search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கல்யாண நிகழ்ச்சி"

    • வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் `தீர்த்தக்காவடி திருவிழா' என அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனி சிறப்பு வாய்ந்தது. அதாவது கோடை காலமான பங்குனி, சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இந்த காலத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது பங்குனி உத்திர விழாவின் சிறப்பு ஆகும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந்தேதி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மாலை 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. மகா தீபாராதனைக்குப் பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்ததை தொடர்ந்து, மண கோலத்தில் சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளினார். முன்னதாக திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிதேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேர்பவனி தொடங்கியது. சன்னதி வீதி, வடக்கு, கிழக்கு, மேற்கு கிரிவீதிகள் வழியாக சென்று நிலை வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

     திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், காவடி சுமந்தும் ஆடிப்பாடியும் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.

    நாகர்கோவில் :

    கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ் வான சூரசம்ஹார விழா குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று நடந் தது.

    இந்த விழாவையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுரு கன் சன்னதியில் நேற்று காலையில் முருகப்பெருமா னுக்கு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தன. இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.

    நாகராஜா கோவிலின் 4 ரதவீதிகளிலும் வலம் வந்த பின்னர் நாகராஜா திடலில் சூரனை, முருகப்பெருமான் வேலால் குத்தி வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு 7 மணி அளவில் நடந்தது. பின்னர் ஒழுகினசேரியில் உள்ள ஆராட்டுத்துறையில் சாமிக்கு ஆராட்டு நடந்தது. தொடர்ந்து சாமி கோவி லுக்கு எழுந்தருளினார். இன்று நாகராஜா கோவில் பாலமுருகன் சன்னதியில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆரல்வாய்மொழி பெரு மாள்புரம் இந்து நாடார் சமு தாயம் வவ்வால்குகை பால முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம் ஹாரம் நேற்று மாலையில் நடந்தது. இதனையொட்டி வவ்வால் குகை பாலமுருகன் சுப்பிரமணியபுரத்திலிருந்து மெயின்ரோடு வழியாகமேள தாளங்களுடன் சூரன் முன்னே செல்ல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் பாலமுரு கன் பின்னே துரத்தியபடி சென்றார். மாலை 6.30 மணிக்கு சூரனை பால முருகன் வதம் செய்தார். தொடர்ந்து கண்ணை கவரும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந் து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட் டளை தலைவர் பகவதி யப்பன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுயம்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    தோவாளை செக்கர்கிரி சுப்ரமணியசாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா அதிர்வேட்டு முழங்க வானவேடிக்கையோடு கேரள பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் மேற்கொண் டார்கள். தினசரி முருகப்பெ ருமானுக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று சூரசம்கா ரத்தை முன்னிட்டு செக் கர்கிரி ஆலயத்தில் இருந்து வேலவன் பல்லக்கில் சூரசம்ஹாரத்துக்கு புறப் பட்டு கோவில் அடிவா ரத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

    மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கேரளக் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதை பொது மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர்.

    விழா ஏற்பாடுகளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விழா கமிட்டி செய்து வந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதி யப்பன், பொறியாளர் லட்சுமணன், விழா குழு நிர்வாகி கருணாநிதி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணுஉள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    முடிவில் வான வேடிக்கை நடைபெற்றது. சூரசம்ஹாரம் முடிந்த முருகன் கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடந்தது. வடிவீஸ்வ ரம் அழகம்மன் கோவில், ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் சுவாமி கோவில், தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சாமி கோவில், வெள்ளி மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி முருகன் குன்றம் கோவிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் இந்திர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளங்களுடன் பட்டண பிரவேசம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 8 மணிக்கு சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், பந்தல் கால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது.
    • சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள பொன்மலை சீனிவாச பெருமாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், பந்தல் கால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. 1-ந் தேதி இரவு கோ பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம் ஆகியவை நடந்தன.

    நேற்று காலை 9 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றன. தொடர்ந்து 10.15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சாமிக்கு ரக்ஷாபந்தனம், தாயாருக்கு கவுரி பூஜை, சாமிக்கு காசி யாத்திரை, வரபூஜை, மாங்கல்ய தாரணம், மகா தீபாராதனையுடன் திருக்கல்யாணம் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் கல்யாண சீனிவாச பெருமாள் அருள் பாலித்தார்.

    மதியம் திருக்கல்யாண விருந்தும், மாலை 4 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், மாலை 6 மணிக்கு தாயார் சமேத சாமி கோவில் திருசுற்று பல்லக்கு சேவையும், பிரசாத வினியோகமும் நடைபெற்றன. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றன.
    • சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவில் 37-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி வருகிற ஜூன் 8-ந் தேதி வரை நடக்க உள்ளன.

    இதையொட்டி தினமும் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பிரகார உற்சவம் மற்றும் பல்வேறு வாகனங்களில் நரசிம்மர் நகர் வலம் வருதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக நேற்று நரசிம்ம சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தன.

    இதில், சீர்வரிசைகளுடன், சிறப்பு யாகம் நடத்தி, வேத மந்திரங்கள் முழங்க, மாலை மாற்றி நரசிம்மருக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றன. திருக்கல்யாணம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய், இரவு கருட வாகனத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று(வியாழக்கிழமை) காலை அபிஷேகம், அலங்காரமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு யானை வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற உள்ளன.

    • மணக்கோலத்தில் தர்மரா ஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, எக்கூரில் பிரசித்தி பெற்ற, தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி திருக்கல்யாண வைபவ, உற்சவ விழா நேற்று நடந்தது.

    இந்த கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31ல்,கங்கணம் கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று மேல தாளங்கள் முழங்க தட்டுவரிசையுடன் சென்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து, உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மணக்கோலத்தில் தர்மரா ஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாகுழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுப்பிரமணி சாமி கோவில் அமைந்துள்ளது.
    • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுப்பிரமணி சாமி கோவில் அமைந்துள்ளது.

    ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் சுப்பிரமணியர் சாமிக்கும் வள்ளி மற்றும் தெய்வானை சாமிக்கும் திருக்கல்யாணம் தைப்பூச நன்னாளில் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி மற்றும் தெய்வானை சாமிக்கும் சீர்வரிசை அழைப்பு மற்றும் பெண் வீட்டார் அழைப்பும் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து வள்ளி மற்றும் தெய்வானை கழுத்தில் தாலி கட்டினார். மேலும் சாமிக்கு மொய் வழங்கி னர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரத்தில் குமார சுப்பிரமணியர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி கடந்த 25-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரத்தில் குமார சுப்பிரமணியர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி கடந்த 25-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    கடந்த 26, 27 ஆகிய 2 நாட்கள் யாகசாலை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 28-ந்தேதி கோபூஜை மற்றும் மாலையில் சிவனடியார் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    29-ந்தேதி சிறப்பு பூஜையும், நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி, திருமலையை சுற்றி வந்து சிறப்பு பூஜையுடன் நிறைவடைந்தது. சிறப்பு பூஜை முடிவடைந்த உடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குமாரசுப்பிர மணியர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியை விழா குழுவினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்து இருந்தனர்.

    • காலை சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது
    • இன்று காலை சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி காலை கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    அன்று காலை சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது.

    பின்னர் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து மகா பூர்ணாகுதியும், பின்னர் உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடைபெற்றது.

    தொடந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை ஐந்து நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    நேற்று மதியம் மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்திவேல் வாங்கும் வைபோகம் நடந்தது. இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் முருகப்பெருமானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேலினை ஒப்படைத்தார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெ ருமான் சமேதராக மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹாரவிழா நிகழ்ச்சி தொடங்கியது.

    சென்னிமலை நான்கு ராஜ வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சியை ஆயிரக்கா ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டுகளித்தனர்.

    இதில் மேற்கு ராஜ வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜ வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜ வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளினார்.

    இதேபோல் திண்டல் மலை முருகன் கோவிலிலும் நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது.

    இன்று காலை சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில்களில் திருக்க ல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புஞ்சை புளியம்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று குதிரை, வீரபாகு சூரன் போன்ற வாகனங்கள் சத்தி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் வழியாக வந்துபவானி சாகர் சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தது.

    பின்னர் இரவு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது
    • திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    நேற்று கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் சுப்பிரமணிய சுவாமி சூரபத்மனை வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

    இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி காலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    காலை 9.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யான நிகழ்ச்சி நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    வள்ளி பச்சை பட்டு உடுத்தியும், தெய்வானை ரோஜா நிற பட்டு உடுத்தியும் சுப்பிரமணிய சுவாமி சந்தன நிற பட்டு உடுத்தி கல்யாண மண்டபத்தில் பொன்னூஞ்சலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தொடர்ந்து அனைவரும் நலமாக 16 செல்வங்களும் பெற்று வாழ வேண்டி உரல் இடித்து தேவார பொற்சுண்ணம் பாடல்களை ஓதுவார்கள் பாடி மஞ்சள் இடித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்றவர்கள் ரூ.57 ஆயிரத்து 910 மொய் எழுதினர்.

    அதை தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கந்த சஷ்டி விழாவிற்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.‌

    இந்த நிகழ்ச்சிகளை கட்டளைதாரர்கள், கோவில் துணை ஆணையர் ஹார்சினி ஆகியோர் செய்திருந்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • குன்னம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 12-ம் ஆண்டு புரட்டாசி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாலை பெருமாள் கருட வாகனத்தில் வாண வேடிக்கையுடன் கூடிய திருவீதி உலாவும் நடைபெற்றது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 12-ம் ஆண்டு புரட்டாசி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூபமும், அதனை தொடர்ந்து கோ பூஜை, ஸ்தயனா, திருமஞ்சனம் முதல் கால பிரசாத வினியோகம், பின்னர் திருக்கல்யாண பெருவிழாவும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் மாலை பெருமாள் கருட வாகனத்தில் வாண வேடிக்கையுடன் கூடிய திருவீதி உலாவும் நடைபெற்றது. இரவு பள்ளியறை சேவையும் நடந்தது.

    நிகழ்ச்சியில் குன்னம் மற்றும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

    • சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ உற்சவம் விழா வரும் 16-ந் தேதி நடக்கிறது.
    • விழா எற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாரா யண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை யொட்டி திருக்கல்யாண வைபவ உற்சவம் மற்றும் ஸ்ரீ சுதர்சன ேஹாம விழா வரும் 16-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சுதர்சன ேஹாமம் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 10.30 மணிக்கு ஆதிநாராயண பெருமாள் மற்றும் அலமேலு மங்கை-நாச்சியார் அம்மனுக்கு பூர்ணாகுதி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    பிறகு மாலை 3.30 மணிக்கு சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் சீர்வரிசை ஊர்வலம் நடக்கிறது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ராஜ வீதிகள் வழியாக ஊர்வலமாக சீர்வரிசை தட்டுகள் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து மேலப் பாளையத்தில் உள்ள ஆதி நாராயண பெருமாள் கோவிலில் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்படு கிறது.

    அங்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகிய வை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.

    விழா எற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    ×