என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிலை உடைப்பு"
- திப்பசந்திராவில் கோவிலில் இருந்த புவனேஸ்வரி சிலையை மாணவன் உடைத்தான்
- சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து இரண்டு போலீசார் மஃப்டி உடையில் சென்றனர்
கர்நாடக தலைநகர் பெங்களூரில் 10 ஆம் வகுப்பு தேர்வில் ஃபெயில் ஆனதற்கு கடவுள் தான் காரணம் என்று மாணவன் சாமி சிலையை உடைந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பெங்களூரின் கிழக்கு பகுதியில் உள்ள திப்பசந்திராவில் கோவிலில் இருந்த புவனேஸ்வரி கடவுள் சிலையை உடைத்தாக 17 வயது சிறுவன் மீது போலீசார் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் குறித்து பேசிய போலீஸ், 10 ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி பரீட்சையில் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்ததால் அடைந்த சிறுவன் விரக்தியில் இருந்துள்ளான், தனது தோல்விக்கு கடவுள் தான் காரணம் என்று கருதிய சிறுவன் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள புவனேஸ்வரி சிலையைக் கீழே தள்ளி உடைத்துள்ளான்.
சிலை உடைந்து கிடப்பதை கோவில் பூசாரி சில மணி நேரங்கள் கழித்து கவனித்துள்ளார். எனவே போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சிறுவன் ஒருவன் சிலையை உடைத்ததை கண்டறிந்தனர்.
சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து மஃப்டி உடையில் சென்ற இரண்டு போலீசார் சிறுவனை கஸ்டடியில் எடுத்து சிறார் நீதி மையத்தில் ஒப்படைத்தனர்.
- விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை.
சென்னை பாலவாக்கத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது, கிரேன் மூலம் தூக்கியபோது எடை தாங்காமல் விநாயகர் சிலை கிழே விழுந்து உடைந்தது.
இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிலை உடைந்து விழுந்ததற்கு போலீசார் அவசரப்படுத்தியதே காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பக்தர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் ஒருவழியாக பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிரேன் மூலம் தூக்கியபோது விநாயகர் சிலை உடைந்து விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருக்க கடற்கரை முழுதும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிலையை உடைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பேச்சி, பிரம்மசக்தி, ஒத்தப்பனை சுடலை ஆண்டவர், முண்ட மாடசாமி,கொம்பு மாடசாமி, பரனடி மாடசாமி, எல்லைக்காவல் சுடலை ஆண்டவர், பிணம்திண்ணி கருநாக முண்டமாடசாமி இரட்டைத்தலை கொம்பு மாடசாமி, இசக்கியம்மன் சடைஅழகன் மாயாண்டி சுவாமிகள் உள்ளன.
இந்தக் கோவிலின் நிர்வாகியாகவும், சாமியாடியாகவும் பாளையங்கோட்டை திருமாள்நகர் குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 57)என்பவர் இருந்து வருகிறார். இவர் தினமும் கோவிலுக்கு வந்து பூஜை நடத்தி செல்வது வழக்கம். நேற்று இரவில் பூஜை முடித்துவிட்டு ஊருக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து அவர் பார்த்தபோது அந்த கோவிலில் உள்ள சடையழகன் மாயாண்டி சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெபஸ்டியான், பேச்சிமுத்து, காளிராஜ் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிலையை உடைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சிலை உடைக்கப்பட்ட தகவலறிந்து இந்து மக்கள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.
- கெபியில் முன்பு வேளாங்கண்ணி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்தது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கெபியில் உள்ள அனை வேளாங்கண்ணி மாதா சிலையை சிலர் அவமரியாதை செய்தனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்மாடி தளவாய்புரம் கிராமம். இங்குள்ள சாலையோரம் அன்னை வேளாங்கண்ணி மாதா உருவச்சிலை வைக்கப்பட்ட கெபி உள்ளது. இதனை அப்பகுதி கிறிஸ்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கெபியில் முன்பு வேளாங்கண்ணி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக மணியாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. லோகேஷ்வரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் மாதா சிலையை உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியினர் கெபியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கெபியில் உள்ள அனை வேளாங்கண்ணி மாதா சிலையை சிலர் அவமரியாதை செய்தனர். இந்நிலையில் தற்போது 2-வது முறையாக நடந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
- சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர்.
கன்னியாகுமரி :
குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகி ருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கு சத்ரபதி வீரசிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த சிலையை நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து தலைப்பா கத்தை உடைத்து உள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை முதல் காட்டுத்தீ போல் பரவியது. இதை யடுத்து ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர். மேலும் ஆலய தலைவர் நடராஜன் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். தற்போது அப்பகுதியில் பதட்ட நிலை வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.
- வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள ஜடையனூர் கூட்ரோடு பகுதியில் அ.தி.மு.க.வினரால் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலை கையை உடைத்துள்ளனர். இன்று காலை எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர். எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி திருப்பத்தூர் சாலையில் மறியல் செய்தனர்.
தகவல் அறிந்து குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் அங்கு வந்த வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டனர்.
இதுகுறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் குரிசிலாப்பட்டு போலீசில் ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ஓரிரு நாட்களில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
ஜடையனூர் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நெடுவரம்பாக்கம் ஊராட்சி காலனியில் சுமார் 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கரின் முழு உருவச்சிலை உள்ளது.
- அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம் ஊராட்சி காலனியில் சுமார் 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கரின் முழுஉருவச்சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் இரும்பு கூண்டின் பூட்டை உடைத்தனர். மேலும் அம்பேத்கர் சிலையின் கை, முகத்தை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அசம்பாவிதத்தை தடுக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு முன்பும் கடந்த ஆண்டு இதே சிலை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- திருவெண்ணைநல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது.
- தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த ேகாவில் முகப்பில் காவல் தெய்வங்கள் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கு சென்றனர். அவர்கள் சாமி சிலைகளை உடைத்து உள்ளனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள்சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்