என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைக்கவசம்"

    • இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், நடைபெற்றது. அப்போது அவர் ேபசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில், தலையில் அடிப்பட்டு அதனால் ஏற்படும் உயிழப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தலைக்கவசத்தின் பயன் குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். மேற்படி விழிப்புணர்வினை அரசு அலுவலகங்களிலிருந்து அரசு அலுவலர்கள் மூலமாக முதற்கட்டமாக ஏற்படுத்த வேண்டும்.

    அதன்படி, வருகிற 5-ந் தேதி அரசு அலுவலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து, விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

    இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியும் விழிப்புணர்வினை படிப்படியாக பொது மக்களிடமும் கொண்டு சென்று, பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டுவதை ஊக்குவிக்க காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்த வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.

    இதனை தடுக்கும் விதமாக சீர்காழி போக்குவரத்து காவல்துறையினர் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வருபவர்களை வழி மறித்து சோதனையில் ஈடுபட்டனர் இதில் தலைக்கவசம் மற்றும் வாகன காப்பீடு இல்லாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.

    மேலும் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் வாகனத்தில் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்தால் அந்த வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.

    சீர்காழி நகர்பகுதியில் மட்டும் 150 இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணம் மற்றும் காப்பீடு, தலைக்கவசம் அனியாதவர்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது.

    • பாபநாசம் பழைய பஸ் நிலையம் வழியாக, கீழ வீதி அண்ணா சிலையை சென்று அடைந்தது.
    • தலைக்கவசம் அவசியம் அணிவது குறித்து விழிப்புணர்வு.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேசன் பள்ளி, ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் கே.எஸ். அறிவழகன் தலைமை வகித்தார்.

    மண்டலம் 13 உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ், சாலை பாதுகாப்பு சேர்மன் ஆர்.ரவிச்சந்திரன், ஆபிதீன் பள்ளி தாளாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உறுப்பினர் குழு தலைவர் சரவணன் வரவேற்றார்.

    பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பி.பூரணி சாலை பாதுகாப்பு பேரணியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இப்பேரணி பாபநாசம் புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கடை வீதி, தெற்கு ராஜ வீதி, பாபநாசம் பழைய பஸ் நிலையம் வழியாக, கீழ வீதி அண்ணா சிலையை சென்று அடைந்தது.

    பேரணியின் போது வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அவசியம் அணிவது குறித்தும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், பதாகைகள் ஏந்தியும், பள்ளி மாணவ-மாணவிகள் கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

    தொடர்ந்து வாகனங்க ளுக்கு முகப்பு விளக்கு களுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இப்பேரணியில் பாபநாசம் வணிகர் சங்கம், பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேசன் பள்ளி, பாபநாசம் லயன்ஸ் சங்கம் மற்றும் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் ஆகியவற்றின் தலைவர், செயலாளர், பொருளாளர், இயக்குனர்கள், நிர்வாகிகள், உறுப்பினர், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாபநாசம் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    • கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
    • மித வேகத்துடன் செல்ல வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் மீனாட்சிபுரம் விரைவு பேருந்து நிலையம் அருகில் தலைக்கவசம் அணிவது குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார்.

    விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இருசக்கர வாகன விபத்துக்கள் மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதோடு, 2 நபர்கள் மட்டுமே இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டுமென போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 18 வயது பூர்த்தியாகாத எந்த ஒரு நபரும் வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது மித வேகத்துடன் செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் அனைத்துறை அலுவலர்களுடனும் கலந்தாலோசனை மேற்கொண்டு, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது பாரம்பரிய கலை வடிவமான தோல் பாவை கூத்து மூலமாக தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த முத்துச்சந்திரன் குழுவினரின் விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவானது மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதோடு தலைக்கவசம் அணியாதவர்களையும் இந்நிகழ்ச்சியினை பார்க்கும் வகையில் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தினை விபத்தில்லாத மாவட்டமாக மாற்றிடவும், இருச்சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் உட்பட போலீசார், பொது மக்கள், இருச்சக்கர வாகன ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர், தனது தலையில் ஏதே கடிப்பதை உணர்ந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக் கோடு கோழியாண்டி நடுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(வயது30). தனியார் நிறுவன ஊழிரான இவர், சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவர் தலைக்கவசம் அணிந்திருந்தார்.

    மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர், தனது தலையில் ஏதே கடிப்பதை உணர்ந்தார். கடும் வலி ஏற்பட்டதையடுத்து ரோட்டின் ஓரமாக நிறுத்தி தலைக்கவசத்தை கழற்றினார். அப்போது தலை கவசத்துக்குள் இருந்து பாம்பு ஒன்று கீழே விழுந்து ஓடியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல் வலி தாங்க முடியாமல் நிலைகுலைந்து நின்றார். தன்னை பாம்பு கடித்தது பற்றி அவர், அந்த வழியாக வந்தவர்களி டம் தெரிவித்து தன்னை மருத்துவமனையில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து அவரை அந்த வழியாக வந்தவர்கள் கோவிலாண்டி பகுதியில் உள்ள தாலுகா மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாம்பு கடித்ததும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராகுல் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.

    • முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.
    • இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் சுரேஷ்பாபு வரவேற்றார். மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்தை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்ட இயக்குனர் கார்த்திகேயன், சங்க செயலாளர் ஏர்டெல் ரவி, பொருளாளர் வேல்முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். இதில் உறுப்பினர்கள் மதியழகன், சிவக்கொழுந்து, சிவகுருநாதன், ஞானமணி, மகேஷ், அருள், தினேஷ்குமார், விஜயன்பிள்ளை, கலைச்செல்வம், கல்கி ஸ்ரீதர், ஆனந்த்ராஜா, சிவானந்தம், கிருபாநிதி, சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜவான் பவன் சந்திப்பில் இருந்து முதல் டவுன்ஹால் வரை நடந்த இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    • தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.
    • வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

    இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இப்போது பின் இருக்கையில் அமருபவரும் ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கிறது. சாலை பயணத்தின்போது உயிர் காக்கும் உன்னத கவசமாக பயன்படும் அதனை அணிவதை இன்றைய இளைஞர்கள் பலரும் அசவுகரியமாக கருதுகிறார்கள்.

    தலைக்கவசம் அணிந்தபடி நீண்ட தூரம் பயணம் செய்தால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும் என்ற எண்ணம் வாகனம் ஓட்டும் இளம் பெண்களிடமும் இருக்கிறது. ஆனால் தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.

    தலைகவசம் அணியும்போது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் காற்று தடைபடும். அப்படி ஹெல்மெட் வழியாக காற்று உள்ளே செல்வதற்கு வழி இல்லாமல் போனால் வியர்வை உருவாகி அது முடியில் படிந்துவிடும். அதனால் முடி உதிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.

    ஆனால் அதில் உண்மை இல்லை. ஏனெனில் வெளிக்காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தேவைப்படுவதில்லை. அதற்கு தேவையான ஆக்சிஜன் ரத்தத்தின் மூலமே கிடைத்துவிடும்.

    தலைக்கவசம் பயன்படுத்தும் போது முடியை முழுவதுமாக விரித்துவிட்டோ அல்லது Ponytail போட்டுக்கொண்டோ செல்லக்கூடாது. அதற்கு பதிலாக அனைத்து முடிகளையும் ஒன்று சேர்த்து தலையைக் கட்டினால் முடி உதிர்வது குறையும்.

    தலையில் எண்ணெய் அல்லது பொடுகு இருந்தால் அது தலைக்கவசத்தில் ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும். அதற்கு, முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு பின்பு தலைக்கவசம் அணியலாம்.

    காற்றோட்டம் இல்லாதா இடத்தில் தலைக்கவசத்தை வைக்க வேண்டும். அதில் கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேரும் அதனால் அதைக் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைப்பது சிறந்த தேர்வாகும்.

    ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

    • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
    • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

    இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

    இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் கற்களை வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
    • மேலஒட்டங்காடு என்ற இடத்தில் மற்றொரு அரசு பஸ்சின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு போக்கு வரத்து கழக பணிமனை யில் இருந்து (தடம் எண் 1) அதிராம்பட்டினம் சென்று விட்டு மீண்டும் பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    மரக்காவலசை அருகே நேற்று மாலை வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    தொடர்ந்து சேதுபாவா சத்திரம் வழியாக இரண்டா ம்புளிக் காடு சென்றவர்கள் பேராவூரணி பணிமனையைச் சேர்ந்த (தடம் எண் 10) பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து அழகியநாயகிபுரம் வழியாக ஒட்டங்காடு சென்று, மேலஒட்டங்காடு என்ற இடத்தில் பேராவூரணி அரசு போக்குவரத்து கழக நகர பேருந்து பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்த (தடம் எண் 6 ஏ) பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இச்சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மர்ம நபர்கள் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×