

    • தமிழக வீரர்களுக்கான தேர்வு போட்டி ராமநாதபுரத்தில் தொடங்கியது.
    • 25 பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழக அணியில் விளையாட உள்ளனர் என்றார்.

    ராமநாதபுரம்

    தென் மாநில ஆக்கி போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு போட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலு மாணிக்கம் செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் தொடங்கியது. இதுகுறித்து ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் தென் மாநிலங்களுக்கு இடையேயான 18 வயது பிரிவில் முதலாவது ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற 19-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமானை சேர்ந்த 240 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது.

    இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 பேர் பங்கேற்றனர். இவர்களில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழக அணியில் விளையாட உள்ளனர் என்றார். ஆக்கி சங்க தலைவர் மதுரம் அரவிந்தராஜ், முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாநில தடகள சங்க இணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நியூசிலாந்து ‘லீக்’ சுற்றில் சிலியை மட்டும் 3-1 ன்ற கணக்கில் வென்றது.
    • நாளை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- ஜெர்மனி (மாலை 4.30 மணி), நெதர்லாந்து- தென் கொரியா (இரவு 7 மணி) மோதுகின்றன.

    15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது.

    மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா- தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தென் கொரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.

    ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் நேரடியாகவும், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா ஆகியவை 2-வது சுற்று மூலம் கால் இறுதிக்கும் தகுதி பெற்றன. கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

    இன்று மாலை 4.30 மணிக்கு கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

    ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சையும், 9-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இருந்தது.

    அர்ஜென்டினாவுடன் 3-3 என்ற கணக்கில் 'டிரா' செய்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஸ்பெயினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    ஸ்பெயின் அணி 'லீக்' சுற்றில் 0-2 என்ற கணக்கில் இந்தியாவிடமும், 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்திடமும் தோற்று இருந்தது. வேல்சை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 2-வது சுற்றில் மலேசியாவை தோற்கடித்தது.

    இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதியில் பெல்ஜியம்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    பெல்ஜியம் அணியும் இந்த தொடரில் தோல்வி அடையவில்லை. அந்த அணி தென் கொரியாவை 5-0 என்ற கணக்கிலும், 7-1 என்ற கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியுடன் 2-2 என்ற கணக்கில் 'டிரா' செய்தது.

    அந்த அணி நியூசிலாந்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

    நியூசிலாந்து 'லீக்' சுற்றில் சிலியை மட்டும் 3-1 ன்ற கணக்கில் வென்றது. நெதர்லாந்து (0-4), மலேசியாவிடம் (2-3) தோற்று இருந்தது. 2-வது சுற்றில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது.

    நாளை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- ஜெர்மனி (மாலை 4.30 மணி), நெதர்லாந்து- தென் கொரியா (இரவு 7 மணி) மோதுகின்றன.

    • தொட்டியம் அருகே மாணவிகளுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டியை எம்.எல்.ஏ. தியாகராஜன் தொடங்கி வைத்தார்
    • திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆக்கி வீராங்கனைகள் பங்கேற்றனர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளமான காடுவெட்டி ந.தியாகராஜன் பயிற்சியாளர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ந.அன்பானந்தம், நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ந.கமலம், தொட்டியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலா ந.திருஞானம், ஒன்றிய கவுன்சிலர் தீபாசெல்லத்துரை,

    நத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கூன்ரெங்கம்பட்டி விஸ்வநாதன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார், நத்தம் குறிஞ்சி நகர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆக்கி வீராங்கனைகள், தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் ஆக்கி போட்டியில் அமெரிக்கன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
    • அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    மதுரை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் ஆக்கி போட்டி அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.

    அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதலாவது அரையிறுதியில் அமெரிக்கன் கல்லூரி அணி, மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி அணியை 8-0 என்ற கோல்கணக்கில் வென்றது. 2-வது அரையிறுதியில் லேடி டோக் கல்லூரி அணி, பாத்திமா கல்லூரி அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது.

    இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரியை 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

    • இந்திய ஜூனியர் ஆக்கி வீரர்கள் 5 கோல்களை அடித்தனர்.
    • இந்திய அணி நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    சுல்தான் ஜோகூர் கோப்பைக்கான ஆக்கி போட்டி தொடர், மலேஷியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் கேப்டன் உத்தம் சிங் தலைமையிலான இந்திய ஜூனியர் ஆக்கி அணி பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கேப்டன் உத்தம்சிங், ரோகித்,ஜான்சன்,பூர்டி, பாபி சிங் தாமி,அமந்தீப் லக்ரா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    பதிலுக்கு ஜப்பான் தரப்பில் இக்குமி சாகி ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய ஜூனியர் ஆக்கி அணி தனது நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.

    • வாடிப்பட்டியில் நடந்த மாநில ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றனர்.
    • எல்.ராஜூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எவர் கிரேட் ஆக்கி கிளப் சார்பில் எல்.ராஜூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.

    நிறைவு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், மாநகராட்சி உதவி பொறியாளர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தனர். கிளப் செயலாளர் சிதம்பரம் வரவேற்றார்.

    இதில் திருநகர் இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. 2-ம் பரிசை திருச்சி விளையாட்டு விடுதி அணியும், 3-ம் பரிசை நெல்லை விளையாட்டு விடுதி அணியும், 4-ம் பரிசை மதுரை விளையாட்டு விடுதி அணியும் பெற்றன. போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, வருவாய் ஆய்வாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளைசாமி, சரவணன், சந்திரமோகன், ராமசாமி, காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.=

    ×