search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை ஊசி"

    • ஊசி மருந்து பாட்டில் ரூ.7 க்கு வாங்கி அதை ரூ. 300 வரை விற்பனை செய்துள்ளனர்.
    • போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாநகரில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. அவ்வப்போது போலீசார் போதை ஊசி விற்பனை கும்பலை கைது செய்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் போதை பொருட்கள், மாத்திரைகள், ஊசிகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டது. இதில் உறையூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை ஊசி சப்ளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையிலான போலீசார் திருச்சி வடவூர் பகுதியில் ஊசியுடன் போதை மருந்து மாணவர்களுக்கு சப்ளை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (வயது 32) இஃப்ரான்( 23) சாலை ரோடு ரியாஸ்கான்(23) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் ஆன்லைனில் போதை மாத்திரைகள் ஆர்டர் செய்து வாங்கி சப்ளை செய்தது தெரியவந்தது. மேலும் டாக்டர்கள் சிலரின் மருந்து சீட்டுகளை போலியாக அச்சடித்து அதில் டாக்டர்கள் பரிந்துரைப்பது போன்று கையெழுத்திட்டு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை ஆர்டர் செய்து தபால் மூலமும் வாங்கிய தகவலும் கிடைத்தது.

    ஊசி மருந்து பாட்டில் ரூ.7 க்கு வாங்கி அதை ரூ. 300 வரை விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவர்களுக்கு போதை ஊசி மற்றும் மருந்து சப்ளை செய்த பழைய குற்றவாளிகள் 20 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவார்கள். அவர்களின் கைகளில் ஆங்காங்கே தழும்புகள் இருக்கும். எனவே தங்கள் குழந்தைகளின் கைகளில் சந்தேகத்திற்குரிய வகையில் தழும்புகள் உள்ளதா? என்பதை பெற்றோர் அடிக்கடி கண்காணித்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.

    போதை ஊசி செலுத்தும் போது அது நேராக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். உணவு உட்கொள்வதில் ஆர்வம் குறையும். தொடர்ந்து 3 ஆண்டுகள் இதே பழக்கத்தில் இருந்தால் மூளை நரம்பு மண்டலம் முற்றிலுமாக செயல் இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றார்.

    • சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • சிறுவனின் நண்பர்களிடம் போதை ஊசி எப்படி கிடைத்தது? யார் மூலம் கிடைத்தது? எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீர்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புளியந்தோப்பு மன்னார் சாமி தெரு டிக்காஸ் ரோட்டை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது மகன் ஜாகீர். 17 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பின்னர் படிப்பை தொடராமல் கடந்த 6 மாதங்களாக எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் ஜாகீர் போதை ஊசிக்கு அடிமையாகி உள்ளான். இதைத்தொடர்ந்து நேற்று பாரிமுனையில் உள்ள 17 வயது நண்பன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஜாகிர் உள்பட நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து போதை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். ஜாகிர் ஊசி செலுத்திக்கொண்ட பிறகு சாலையில் நடந்து வந்தபோது மயங்கி கீழே விழுந்தான். இதைப் பார்த்த நண்பன் ஒருவன் ஜாகிரை மீட்டு மோட்டார் சைக்கிளில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் கையில் போதை ஊசி போட்டுக் கொண்ட அடையாளங்கள் இருந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து எக்ஸ்பிளனேடு போலீசார் சிறுவனின் நண்பர்களிடம் போதை ஊசி எப்படி கிடைத்தது? யார் மூலம் கிடைத்தது? எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீர்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் போதை ஊசி நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே பல உயிர்கள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில் 17 வயது சிறுவனும் தற்போது உயிரிழந்துள்ளான். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சிறுவர்களுக்கு போதை ஊசியை விற்பனை செய்த போதை ஊசி கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    • இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நேற்று இரவு எஸ்பிளனேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிறுமி, இளம் பெண் 3 வாலிபர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் இளம் பெண்ணை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா (வயது 19) எனத் தெரிந்தது. எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரித்திர குற்றவாளியான சின்னா என்பவர் சேலத்தில் உள்ள சரண்யாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.

    மேலும் விசாரணையில் சரண்யாவை அழைத்து வர சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சின்னா காதலியான 16 வயது சிறுமியை அனுப்பி வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக அரண்மனைக்காரன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

    சரண்யா செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் குறித்த புகைப்படங்கள் ஆவணங்கள், பண பரிமாற்றம் போன்ற தகவல் சிக்கியது.

    இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.
    • போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நெகமம் போலீசார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து வரும் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த முரளிகுமார்(51), ஆனைமலை அடுத்த சேத்துமடையை சேர்ந்த சுரேஷ்(29), பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ஜலீல்(46) ஆகியோர் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதையடுத்து கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முரளிகுமார், கோவையில் உள்ள மருந்துகடைகளில் வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதாக கூறி வாங்கி உள்ளார்.

    பின்னர் அதனை சுரேஷ் மற்றும் ஜலீல் ஆகியோரிடம் கொடுத்து, நெகமம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    முரளி குமாரின் வீட்டில் நடத்திய சோதனையில் போதை மருந்து மாத்திரைகள், டையாஜீபம் ஊசி 10, தூக்க மாத்திரை 180, சிரிங்ச் 50, என மொத்தம் ரூ.25000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

    மேலும் இவர்கள் போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அதிக போதைக்கு ஆசைப்பட்டு போதை ஊசி செலுத்திய வாலிபர் பலியான சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் நடந்து உள்ளது.
    • போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றும் சதீஷால் போதை பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை.

    பெரம்பூர்:

    இளைஞர்கள் தற்போது விதவிதமான போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். பெற்றோர் மற்றும் அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் போதை கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடசென்னை பகுதியில் இப்போது போதை ஊசி கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. அதிக போதைக்கு ஆசைப்பட்டு போதை ஊசி செலுத்திய வாலிபர் பலியான சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் நடந்து உள்ளது.

    புளியந்தோப்பு, கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஷ் (வயது22). கடந்த 2 ஆண்டாக போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றும் அவரால் போதை பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை போதை ஊசி செலுத்திய சதீஷ் வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அதிக போதைக்காக சதீஷ் போதை ஊசியை கழுத்தில் செலுத்தி இருப்பது தெரிந்தது. இதனால் உடலில் சோடியம் அளவு அதிகரித்து அவர் இறந்து இருப்பது தெரிந்தது.

    இதேபோல் வடசென்னை பகுதியில் போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக புளியந்தோப்பு, ஓட்டேரி, பேசின்பிரிடஜ், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை ஊசி மூலம் நரம்புகளில் செலுத்தி வருகிறார்கள். இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. போதை மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல் தனியாக ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப்பில் குழு வைத்து செயல்பட்டு வருகிறார்கள். இதனை அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன.

    கடந்த 6 மாதத்தில் இதுவரை போதை ஊசிக்கு 6 பேர் இறந்து உள்ளனர். இதேபோல் ஒருவரது பார்வையும் பறிபோய் உள்ளது. கடந்த மாதம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவர் உயிரிழந்தார். அதே மாதம் 18-ந்தேதி புளியந்தோப்பை சேர்ந்த சஞ்சய் (18) என்பவர் போதை ஊசி செலுத்தியதில் பட்டாளம் மார்க்கெட் பகுதியில் இறந்து கிடந்தார். இதேபோல் ஜூன் மாதம் 14-ந்தேதி புளியந்தோப்பை சேர்ந்த கணேசன் (22) என்பவருக்கு 2 கண்களும் பாதிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் வ.உ.சி. நகர் 2-வது தெருவை சேர்ந்த வெற்றிவேல், புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்த அசோக்குமார் ஆகியோரும் போதை ஊசிக்கு பலியாகி உள்ளனர்.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது சுலபம். ஆனால் இதுபோன்ற போதை மாத்திரை, ஊசிகளை விற்பனை செய்யும் கும்பல் மற்றும் அதனை பயன்படுத்துபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது சற்று கடினமாக உள்ளது. அவர்கள் எளிதில் ஆன்லைன் மூலமாகவும், மருந்து கடைகளிலும் வாங்கிச்சென்று விடுகின்றனர். மேலும் இதற்காக ஆன்லைனில் தனி நெட்வொர்க் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் வைத்து போதை ஊசிகளை சப்ளை செய்கின்றனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. வடசென்னை பகுதியில் போதை ஊசி பழக்கம் அதிக அளவில் உள்ளது. போதை ஊசி, மருந்துகள் விற்கும் கும்பலை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

    • ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
    • தப்பி ஓடிய பாலாஜி, திருமூர்த்தி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே சண்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயானத்தில் நேற்று இரவு ஒரு கும்பல் போதை ஊசி, போதை மாத்திரை போட்டுக்கொண்டிருப்பதாக அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் சிறப்பு போலீஸ் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி, மற்றும் போதை மாத்திரையை பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயது உட்பட்டவர்கள். எந்த ஒரு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்து உள்ளனர்.

    பின்னர் பிடிபட்டவர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன், ரூபேஷ், மகேஸ்வரன், வெங்கடேசன், சவுந்தர் ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 50 ஆயிரம் மதிப்பிலான போதை ஊசி, மாத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய பாலாஜி, திருமூர்த்தி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை தவிர வேறு யாரும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை செய்வதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்தது.
    • தகவல் அறிந்த பாலக்கரை போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் செங்குளம் காலனி பால்வாடி அருகே இளைஞர்களுக்கு போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை செய்வதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அதிகாரி மைமூன் பீவிக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.

    தகவல் அறிந்த பாலக்கரை போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போதுஅங்கு போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்து கொண்டிருந்த, ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் (வயது 20) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 29 போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்து, ஊசி பறிமுதல் செய்தனர்.





    • ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
    • ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால், கல்லூரி பள்ளி மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துவதாக தொடர்பு புகார் வந்தது. இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் திண்டிவனம் தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் ஏஎஸ்பி தனிப்படை போலீசார் சோதனை நடத்தினார்.

    அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த சதாம்(31) என்பவர் அவரது வீட்டில் போதை ஊசி பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் போதை ஊசி தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 7 குளுக்கோஸ் பாட்டில், 160 போதை மாத்திரை, 10 ஊசியுடன் கூடிய சிரிஞ்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சதாமை காவல் நிலையம் அழைத்துச் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை நடத்தினர். விசாரணையில் சதாம் அளித்த தகவலின் பேரில் திண்டிவனம் பங்களா தெருவை சேர்ந்த சூர்யா(22), கிடங்கல் 2, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஷாம் (19), திண்டிவனம் செஞ்சி மெயின் ரோடு மதர் சாய் தெருவை சேர்ந்த சிவா (26) ஆகியோருக்கு போதை ஊசி தொடர்ந்து சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போதை ஊசி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போதை ஊசிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை சதாம் என்பவருக்கு விற்பனை செய்த மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதில் போதை ஊசி தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதால் மேலும் இதில் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போதை ஊசி பயன்படுத்து வோரின் விற்பனை செய்போரின் கைது நடவடிக்கை தொடரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் திண்டிவனம் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே 50 கிராம் கஞ்சா வைத்திருந்த செஞ்சி சாலையை சேர்ந்த கௌதம்(23) மற்றும் திண்டிவனம் என்ஜிஓ காலனி பகுதியை யுவராஜ்(22), என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரோசணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட ஆலப்பாக்கம் ஏரிக்கரை அருகே 60 கிராம் கஞ்சா, 10 லிட்டர் சாராயம் விற்ற நத்தமேடு பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (22), மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கனூர் குளக்கரை அருகே கஞ்சா விற்ற மருதமலை(24), என்பவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

    ×