search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள போட்டிகள்"

    • மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்குட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் சந்தன பில்கேட்ஸ் பங்கு பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகள போட்டிகளில் பங்கு பெற தேர்ச்சி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சந்தன பில்கேட்சை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்கள்.

    • பள்ளிகளுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
    • புனித ஜோசப் சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசையும் வென்றது.

    நாகர்கோவில் :

    மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. குழுமமான தக்ஷின் சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் தடகள விளையாட்டு போட்டிகள் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் விளையாட்டு திடலில் நடைபெற்றது.

    விளையாட்டு போட்டிகளை பள்ளி தாளாளர் தில்லைச்செல்வம் தொடங்கி வைத்தார். போட்டியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களிலிருந்து 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவர்கள் பங்கேற்றனர்.

    தக்ஷின் சகோதயா தலைமை ஒருங்கிணைப்பாளர் சுனில்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பிரனேஸ் உ நோபிள் மேற்பார்வையிட்டனர். போட்டியில் கன்னியாகுமரி அமிர்தா வித்யாலயம் முதல் பரிசையும், மணவாளக்குறிச்சி புனித ஜோசப் சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசையும் வென்றது.

    மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் உடற்கல்வி குழுமமம் முத்தரசி, செல்வி, ஓசானியோ மற்றும் கோபி விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தனர். பள்ளியின் இயக்குநர்கள் முகில் அரசு, ஆடலரசு, பள்ளி முதல்வர் தீபசெல்வி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய-ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி தாளாளர் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    • தருமபுரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடந்தன.
    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி ஒலிம்பிக் சுடர் ஏற்றியும், வண்ண வண்ண பலூன்கள் பறக்க விட்டும் போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சரக அளவில் போட்டியிடும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செல்வ மாளிகை நிர்வாகி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்பு பேசினார்.

    விழாவில் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக பணி புரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் நேதாஜி நன்றி கூறினார்.

    865 மாணவ மாணவிகள்

    வருவாய் மாவட்ட அளவில் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு ஏறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சரக அளவில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 80-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்று தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவி–களுக்கு இன்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடக்கிறது.

    • திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
    • வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பி.ஆர்.டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் பரந்தாமன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1500, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 100, 200, 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 14, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் என்பது போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது.

    இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் உள்ள 32 பள்ளிகளை சேர்ந்த 1,258 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன.
    • பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

    இந்த போட்டிகளில் ஏற்கனவே பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தடகள விளையாட்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான ஏற்பாடுகளை லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்

    • மாவட்ட அளவிலான இரண்டு நாள் தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கியது.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான இரண்டு நாள் தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, மாவட்ட தடகள சங்கத் தலைவரும், பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 14, 17 மற்றும் 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில், குடியரசு மற்றும் பாரதியார் தினப் போட்டிகளாக, 100, 200, 400, 500, 800 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் மற்றம் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.

    இந்த போட்டிக்கு 9 சரகங்களில் இருந்து 1800 மாணவ, மாணவிகளும், 200-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் செய்துள்ளனர். இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.

    • நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல் போட்டிகள் நடந்தது
    • 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடந்தது.

    தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 14 வயது முதல் 20 வயது உடைய வீரர், வீராங்கனைகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    இதில் 14, 16, 18, 20 என வயதின் அடிப்படையில் 4 பிரிவுகளாக 60 மீட்டர், 100 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 2000 மீட்டர், 3000 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் தகுதியின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×