search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் ஊழியர்கள்"

    • பொதுவாக ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்புதான் மின்கம்பத்தில் ஏறுவார்கள்.
    • அசாதரண சூழ்நிலையில் வேறு இணைப்புகளில் இருந்து மின் ஒயரில் மின்சாரம் வந்துவிடும்.

    சென்னை:

    மின்கம்பத்தில் ஏறி பழுதுகளை நீக்கும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழக ஊழியர்களின் பணி மகத்தானது. எந்த நேரத்தில் மின் பிரச்சனை ஏற்பட்டாலும், அவர்கள் தான் இடுப்பில் கயிறு கட்டி மின்கம்பத்தில் ஏறி பழுதினை நீக்குவார்கள். அதேபோல் டிரான்ஸ்பார்மர் மற்றும் உயர் அழுத்த மின் கோபுரங்களில் பிரச்சனை என்றாலும் அவர்கள்தான் அதனை சரி செய்வார்கள். இதுபோன்ற பணியின்போது விபத்துகள் ஏற்பட்டு அந்த ஊழியர்கள் தங்கள் உயிரையும் துறக்கின்றனர்.

    இவர்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டிய நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்து வருகிறது. இந்த ஊழியர்களுக்கு ஏற்கனவே ஒயரில் மின்சாரம் பாய்வதை தடுக்கும் எஸ்.ராடு சாதனம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது இவர்கள் மின்கம்பத்தில் ஏறுவதற்கு முன்னரே இந்த சாதனத்தை மின் ஒயருக்கும், பூமிக்கும் இணைத்து கட்டவேண்டும். அப்போது அந்த மின் ஒயரில் மின்சாரம் வருவது தடுக்கப்படும். அதேபோல் ஹெல்மெட், இடுப்பு கயிறு, மின்சாரம் ஒயரில் செல்கிறதா என்பதனை கண்டறிய டெஸ்டர் போன்ற சாதனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் இவர்களது பாதுகாப்பு வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில் "வோல்டேஜ் டிடெக்டர்" என்ற மின் அழுத்த கண்டுபிடிப்பு கருவி ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. தேர்தல் வந்ததால் இதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இந்த கருவி அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கருவியை கையில் கடிகாரம் கட்டுவது போல் கட்டி கொள்ளலாம்.

    பொதுவாக ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்புதான் மின்கம்பத்தில் ஏறுவார்கள். அசாதரண சூழ்நிலையில் வேறு இணைப்புகளில் இருந்து மின் ஒயரில் மின்சாரம் வந்துவிடும். இனி இந்த சாதனத்தை கட்டிக்கொண்டு ஏறினால், 1 அடி தூரத்திலேயே விளக்கு எரிந்து அலாரம் போல் சத்தமிட்டு சிக்னல் கொடுத்துவிடும். உயர் அழுத்த மின்ஒயராக இருந்தால் 1 மீட்டர் தூரத்திலேயே அலாரம் அடித்து விளக்கு எரியும். அதன் மூலம் மின்கம்பத்தில் ஏறும் ஊழியர்கள் சுதாரித்து கொள்வார்கள். இந்த சாதனம் மழைகாலங்களில் பெரும் உதவிகரமாக இருக்கும்.

    இந்த சாதனத்தை சென்னை அண்ணாநகர் மின்சார அலுவலகத்திற்கு உட்பட்ட 93 ஊழியர்களுக்கு நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சென்னை மின் பகிர்மான வட்டம் மேற்கு திட்டம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா, அண்ணாநகர் கோட்ட செயற்பொறியாளர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் உள்ள 32,000- க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும். நுகர்வோருக்கு தரமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை 2-ம் பணி தொகுதி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். 1.12.2019-க்கு பிறகு 16.5.2023 வரை பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டபடி வழங்கிட வேண்டும். இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் அனைத்து தொழிற்சங்க தொழி லாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பார்வதிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்: தமிழ்நாடு மின் ஊழியர் சி.ஐ.டி.யூ. மத்திய அமைப்பின் சார்பில் பார்வதிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. பிரபகுமார் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் செல்லச்சுவாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தங்கமோகனன், துணைத்தலைவர் ஜான் சவுந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மின்சார வாரியத்தில் கடந்த பல வருடங்களாக ஒப்பந்தப் பணியாளர்களாக இருப்பவர்களை நிரந்தரப்படுத்த வேண்டியும், புதிதாக போடப்பட்ட இ-டெண்டர் முறையை ரத்து செய்திட வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடந்தது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டச் செயலாளர் குணசேகரன், பொருளாளர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.527.08 கோடி கூடுதல் செலவாகும்.
    • ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 978 ஆகும்.

    சென்னை:

    சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5 மணி நேரம் நடைபெற்றது.

    உடன் மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் ரா.மணிவண்ணன், இயக்குனர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், செயலாளர் ஆ.மணிக்கண்ணன், தொழிலாளர் நலன் கூடுதல் ஆணையர் எம்.சாந்தி, உயர் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 19 மின் வாரிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மின்சார வாரிய ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அன்று பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற முடிவுக்கு நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டு உள்ளன. அதேபோல், 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அன்று 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக அன்றைய தேதியில் இருந்து பெறும் ஊதியத்தில் 3 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்பதற்கும் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

    ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.527.08 கோடி கூடுதல் செலவாகும்.

    இந்த ஊதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் கருத்தியலாகக் கணக்கிட்டு 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் பணப்பலன்கள் வழங்கவும், அதே தேதியில் இருந்து வருகிற 31-ந்தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை 2 தவணைகளாக அதாவது முதல் தவணை வருகிற ஜூன் மற்றும் 2-வது தவணை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த நிலுவைத் தொகை ரூ.516.71 கோடியாகும். 28 மாதத்திற்கான நிலுவைத் தொகையில் ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்தபட்சம் தொகுக்கப்பட்ட நிலுவைத் தொகையாக ரூ.500 வீதம் கணக்கிட்டு இந்நிலுவைத் தொகையை 2 தவணைகளாக வழங்கப்படும். இதற்காக ரூ.106 கோடி கூடுதல் செலவாகும்.

    ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 978 ஆகும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக 3 சதவீதம் ஊதிய உயர்வு மூலம் பயன்பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 548 ஆகும். சராசரியாக வாங்கும் சம்பளத்தில் 9 சதவீதம் அதிகமாக வழங்கப்படும். வேலைப்பளு குறித்த ஒப்பந்தம் தொழிற்சங்கங்களுடன் பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்.

    இந்த முடிவை அனைத்து தொழிற்சங்கங்களும் மனமகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு நன்றி தெரிவித்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
    • ஊழியர்கள் பணியை புறக்கணித்து கையெழுத்து போடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை

    தமிழகம் முழுவதும் மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆயிரக்கணக்கானோர் பணியை புறக்கணித்து கையெழுத்து போடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது அவர்கள் பஞ்சப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். வாரிய ஆணை எண்:2, 12.04.2022-யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மறுபகிர்வு முறையை கைவிட வேண்டும். வெளி ஆட்களை பணியமர்த்தக் கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தால் மின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×