search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்-முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
    X

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகளை ஒலிம்பிக் சுடர் ஏற்றி முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    தருமபுரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்-முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

    • தருமபுரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடந்தன.
    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி ஒலிம்பிக் சுடர் ஏற்றியும், வண்ண வண்ண பலூன்கள் பறக்க விட்டும் போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சரக அளவில் போட்டியிடும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செல்வ மாளிகை நிர்வாகி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்பு பேசினார்.

    விழாவில் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக பணி புரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் நேதாஜி நன்றி கூறினார்.

    865 மாணவ மாணவிகள்

    வருவாய் மாவட்ட அளவில் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு ஏறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சரக அளவில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 80-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்று தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவி–களுக்கு இன்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடக்கிறது.

    Next Story
    ×