என் மலர்
நீங்கள் தேடியது "விண்ணப்பங்கள் வரவேற்பு"
- நவீன முறை சலவையகம் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
- பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, நவீன சலவையகங்கள் அமைத்திட மேற்கண்ட இன மக்கள் 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிகப்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பப் படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விணண்ணப்பங்கள், சென்னை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.
இதில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்.11) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசாங்கத்திற்கான தேசிய விருது -2022 வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று பாராட்டு பத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
- தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் , காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது:-
சிறந்த தேர்தல் நடைமுறை விருதுகள், வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய சி.எஸ்.ஓ. விருது, அரசாங்கத்திற்கான தேசிய விருது -2022 வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று பாராட்டு பத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
சிறந்த தேர்தல் நடைமுறைக்கான -2022 விருதில் பொதுப்பிரிவு விருது, தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் , காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்ப டுகிறது. சிறப்புப்பிரிவு விருது - தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தவிர மற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த மாநில விருது - தேர்தல் மேலாண்மை துறைகளில் சிறந்த ஒட்டுமொத்த திறனை வெளிப்படுத்தும் மாநிலத்திற்கு வழங்கப்படு கிறது.
வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய சி.எஸ்.ஓ. விருது - 2022, பயனுள்ள மற்றும் புதுமையான திட்டங்கள் மூலம் தேர்தல் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான நிறுவனங்கள், தனிநபர்க ளுக்கு வழங்கப்படுகிறது. அரசாங்கத்திற்கான தேசிய விருது - 2022 தேர்தல் பங்கேற்பை மேம்படுத்து வதற்கான துறை , நிறு வனம், பொதுத்துறை நிறு
வனங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், விண்ணப்ப தாரர்கள் தங்களது கருத்து ருக்களை 23.11.2022-க்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவல கத்தில் சமர்ப்பிக்க லாம். இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் நோக்கமாகும்.
- 28-ந் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து, அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் நோக்கமாகும்.
அதன்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அரசாணையில் தெரிவித்துள்ளபடி, கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில்முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ளவர்கள், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவ ரிக்கு உரிய ஆவணங்க ளுடன் வருகிற 28-ந் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பி க்கலாம். இவ்வாறு அந்த செய்திக்கு றிப்பில் கூறப்ப ட்டுள்ளது.
- தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
- 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவ -மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது:-
திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1330 குறட்பாக்க–ளையும் ஒப்பிக்கும் மாணவ -மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
2022-23 ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in//) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து 26.12.2022-க்குள் நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 40 இடங்களில் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மகளிர் இச்சங்கத்தில் உறுப்பி னர்களாகப்படு வார்கள். இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மகளிர் பயன்பெறும் வகையில், ஆதிதிராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைத்திட தலா 50 உறுப்பினர்களை கொண்ட ஒரு புதிய பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க வேண்டும். அச்சங்கத்தின் தேவைப்படும் பதிவேடு, புத்தகம், பால் கேன்கள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் வாங்க தலா ரூ.1 லட்சம் பயன்படுத்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதி திராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்தவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக முதல் மாடி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
- பகுதி நேர பயிற்சியாளராக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- தற்போது தருமபுரி மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தேசிய அளவில் பதக்கம் வென்ற தடகள வீரர், வீராங்கனைகள் விளையாடு இந்தியா மாவட்ட மையத்தில் பகுதி நேர பயிற்சியாளராக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் துவக்கநிலை தடகள பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்படவுள்ளது.
இம்மையத்தில் 30-100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதிற்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்ப டவுள்ளார்கள். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போது தருமபுரி மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ.18,000- வழங்கப்படும். இது நிரந்தப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும்.
இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ பெற இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் www.sdat.tn.gov.in வருகின்ற 03.01.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு தருமபுரி மாவட்ட விளையா ட்டரங்கில் நடைபெறும்.
இத்தேர்வு உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்ப டையில் நடைபெறும். எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
- பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றும், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தாழ்த்த ப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.
அவர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை யை உயர்த்துவதற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் ஒருவருக்கு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் 2023-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் இணையத்திலிருந்து இந்த விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும், அல்லது சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றும், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அறை எண்.26-ல் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,௦௦௦ வழங்கப்பட உள்ளது.
கடலூர்:.26-
கடலூர் கலெக்டர் பால சுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்ட மைப்பு கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பகுதி அளவிலான கூட்ட மைப்பு கள், நகர அளவி லான கூட்டமைப்பு களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு ரூ.1,00,000, ஊராட்சி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, வட்டார அளவி லான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1,00,000, நகரப் பகுதி களை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,00,000, பகுதி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, நகர அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, மாவட்ட அள வில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50,000, நகரப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, பகுதி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.1,00,000 - மும் வழங்கப்பட உள்ளது.
எனவே சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதி களை சார்ந்த தகுதி வாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் விண்ணப்ப ங்கள் வட்டார இயக்க மேலாளர் அலுவலகத்தில் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளை சார்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் கீழ்கண்ட முகவரிக்கு நாளை (27-ந் தேதி) முதல் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் மணி மேகலை விருதுக்காக விண்ணப்பித்து பயன்பெற லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- 2 உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- அந்நிறுவனத்தின் பெயரில் 80 ஜி அல்லது 12 ஏஏ எக்சம்சன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் கொல்லப்பள்ளியில் செயல்பட்டு வரும் பள்ளி செல்லா, இடைநின்ற 14 வயதிற்குட்பட்ட 100 பெண் குழந்தைகள் தங்கி படிக்கும் வகையில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் 100 மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் கெலமங்கலம் ஒன்றியம், தேன்கனிக்கோட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி என மொத்தம் 2 உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்பும் தொண்டு நிறுவனங்கள், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கல்விப் பணியில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் கண்டிப்பாக பெற்றிருத்தல் வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் சொசைட்டி ஆக்ட், டிரஸ்ட் ஆக்ட்-ன் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
அப்பதிவு அவ்வப்போது புதுபிக்கப்பட்டிருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் பெயரில் 80 ஜி அல்லது 12 ஏஏ எக்சம்சன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக, மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் பட்டியலில் இருத்தல் கூடாது. அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தனி அடையாளம் (யுனிக்கோடு ஐடி) பெற்றிருத்தல் வேண்டும்.
மேலும், அந்த நிறுவனத்தின் பெயரில் பேன் கார்டு வைத்திருக்க வேண்டும். கடந்த 3 நிதி ஆண்டுகளில் சுய நிதிக்குழுவின் வரவு, செலவு சார்ந்த ஆண்டு தணிக்கை விவரங்களை வைத்திருத்தல் வேண்டும்.
நிதி நிலை விவரங்கள் திருப்திகரமாக இருத்தல் வேண்டும். கடந்த 3 நிதி ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்திருக்க வேண்டும். இதுவரை எவ்வித துறை ரீதியான புகார்களுக்கும் இடமளி க்காமல் பணியாற்றிய மிக சிறந்த தொண்டு நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
இந்த தகுதியுடைய தொண்டு நிறுவனங்கள், விண்ணப்பத்தை கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் பெற்று கருத்துருக்களை வருகிற 19-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ம் நிதியாண்டி ற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ம் நிதியாண்டி ற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொதுகாலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவைமாட்டுக் கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.
விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேம்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் (ஆதார் எண் அவசியம்), சுய உதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும் மற்றும் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச்சான்று, பிறப்பிட சான்றிதழ் நகல்கள், முன்னணி நிறுவனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), குடும்பஅட்டை / ஆதார் அட்டை நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் மற்றும் அடமானத்திற்குரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.
கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகததில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலும் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றிலும் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் முழு விவரங்களை உள்ளீடு செய்த பின்பே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. விண்ணப்பங்கள் https://scert.tnschools.gov.in என்ற முகவரியில் வருகிற 5ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் வெளியாகும். இதில், சேர விரும்பும் மாணவர்கள், தேவையான விவரங்களை இணைத்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூ-.500ம், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கட்டணம் செலுத்துவோர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணைய வங்கி சேவையை பயன்படுத்தலாம். இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் முழு விவரங்களை உள்ளீடு செய்த பின்பே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இத்தளத்தின் மூலம் பணம் செலுத்திய பிறகு தான் தங்கள் விண்ணப்பம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்னரே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
அதில், பயனடையும் வகையில் கல்லூரி முடித்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் பயிற்சி நிறுவன முதல்வர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
- 1,330 திருக்குறட் பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரு.15,000 ஆக உயர்த்தி பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.
- திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1,330 திருக்குறட் பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரு.15,000 ஆக உயர்த்தி பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் திறனாய்வு சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை தெரிவுக் குழுவால் மேற்கொள்ளப்பெறும். தெரிவு செய்யப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.15,000-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கு 1,330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராகவும், இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும்திறன் பெற்றவராகவும், திருக்குறளின் அடைமொழி கள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்கு றளின் சிறப்புகள் ஆகிய வற்றை அறிந்தவராகவும், சேலம் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் பதின்மப்பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைபயிலும் மாண வர்கள் பங்குபெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை ஏற்கனவே பெற்ற வராக இருத்தல் கூடாது. திருக்குற ளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும். மாணவர்கள் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப் பெற்ற விண்ணப்பங்களை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகத்தில் 2-ம் தளத்தில் அமைந்துள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ 31.10.2023-க்குள் அளிக்கு மாறு கேட்டுக்கொள்ளப் பெறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.