search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டபணிகள்"

    • மகளிர்களுக்கு உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
    • அமைச்சர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் உள்ள சிப்காட், வ.உ.சி நகர், திருவள்ளுவர் நகர், புளியங்கண்ணு ஆகிய இடங்களில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட ஊராட்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,ஒன்றிய பொது நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய நிதிகளிலிருந்து மொத்தம் ரூ.97 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 7 வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இதன்படி கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், காரிய மேடை, அங்கன்வாடி மைய கட்டிடம், நெற்களம், நாடக மேடை ஆகியவற்றிற்கான திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டே கால் ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் புதுமையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் மக்களை கேட்காமலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவார்.

    அதே வழியில் நமது முதல் அமைச்சரும் மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப் பெண், காலை உணவு, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால் மகளிர்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.

    செப்டம்பர் முதல் மகளிர்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இந்த நவ்லாக் ஊராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ரூ.11 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பயன்பெற வேண்டும் .

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், கோமதி விஜயகுமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தியாகராஜன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், நவ்லாக் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி குமார், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவேரிப்பட்டணம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் என மொத்தம் ரூ.4 கோடியே 64 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் சமுதாக கூடம் கட்டுமான பணிகள், சுண்டேகுப்பம் ஊராட்சி செட்டிமாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ். ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதே போல், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் கரகூர் வளமீட்பு பூங்காவில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரம் மமிப்பில் கழிவு நீர் கசடு சுத்திகரிப்பு மையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஈரக்கழிவுகளை உரமாக்கும் கூடம் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, காவேரிப்பட்டணம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் என மொத்தம் ரூ.4 கோடியே 64 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மலையாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

    தொடர்ந்து சுண்டேகுப்பம் ஊராட்சி, செட்டிமாரம்பட்டி, மலையாண்டஅள்ளி, கன்னிநகர் மற்றும சந்தாபுரம் ஆகிய கூட்டுறவு நியாய விலைக ்கடைகளுக்குட்பட்ட பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் சபாரத்தினம், சுமதி, தமிழ்செல்வி, பணி மேற்பார்வையாளர்கள் கவிதா, விஜயராஜ், ரீனா, வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைசாமி, எல்லம்மாள், அரசுகோவிந்தசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருப்பதி, பேரூராட்சியில் பேரூராட்சி செயல்அலுவலர் சாம்கிங்ஸ்டன், ஜீனுர் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் அனிஷாராணி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, இளநிலை பொறியாளர் பழனிசாமி, இளநிலை உதவியாளர் இளங்கோ மற்றும் அலுவலக பணியாளர்கள் கார்த்திகேயன், செந்தில், முகமதுஇத்ரிஸ், விக்னேஷ், ராஜேஸ்வரி, விஞ்ஞானிகள், பேராசிரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    • அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
    • ராணிப்பேட்டையில் புதிய திட்டபணிகள் தொடக்கம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய திட்ட பணிகள் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.

    வாலாஜா ஒன்றியம் வானாபாடி ஊராட்சியில் களத்துமேடு பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வானாபாடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மறுவாழ்விற்காக வழங்கப்படும் நிதியுதவி வழங்குதல்,

    கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கல்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப ள்ளியில் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடம், ரூ.10.லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம், கன்னிகாபுரத்தில் புதிய பகுதி நேர ரேசன் கடை, கல்மேல்குப்பத்தில் ரூ.19லட்சத்து50 ஆயிரம் மதிப்பில் புதியஆழ்துளை கிணறு, பைப்லைன்,

    தரைமட்டநீர்தேக்கத் தொட்டி , கல்மேல்குப்பம் ஊராட்சி மற்றும் அம்மூர் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ. 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 7 திட்டப்பணிகள் தொடக்க மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    விழா நிகழ்ச்சிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து பேசினார்.

    விழா நிகழ்ச்சிகளில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், பணிகளை தொடங்கி, நிதியுதவிகளை வழங்கினர்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் மகத்தான திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதியில் கூறாத பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

    இந்த மக்களாட்சியில் கட்சி பாகுபாடின்றி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. ஒரு நல்லாட்சி என்பது மக்களின் வரிப்பணத்தினை தேவையற்ற திட்டங்களுக்காக வீணடிக்காமல் அப்பணம் மக்களையே சேரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதைத்தான் நமது முதல் அமைச்சர் செய்து வருகிறார்.

    நமது முதல் அமைச்சர் மகளிர்க்கும்,கல்விக்கும்,சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதனால் பொதுமக்கள் யார் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை செயல்படுத்திகிறார்கள் என சிந்தித்து செயல்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    நிகழ்ச்சிகளில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன். அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ஒன்றியக் குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம்,ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செல்வி, ராமச்சந்திரன், வானாபாடி, கல்மேல்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரி, ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யப்பன் எம்.எல்.ஏ. நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • விழாவிற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டில் 15.50 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை, 3-வது வார்டு செம்மண்டலம் காந்தி நகர் ரூ.14 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், லட்சுமி செக்யூரிட்டி கே.ஜி.எஸ்.தினகரன், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோவன், வனிதா சேகர், வார்டு அவைத்தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், நிர்வாகிகள் ராமலிங்கம், தெய்வநாயகம், செல்வராஜ், சம்மந்தம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், சதிஷ், ஆனந்த், பாலசந்தர், செந்தில், மணிவண்ணன், சதாசிவம், சுரேஷ், தண்டபாணி, அருணாச்சலம், சிவகுஞ்சிதம், ஆறுமுகம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • 100 கிராம ஊராட்சிகள் தேர்வு

    வேலூர்:

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச் சித் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையில், ரூ.3.70 கோடியில் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுவருகிறது.

    இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து கிரா மங்களும் 5 ஆண்டுகளில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவு அடைந்திடும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    புதிய நீர் ஆதாரங்களை உரு வாக்கி, தரிசு நிலங்களை சாகுப டிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பை அதிகரித்தல், வேளாண் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரித்தல், உழவர்க ளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சமு தாய நீர் ஆதாரத்தை உருவாக் குதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், சிறுபாசன குளங் கள், ஊரணிகள், நீர் வரத்துக் கால் வாய்களைத் தூர்வாரி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிற 2021 - 2022- ஆம் ஆண்டில் 317 சிறு கிராமங்களை உள் ளடக்கிய 43 கிராம ஊராட்சிக ளில் 390.26 ஏக்கர் பரப்பளவில்22 தொகுப்புகள் தேர்ந்தெடுக் கப்பட்டு 293 விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறி யியல் துறை மூலம் ரூ.2 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2022 - 2023 ஆம் ஆண்டில் 271 சிறு கிராமங்களை உள்ளடக்கிய 57 கிராம ஊராட்சிகளில் 293.10 ஏக்கர் பரப்பளவில் 20 தொகுப்பு கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 230 விவ சாயிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.95 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, 2021 - 2023 ஆகிய இரு நிதியாண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 கிராம ஊராட்சி களில்தேர்வு செய் யப்பட்டு, அந்த கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத் தும் வகையில் இதுவரை ரூ.3.70 கோடி மதிப்பிலான திட்டப் பணி கள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏற்காடு ஒன்றியத்தில் அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் எற்கனவே குண்டூர், தெப்பக்காடு, முன்டகாம்பாடி ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளன.
    • அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் இன்று பூஜையுடன் பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளது.

    ஏற்காடு:

    ஏற்காடு ஒன்றியத்தில் அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் எற்கனவே குண்டூர், தெப்பக்காடு, முன்டகாம்பாடி ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளன.

    தற்பொழுது அதன் தொடர்ச்சியாக கோவில்மேடு பகுதிக்கு அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் இன்று பூஜையுடன் பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி ரவிசந்திரன். பஞ்சாயத்து துணைதலைவர் பட்டாசு பாலு, கோவில்மேடு வார்டு உறுப்பினர் பிரீத்தா கலை, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில்மேடு பகுதியை தொடர்ந்து லாங்கில்பேட்டை, டவுன், அழகாபுரம்.ஜெரினாக்காடு ஆகிய பகுதிகளுக்கு இந்ததிட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

    ×