என் மலர்
நீங்கள் தேடியது "நல்ல பாம்பு"
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
கன்னியாகுமரி:
தக்கலை அருகே பத்மனாபபுரம் செக்கால தெருவை சேர்ந்தவர் நடராஜபிள்ளை. இவரது வீட்டுக்கு பின்புறம் கோழி கூடு உள்ளது. இன்று காலை கோழி கூட்டை திறக்க சென்ற போது ஒரு கோழி செத்து கிடந்தது. கூண்டு வழியாக பார்த்த போது ஒரு பாம்பு நெளிந்த படி இருந்தது.
உடனே தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு அலுவலர்ஜீவன்ஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது விஷம் கூடிய 6 அடி நல்ல பாம்பு என தெரியவந்தது. உடனே பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
- ராமச்சந்திரன் வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது.
- நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் குளத்துப்பாதை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி வெங்கலட்சுமி. இவரது வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு, வெளியே வந்தனர். மேலும் இதுபற்றி சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின் நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
- பள்ளத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது.
- நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது.
கடலூர்:
கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது. அப்போது அங்கு நல்ல பாம்பு ஒன்று வந்தது.
அந்த நல்ல பாம்பு நாய் குட்டிகளை பாதுகாத்து வருகிறது. பொதுமக்கள் யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் கம்பீரமாக நாய்க்குட்டிகளின் முன்னால் நின்றது. அப்போது அங்கு வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனால் அந்த நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக நாய் குரைத்துகொண்டு இருந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது நல்ல பாம்பு குட்டிகளை பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பிரமிப்புடன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த கடலூர் வன அலுவலர் செல்லா சம்பவ இடத்திற்கு சென்று அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு பாதுகாப்பாக காட்டில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சுவர் விரிசலின் வழியாக பார்த்தபோது ஒரு பாம்பு இருந்தது தெரிய வந்தது.
- பாம்பு மீது ஏதேனும் பொருட்கள் பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ளவர்களை கடித்து விடும். அதன் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
கடலூர்:
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் சேர்ந்தவர் கவிதா. இவர் வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தபோது குட்டி பாம்பு ஒன்று வீட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து பெரிய பாம்பும் பின் தொடர்ந்து சென்று உள்ளது.
அதிர்ச்சி அடைந்த கவிதா மற்றும் அவர்களது பிள்ளைகள் பாம்பை தேடி பார்த்து உள்ளனர். ஆனால் பாம்பு தென்படவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் வீட்டின் சுவர் விரிசலில் பாம்பு சண்டையிடும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் சுவர் விரிசலின் வழியாக பார்த்தபோது ஒரு பாம்பு இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சுவரை உடைத்து உள்ளே இருந்த பாம்பை லாபகமாக பிடித்தார். அந்த பாம்பு 5 அடி நீள நல்ல பாம்பு என தெரிய வந்தது. ஆனால் அந்த பாம்பு ஒரு இரையை விழுங்கி இருந்ததால் நகர முடியாமல் தவித்தது. பின்னர் ஒரு சில நிமிடத்தில் தான் உண்ட இரையை வெளியே கக்கும்போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இதில் குட்டி நல்ல பாம்பை தனது இறையாக விழுங்கியது தெரியவந்தது. பின்னர் பாம்பு தான் விழுங்கிய குட்டி பாம்பை வெளியில் கக்கியது.
இதனை தொடர்ந்து வன அலுவலர் செல்லா, பிடிபட்ட நல்ல பாம்பை பாட்டிலில் அடைத்தார். அப்போது வீட்டின் உரிமையாளர் கவிதா நல்ல பாம்பு சாமி பாம்பாகும். ஆகையால் அதனை பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும்.
மேலும் எனது கணவர் இறப்பதற்கு முன்பு 2 பாம்பு ஒன்றாக இருந்தபோது அதில் ஒரு பாம்பை அடித்ததால் இறந்தது. அதன் பின்பு சில மாதங்களில் எனது கணவர் இறந்து விட்டார்.
தற்போது இந்த நல்ல பாம்பு அடிக்கடி எங்கள் வீட்டு பகுதிக்கு வந்து செல்லும். இதுவரை எங்களை எதுவும் செய்ததில்லை. ஆகையால் இது சாமி பாம்பு என கூறினார்.
அப்போது செல்லா பாம்பு மீது ஏதேனும் பொருட்கள் பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ளவர்களை கடித்து விடும். அதன் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நீங்கள் ஒத்துழைக்கக் கூடாது. மேலும் இந்த பாம்பை பாதுகாப்பான காட்டுப் பகுதியில் விடுவதன் மூலம் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாது என கூறி அங்கிருந்து நல்ல பாம்பை கொண்டு சென்றார். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- மல்லைய சுவாமிக்கு பொதுமக்கள் காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகில் ஜீவசமாதி அமைத்து வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
- மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி கருவறை அருகில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் திடீரென நல்ல பாம்பு ஒன்று சென்றது.
பொன்னேரி:
காரனோடை அருகே ஸ்ரீ ஸ்ரீ மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி வந்த மல்லைய சுவாமிகள் மண்ணை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
கடைசியாக அவர் இறப்பதற்கு ஒன்பது நாளைக்கு முன்பாக தான் ஜீவசமாதி அடையப்போவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து மல்லைய சுவாமிக்கு பொதுமக்கள் காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகில் ஜீவசமாதி அமைத்து வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் குருபூஜை நாள் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்கு வந்தால் மன அமைதி ஏற்படுவதாகவும், செல்வம் பெருகும். தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி கருவறை அருகில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் திடீரென நல்ல பாம்பு ஒன்று சென்றது. அது அங்கு நின்றபடி படம் எடுத்து ஆடியது.
இதனை கண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள், பரவசமடைந்து வணங்கினர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோயில் ஊழியர்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் இயற்கை ஆர்வலரான இளம்பெண் ஹரிணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அதனை அருகே உள்ள வனப்பகுதியில் விட்டார்.
- மஞ்சள் மூட்டையை தொழிலாளர்கள் அகற்றியபோது அதில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சீறியது.
- பாம்பை லாவகமாக பிடிக்கும் பஞ்செட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த அழிஞ்சிவாக்கம் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகே தனியார் மஞ்சள் தூள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கிருந்த மஞ்சள் மூட்டையை தொழிலாளர்கள் அகற்றியபோது அதில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சீறியது. அதனை அங்கிருந்த ஊழியர்கள் விரட்ட முயன்றனர்.
ஆனால் நல்ல பாம்பு படம் எடுத்து மிரட்டியது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து பாம்பை லாவகமாக பிடிக்கும் பஞ்செட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பாம்பை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த மஞ்சள் மூட்டைகளுக்குள் புகுந்து போக்கு காட்டியது. சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் நல்ல பாம்பு சிக்கியது. இதன்பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட நல்ல பாம்பு பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது.
- வீட்டினுள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டுள்ளனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள ஒரிச்சேரி சக்தி மெயின் ரோட்டில் செல்லவேல் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று இவரின் வீட்டினுள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பை வெளியேற்ற அவர் பல்வேறு முயற்சிகள் செய்தும் முடியவில்லை.
இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பவானி நிலைய அலுவலர் பழனிச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று செல்லவேல் வீட்டில் இருந்த மூன்றடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டுள்ளனர்.
- விஜயகுமார் மனைவி ரஞ்சிதா உள்பட 5 பேர் நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைபேட்டையில் பொன்னையன் என்பவருக்கு சொந்தமான நாட்டு சர்க்கரை அரைக்கும் ஆலை உள்ளது. இங்கு கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி ரஞ்சிதா (23) உள்பட 5 பேர் நேற்று நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ரஞ்சிதா ஆலையில் தேங்கிய குப்பைகளை ஆலையின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கொட்டு வதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த நல்ல பாம்பு ரஞ்சிதாவின் வலது கையில் கடித்தது.
இதில் மயங்கி விழுந்த ரஞ்சிதாவை அருகி லிரு ந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.
மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி அங்கேயே பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை கட்டுமான பணிக்காக அங்கு இருந்த பலகைகளை எடுத்த போது நல்லபாம்பு ஒன்று படமெடுத்து சீறியது.
இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.
- மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.
- கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மகி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த மகி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக் காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.
கொலை செய்வது எப்படி என்பதை 'கிரைம் பேட்ரோல்' என்ற தொலைக் காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.
தனது திட்டத்தின்படி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த காதலரை, நல்ல பாம்பை விட்டு மகி கடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கித் இறந்து விட்டார். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மகி ஆர்யா உள்ளிட்ட 4 பேர்தான் கொலையாளிகள் என்பதை கண்டுபிடித்துவிட்டனர். 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து நைனிடால் எஸ்.பி. பங்கஜ் பட் கூறுகையில், பாம்புப் பிடாரன் ஒரு வரை அழைத்து வந்து நல்ல பாம்பை மகி ஏவி விட்டு உள்ளார். மகி ஆர்யாவுக்கு தீப் கந்த்பால் என்ற வேறொரு காதலரும் உள்ளார். மகி ஆர்யா, தீப், வேலைக்கார பெண் உஷா தேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோர் சேர்ந்து கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றார்.
- யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.
- பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சீனிவாசன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோழிப்பண்ணையில் ஒவ்வொரு நாளும் கோழி குஞ்சுகள், முட்டைகள் காணாமல் போய் கொண்டிருந்திருக்கிறது. அவரும் அதை கவனிக்கவில்லை. கீரி அல்லது நாய்கள் எடுத்திருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு சட்டை உரித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தார். யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது விறகு அடியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீறிக்கொண்டு வெளியே வந்தது. அதனை லாபகரமாக மீட்ட யுவராஜ் இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்று கூறினார். மேலும் அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.
தற்போது குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி சரளா வீட்டில் இருந்த போது திடிரென நல்ல பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேனர். உடனடியாக இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூலம் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை ½ மணி நேரம் போராடி பிடித்து
திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.