என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இலவச பயிற்சி வகுப்புகள்"
- தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர் விற்க்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
- இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 14-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் குரூப் தேர்வு களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கிறது.இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர் விற்க்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 14-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த இணைப்பின் https://rb.gy/6ei6u மூலம் தங்களை பதிவு செய்து க்கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு 04343-291983 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் வருகிற 25-ந் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
- தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டோ அல்லது அரசு இ-சேவை மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணிகள், ரயில்வே பணிகள் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் வருகிற 25-ந் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாத காலம் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இப்பயிற்சில் சேர தங்களுடைய சரியான, முழு விவரங்களை கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டோ அல்லது அரசு இ-சேவை மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுமு மைய தொலைபேசி எண். 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதலில் புதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், இம்மாவட்டத்தில் உள்ள போட்டித் தேர்விற்கு தயாராகும் அனைத்து இளைஞர்களும் காலதாமதமின்றி விரைவில் பதிவு செய்யமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம்.
- அரசு இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி,
தருமபுரி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தர்மபுரியில் நடைபெற உள்ள போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க வருகிற 20- ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலவச பயிற்சி வகுப்புகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வாணையம், வங்கி பணிகள், ரெயில்வே பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
சிறந்த பயிற்றுனர்களை கொண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் கடகத்தூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்குகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாத காலம் நடைபெறும். பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர தங்களுடைய சரியான முழுமையான விவரங்களை https://bit.ly/44MQbel என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம். அல்லது அரசு இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வருகிற 20- ந்தேதி கடைசி நாள் ஆகும். இந்த இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை பெற தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தருமபுரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள போட்டி தேர்வர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் காலதாமதம் இன்றி விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு அறிவிப்பு
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை,
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), ரெயில்வே தேர்வுவாரியம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் (ஐ.பீ.பி.எஸ்.) நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசின் உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். வயது வரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 வயது ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்களும், மாற்று த்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
இலவச பயிற்சி வகுப்புகள்
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ படிக்கும் வட்டம் வழியாக போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தபயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04172-291400, 9499055897 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வுவாரியம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் நபர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும்.
- விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும்.
வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி) 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
மொத்த பணிக்காலியிடங்கள் தோரயமாக 7 ஆயிரம் (இந்தியா முழுவதும்). இந்த பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 3-ந்தேதி ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தேர்விற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் சான்று விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில் இந்த மாதம் 28-ந்தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் அல்லது https://forms.gle/YA2vYJ1AFjUYAd7 என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டர் அரவிந்த் தகவல்
- எஸ்.எஸ்.சி. தேர்விற்கு விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்.
நாகர்கோவில்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எஸ்.எஸ்.சி. தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பணிகளுக்கான 4500 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்.
மேலும் அடுத்த ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாைணயத்தால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 12 -ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது .
இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது . மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது . இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் ஆதார் கார்டு நகலுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
- மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 16.12.2022 முதல் நடைபெற உள்ளது.
- இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக் குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 16.12.2022 முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்து உள்ளதாவது:-
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல்நிலை படிப்பு அளவிலான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு 16.12.2022 வெள்ளிக்கிழமை முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக் குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.
இப்பயிற்சியில் சேரவிருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/3181Cpw என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04342-296188 தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இலவச பயிற்சி வகுப்பு நாளை (28-ந் தேதி) காலை 10.30 மணி முதல் இவ்வலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது.
- பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தேர்விற்கான தனிநபர் ஆலோசனையும் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லர் கவுரிசங்கர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (28-ந் தேதி) காலை 10.30 மணி முதல் இவ்வலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது.இவ்வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும் வாரம் ஒருமுறை பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தேர்விற்கான தனிநபர் ஆலோசனையும் வழங்கப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்ப முள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களது முகவரிக்கான ஆதாரம் ஆகியவற்றுடன், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இது தொடர்பான விபரங்களை 04242-291983 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்டிகளில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த, இத்தேர்விற்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.
- தேனியில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
- மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.
தேனி:
தேனி மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் ெதாழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி -1 முதல்நிலை தேர்வு, நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வு,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய த்தால் அறிவிக்கப்பட்ட 2-ம் நிலை காவலர் தேர்வு களுக்கும், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
வலலுநர்களைக் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயன் அடையலாம். மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இணையதளம் மூலம் பாட குறிப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் எழுதி தேர்வுக்கு தயாராகலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்து ள்ளார்.
- விருதுநகரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு களுக்கு தயாராகும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்