என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வளைகாப்பு விழா"
- சமுதாய வளைகாப்பு விழாவை மணிமாறன் தொடங்கி வைத்தார்.
- திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமை தாங்கினார். மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப்பெண் களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவு வளையல் பழ வகைகள் நெய் உடை மற்றும் சில்வர் தட்டு ஆகியவற்றை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் வட்டார அளவில் உள்ள தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் முதல் தவணையாக 2000 மூன்றாம் மாதம் முடிவில் 2000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பகால சேவைக்காக 2000 வழங்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக இன்று திருமங்கலத்தில் செக்கானூரணி, சாத்தங்குடி, புதுப்பட்டி, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்க பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராம லிங்கம், நகராட்சி துணை சேர்மன் லதா அதியமான், ஆதவன் அதியமான், ஒன்றிய கவுன்சிலர்கள் மதன் தங்கப்பாண்டி, கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
திமிரி ஒன்றியம் கே.பி.ஜே மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு ஆற்காடு சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம் பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் எஸ்.அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஜெ.ரமேஷ், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சி.தன்ராஜ், பேரூராட்சித் தலைவர் மாலா இளஞ்செழியன், துணைத் தலைவர் கௌரி தாமோதரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பாரதி, அம்சப்பிரியா, கிரிஜா தேவி மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 168 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
- அரியலூர் மாவட்டத்தில் 168 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
- சீர்வரிசை பொருள்கள் மற்றும் 5 வகையான உணவுகளை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
அரியலூர், அரியலூரிலுள்ள தனியார் திருமண மண்ட பத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்க ளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் சின்னப்பா கலந்து கொண்டு அரியலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 168 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருள்கள் மற்றும் 5 வகையான உணவுகளை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுசிலா, வட்டார மருத்துவ அலுவலர் சத்யா, வாலாஜ நகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்யாறில் அரசு சார்பில் நடந்தது
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர்கள் திலகவதி ராஜ்குமார், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபிராமி வரவேற்றார்.
ஒ.ஜோதி எம்.எல்.ஏ., எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். விழாவில் நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா பங்கேற்று கர்ப்பிணி களுக்கான ஊட்டச்சத்து, விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் தடுப்பூசி முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் நகராட்சி கவுன்சி லர்கள் கே.விஸ்வநாதன், ரமேஷ், கார்த்திகேயன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் என்.சங்கர், எம்.தினகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர், தில்லை.வீ.சந்துரு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
- குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
- திருப்பூர் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.
பல்லடம்:
பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா வரவேற்றார். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், பல்லடம் நகர் மன்ற உறுப்பினர்கள் வசந்தாமணி, சபீனா, மற்றும் துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை வட்டார ஆட்மா தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, பாண்ட மங்கலம், பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணை தலை வர் பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் சித்ரா மருத்துவ அறிவுரைகள் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சீர்த்தட்டு, புடவை, வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.
முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மனோஜ் நன்றி கூறினார். விழா விற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் ஜானகி, மேற்பார்வையாளர்கள் அன்னபூரணம், ராமாயி, மணிமேகலை இளநிலை உதவியாளர் சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் முகமதுதாவூத் ஆகியோர் செய்திருந்தனர்.
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
- இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் மற்றும் சேலையுடன் சீர்வரிசை பொருட்கள் வழங்கக் கட்டன.
கன்னியாகுமரி :
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் அகஸ்தீஸ் வரம் வட்டாரத்துக்குட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோவில் கலையரங்கத்தில் நடந்தது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த கர்ப்பிணி பெண்களுக்கு கழுத்தில் பூமாலை அணிவிக்கப்பட்டு முகத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமம் திலகமிட்டு தலையில் மலர் தூவி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தாம்பூல தட்டு, வெற்றிலை, பாக்கு, பூமாலை, இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் மற்றும் சேலையுடன் சீர்வரிசை பொருட்கள் வழங்கக் கட்டன.
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சீர்வரிசை பொருட்களை அகஸ்தீஸ்வ ரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் வக்கீல் சீனிவாசன், தி.மு.க. நிர்வாகிகள் வினோத், அகஸ்தலிங்கம், தமிழ்மாறன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி கிங்ஸ்லி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கி ணைப்பாளர் அருண் சுலைமான் நன்றி கூறினார். விழாவில் கன்னியாகுமரி, அழகப்பபுரம் மற்றும் கொட்டாரம் தொகுதி அங்கன் வாடி பணியா ளர்கள் வளைகாப்பு பாடல் பாடினார்கள். அங்கன்வாடி பணியாளர் பகவதி தேவி வாழ்த்து பாடல் பாடினார்.
- சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
- பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.
சிவகிரி:
சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார். வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சுந்தர், உள்ளார் விக்கி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, மேற்பார்வையாளர்கள் அமுதா, சுகந்தி, பணியா ளர்கள் காளியம்மாள் (மகளிர் தொண்டர் அணி), இந்திரா, சீனியம்மாள், முத்துமாரி, துரைகண்மீரால், பரமேஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சூளையில் வேலை பார்த்து வரும் பொறி என்பவரது மனைவி தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
- சுற்றுவட்டார பகுதியில் வேலை பார்க்கும் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடையம் அருகே உள்ள வடக்கு மடத்தூர் என்ற கிராமத்தில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கொல்கத்தாவை சேர்ந்த 7 குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
அந்த சூளையில் வேலை பார்த்து வரும் பொறி என்பவரது மனைவி தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடையம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள கோவிந்தபேரி, மாதாபுரம், செக்போஸ்ட் என பல்வேறு பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வரும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களது சடங்குப்படி வளைகாப்பு விழா நடைபெற்றது.
தொடர்ந்து சிக்கன், மட்டன் என கறி விருந்து நடைபெற்றது. மேலும் பலவண்ண மின் விளக்குகள், ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்டவைகளை அங்கு கட்டி திருவிழா போல் அமைத்திருந்தனர். வளைகாப்புக்கு பின்னர் வடமாநில தொழிலாளர்கள் நடனம் மூலம் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து வடமாநில தொழிலாளி பொறி கூறுகையில், நான் தமிழகம் வந்து பல ஆண்டுகள் ஆகிறது. இங்கேயே வேலை பார்த்து வருகிறேன். தற்போது எனது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்று வளைகாப்பு நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதியில் வேலை பார்க்கும் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இங்கு மிகவும் சந்தோஷமாக வளைகாப்பு விழா கொண்டாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது இங்கு சுதந்திரமாக நடந்த வளைகாப்பு விழா அவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செங்கல் சூளை உரிமையாளர் பாலமுருகன் செய்திருந்தார்.
- கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாக கால பூஜையுடன் கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- வளைகாப்பிற்காக பொதுமக்கள் பூ, பழம், வளையல்கள், கலவை சாதங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரியம்மை உடனுறை மேலகங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாக கால பூஜையுடன் கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வளைகாப்பிற்காக பொதுமக்கள் பூ, பழம், வளையல்கள், கலவை சாதங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
இதனைதொடர்ந்து கோமாதாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி நீராடி மாலை அணிவித்து, காலில் சலங்கை கட்டியும், பசு மாட்டிற்கு வளையல்களை அணிவித்தும் வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோமாதாவிற்கு அன்னம் ஊட்டியும் மஞ்சள் பூசியும் வழிபாடு செய்தனர்.
- 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசை வழங்கினார்.
அரக்கோணம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணி அலுவலர்கள் தான்யா, அம்சபிரியா, ஒன்றிய குழு தலைவர்கள் நிர்மலா சவுந்தர், பெ.வடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா பாபு, சுந்தராம்பாள் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சவுந்தர், தமிழ்ச்செல்வன், பெருமாள், பசுபதி, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
- பன்னீர் தெளித்து ஆரத்தி எடுத்து நலங்கு வைத்து சிறப்பாக கொண்டாடினர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக்கூடத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வட்டார மருத்துவர் சரவணன் அறிவுறுத்தினர். பின்னர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் சந்தனம் பூசி, பொட்டு வைத்து, கை வளையல் பூட்டி, மாலை அணிவித்து, பன்னீர் தெளித்து ஆரத்தி எடுத்து நலங்கு வைத்து சிறப்பாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்கள் அனை வருக்கும் சீர்வரிசையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனை வருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்