என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
- தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம்.
- அரசு இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி,
தருமபுரி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தர்மபுரியில் நடைபெற உள்ள போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க வருகிற 20- ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலவச பயிற்சி வகுப்புகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வாணையம், வங்கி பணிகள், ரெயில்வே பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
சிறந்த பயிற்றுனர்களை கொண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் கடகத்தூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்குகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாத காலம் நடைபெறும். பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர தங்களுடைய சரியான முழுமையான விவரங்களை https://bit.ly/44MQbel என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம். அல்லது அரசு இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வருகிற 20- ந்தேதி கடைசி நாள் ஆகும். இந்த இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை பெற தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தருமபுரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள போட்டி தேர்வர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் காலதாமதம் இன்றி விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்