என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே பாரத் ரெயில்"

    • பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரெயில் பாலத்தை பார்வையிட உள்ளார்.
    • கத்ராவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு- காஷ்மீருக்கு முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பிரதமர் மோடி இந்த ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.

    கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாரமுல்லா இடையே முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்படலாம் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அம்மாநில முதல்- மந்திரி உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    பின்னர் பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரெயில் பாலத்தை பார்வையிட உள்ளார். கத்ராவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

    • 5-வது வந்தே பாரத் ரெயில் தென்னிந்தியாவின் சென்னை - பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
    • இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரெயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் "வந்தே பாரத்" ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும்.

    அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்கள் புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர் - மும்பை மற்றும் அம்ப் அந்தாரா -புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில், 5-வது வந்தே பாரத் ரெயில் தென்னிந்தியாவின் சென்னை - பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரெயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    • மைசூரில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
    • ஜோலார்பேட்டைக்கு மதியம் 12.50 மணிக்கு வருகிறது

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 7-ந் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    இந்த ரெயில் கர்நாடக மாநிலம் மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர் காட்பாடி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை கர்நாடக மாநில மைசூர் ரெயிலை நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வந்தே பாரத் ரெயில் தொடங்கி வைக்கிறார்.

    நாளை காலை 10 மணி அளவில் மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர், வைட்பீல்டு, பங்காரப்பேட்டை, குப்பம், மல்லானூர், சோமநாயக்கன்பட்டி, ஜோலார்பேட்டை, கேத்தாண்டப்பட்டி, வாணியம்பாடி, விண்ணமங்கலம், ஆம்பூர், குடியாத்தம், லத்தேரி, காட்பாடி, வாலாஜா ரோடு சோளிங்கர், அரக்கோணம், உள்ளிட்ட 44 ரெயில் நிலையங்களில் நாளை ஒரு நாள் மட்டும் ஒரு நிமிடம் நின்று செல்கிறது.

    இந்த ரெயில் மாலை 5.15 மணி யளவில் சென்னை சென்றடைகிறது.

    மேலும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு நாளை மதியம் 12.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில் வந்தடையும் காட்பாடிக்கு 2.25 மணிக்கு வருகிறது. பின்னர் சென்னை நோக்கி புறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டின் 5வது வழித்தடமாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    பிரதமா் மோடி தமிழகம், கா்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 தென் மாநிலங்களில் இன்று முதல் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக, தென்மாநில சுற்றுப்பயணத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு பெங்களூரு வந்தார். இங்கு இன்று காலை 9.45 மணிக்கு கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனக தாசா் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதலில் மரியாதை செலுத்தினார்.

    பின்னர், பிரதமர் மோடி நாட்டில் 5-வதாகவும், தென் இந்தியாவில் முதலாவதாகவும் வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை சென்னை-மைசூரு இடையே இன்று காலை 10 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் காலை 11.30 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். பெங்களூரு விமான நிலையத்தில் நெரிசலை சமாளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்தால் பயணிகள வருகை மற்றும் விமான சேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி பெங்களூருவில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பெங்களூரு கெம்பே சர்வதேச விமான நிலையம், கவர்னர் மாளிகை மற்றும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • வந்தே பாரத், தேக்கத்தின் நாட்களிலிருந்து இப்போது இந்தியா மீண்டதற்கான அடையாளம்.
    • பாரத் கவுரவ் ரெயில் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தலங்களை இணைக்கிறது.

    பெங்களூரு:

    சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர்.ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரத கவுரவ காசி தரிசன ரெயில் பயணத்தையும் பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: 


    வந்தே பாரத் ஒரு ரெயில் மட்டுமல்ல, அது புதிய இந்தியாவின் புதிய அடையாளம். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது தேக்கத்தின் நாட்களிலிருந்து இப்போது இந்தியா மீண்டதற்கான அடையாளமாகும். இந்திய ரெயில்வேயின் மொத்த மாற்றத்திற்கான இலக்குடன் நாங்கள் செயல்படுகிறோம்.

    400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் விஸ்டா டோம் பெட்டிகள் இந்திய ரெயில்வேயின் புதிய அடையாளமாக மாறி வருகின்றன. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், சரக்கு போக்குவரத்தின் வேகத்தை அதிகரித்து நேரத்தை மிச்சப்படுத்தும். அதிவிரைவு அகலப்பாதை மாற்றம் ரெயில்வேயின் வரைபடத்தில் புதிய பகுதிகளை இணைத்து வருகிறது.

    நமது பாரம்பரியம் கலாச்சாரம் ஆன்மீகம் சார்ந்தது. பாரத் கவுரவ் ரெயில் மூலம் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தலங்கள் இணைக்கப்படுகின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை அவை வலுப்படுத்துகின்றன. இந்த ரெயிலின் 9 பயணங்கள் நிறைவடைந்துள்ளன. 


    ஷீரடி கோயில், ஸ்ரீ ராமாயண யாத்திரை, திவ்ய காசி யாத்திரை என எல்லாமே பயணிகளுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இதேபோல் கர்நாடக மக்களுக்கு அயோத்தி, காசி மற்றும் பிரயாக்ராஜ் தரிசனத்தை வழங்கும் பாரத் கவுரவ காசி தரிசன ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை வந்தடைந்தது. சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்த, வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வரவேற்றார். மேளம் தாளம் முழங்க மலர்கள் தூவி மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • பார்வையிட்ட பள்ளி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
    • பா.ஜ.க. சார்பில் மலர் தூவி இனிப்பு வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    சென்னை- பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் மோடி கே.எஸ.ஆர்.பெங்களூரு ரெயில் நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

    முதல் நாளான நேற்று அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் நின்று சென்றது. தென்மேற்கு ெரயில்வே எல்லையை முடித்துக் கொண்டு, தென்னக ரெயில்வே எல்லையான ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.05 மணிக்கு வந்தே பாரத் ெரயில் வந்தடைந்தது.

    அப்போது சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் சச்சின் புனித் உள்ளிட்ட ெரயில்வே உயர் அதிகாரிகள் வந்தே பாரத் ரெயிலை வரவேற்றனர்.

    அப்போது வந்தே பாரத் ரெயிலை பள்ளி பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். அவர்களுக்கு சென்னை கோட்ட பொது மேலாளர் சச்சின் புனித் இனிப்பு வழங்கினார்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் உள்ளிட்ட ரெயில்வே துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மலர் தூவி இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    பார்வையாளரின் பார்வைக்காக வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் 10 நிமிடம் நின்று சென்றதால் பார்வையாளர்களும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வந்தே பாரத் ரெயில் முன்பு நின்று தனது செல்போன் மூலம் செல்பி எடுத்தனர்.

    ரெயில் பெட்டிகளில் ஏறி கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    • விபத்து ஏற்பட்டபோது வந்தே பாரத் ரெயில் 90 கி.மீட்டர் வேகத்தில் வந்ததாக தெரிகிறது.
    • அபராதம் விதிக்க கன்று குட்டியின் உரிமையாளரை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சென்னை-மைசூர் இடையேயான வந்தே பாரத் ரெயில் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயில் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, பெங்களூரு ரெயில் நிலையத்தில் நிற்கும். பின்னர் கடைசியாக மைசூர் சென்றடையும்.

    இந்த ரெயில் நேற்று மாலை அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தின் குறுக்கே வந்த கன்றுக்குட்டியின் மீது மோதியது.

    இதில் அந்த கன்றுக்குட்டி இறந்துபோனது. விபத்து ஏற்பட்டபோது வந்தே பாரத் ரெயில் 90 கி.மீட்டர் வேகத்தில் வந்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயிலின் முன் பகுதியை என்ஜின் டிரைவர் சோதனை செய்தார். இதில் ரெயிலின் முன் பகுதி லேசாக சேதம் அடைந்து இருந்தது.

    பின்னர் 2 நிமிடம் தாமதமாக வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ஆனால் இறந்து போன கன்று குட்டியின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து அபராதம் விதிக்க கன்று குட்டியின் உரிமையாளரை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே கோட்ட அதிகாரி கூறும்போது, 'அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரெயில் மோதியதில் கன்றுக்குட்டி இறந்து போனது. அந்த கன்று குட்டியின் உரிமையாளரை கண்டு பிடித்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்.

    தண்டவாளத்தில் கால்நடைகளை சுற்ற விட்டால். உரிமையாளர்கள் மீது ரெயில்வே சட்ட 1989-ன்படி 154-வது பிரிவின் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.

    • சென்னையில் இருந்து மைசூரு சென்ற ரெயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்பில் சராசரியாக 147 சதவீதமும், சேர் காரில் 115 சதவீதம் நிரம்பின.
    • வந்தே பாரத் ரெயில் காட்பாடி மற்றும் பெங்களூருவில் மட்டும் நின்று செல்கிறது.

    சென்னை:

    தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே கடந்த 12-ந்தேதி தொடங்கியது. புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. 'எக்சிகியூட்டிவ்' சேர்கார் என்ற 2 வகுப்புகள் இதில் உள்ளன. சேவை தொடங்கிய 10 நாளில் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    சென்னையில் இருந்து மைசூரு சென்ற ரெயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்பில் சராசரியாக 147 சதவீதமும், சேர் காரில் 115 சதவீதம் நிரம்பின. இதேபோல மைசூரில் இருந்து சென்ட்ரல் வந்த ரெயிலில் எக்ஸ்சிகியூட்டிவ் வகுப்பில் 125 சதவீதமும், சேர் காரில் 97 சதவீதமும் நிரம்பின.

    இந்த ரெயில் காட்பாடி மற்றும் பெங்களூருவில் மட்டும் நின்று செல்கிறது. இடைநிறுத்தங்களில் இறங்கி ஏறும் பயணிகளின் அடிப்படையிலும் பயணம் செய்த மொத்த பயணிகள், இருக்கை வசதி அடிப்படையிலும் சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரெயிலில் மொத்தம் 1200 இருக்கைகள் உள்ளன.

    • வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் 130 சதவீத வரவேற்பு கிடைத்துள்ளது.
    • புதிய வந்தே பாரத் ரெயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.

    மும்பை :

    கடந்த நவம்பர் மாதம் குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வந்தே பாரத் அதிவிரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் 16 பெட்டிகளுடன் 1,128 பயணிகள் அமரும் வசதி கொண்டது. காந்திநகரில் இருந்து மும்பைக்கு 5½ மணி நேரத்தில் வந்து சேருகிறது.

    மும்பையில் இருந்து காந்திநகருக்கு ஏ.சி. சேர் கார் இருக்கையில் பயணிக்க ரூ.1,275 கட்டணமாகவும், காந்திநகரில் இருந்து மும்பைக்கு ரூ.1,440 ஆகவும் கட்டணம் நிர்ணயக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல மும்பையில் இருந்து காந்திநகருக்கு எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைக்கு ரூ.2 ஆயிரத்து 455 ஆகவும், மறுமார்க்கமாக ரூ.2 ஆயிரத்து 650 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

    2 மாதங்களில் இந்த வந்தே பாரத் ரெயில் பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ரெயில் எண் 20901 மும்பை-காந்திநகர் வந்தே பாரத் ரெயில் டிக்கெட் மூலம் ரூ.4 கோடியே 49 லட்சமும், 20902 எண் கொண்ட காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் ரூ.4 கோடியே 72 லட்சமும் கிடைத்து உள்ளது. மொத்த வருவாய் ரூ.9 கோடியே 21 லட்சம் ஆகும்.

    கடந்த அக்டோபர் மாதம் டிக்கெட் கட்டணம் மூலம் ரூ.8 கோடியே 25 லட்சம் வருவாய் ஈட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் 130 சதவீத வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த ரெயிலின் சேவையால் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கப்படும் மற்ற ரெயில்களின் சேவை பாதிக்கப்படவில்லை. புதிய வந்தே பாரத் ரெயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில் மற்ற ரெயில்களும் 100 சதவீத பயணிகளுடன் இயங்குகிறது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்வீச்சில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
    • ரெயில் சேவை தொடங்கி 4 நாட்களில் கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா-ஜல்பைகுரி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த மாதம் 30-ந்தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்று குமார் கஞ்ச் என்ற ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கு மறைவான இடத்தில் இருந்த மர்மநபர்கள் அந்த ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள்.

    இந்த கல்வீச்சில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக கல்வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சு கும்பலை தேடி வருகின்றனர். இந்த ரெயில் சேவை தொடங்கி 4 நாட்களில் கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்காள மாநிலத்தில் வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கிவைத்தார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது. மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர். அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் நிலைய ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. தலைவருமான சுவேந்து அதிகாரி, 'இந்த ரெயில் தொடக்க விழாவில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் கல் வீசி தாக்கப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலன் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக மைசூர் வரை வந்தே பராத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • சென்னை கோட்ட பொது மேலாளர் கணேஷ் தனி சிறப்பு ரெயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக மைசூர் வரை வந்தே பராத் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் தற்போது மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களை போல் பொதுவான வேகத்தில் சென்று கொண்டுள்ளது. இதனால் வந்தே பாரத் ரெயிலின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    அதன் அடிப்படையில் சென்னை கோட்ட பொது மேலாளர் கணேஷ் நேற்று தனி சிறப்பு ரெயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.

    அப்போது ரெயில்வே துறையின் பல்வேறு அதிகாரிகளுடன் அவர் தண்டவாளங்கள், பிளாட்பாரம், பழைய ரெயில்வே பணிமனை, ஆர்.ஆர்.ஐ. கேபின், பிளாட்பாரங்களில் உள்ள நிழற்கூடம் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் 4-வது, 5-வது பிளாட்பாரம் நடைமேடையில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்லும் நடைமேடையில் ரெயில்வே அலுவலர்கள் செல்ல தனி வழியாகவும், பொதுமக்கள் கடந்து செல்ல தனி நடைமேடையும் புதிய பாலம் அமைத்து மேம்பால பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்து பிரிவு அலுவலர்களிடம் பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே பணிமனையை ஆய்வு செய்து சரக்கு ரெயில்கள் வருவதற்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரெயில் பாதையையும் மற்றும் பழுதான சரக்கு ரெயில் வண்டிகள் பழுது சரி பார்த்த பின்பு கடந்து செல்லும் ரெயில் பாதையையும் ஆய்வு செய்தார்.

    சென்னை-மைசூர் வந்தே பாரத் ரெயில் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களை போன்று பொதுவான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

    ரெயிலின் வேகத்தை அதிகரிக்கவும் ரெயில் பாதைகள் உறுதியாகவும் தரமாகவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறினார்.

    அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் சேகர், துணை மேலாளர் கணேசன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆசைத்தம்பி, மற்றும் சென்னை கோட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×