என் மலர்
நீங்கள் தேடியது "குண்டு"
- பொதுமக்கள் குமுறல்
- உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டு களில் சாலை மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் சாலை சீர மைப்பிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள் ளது. சாலை சீரமைப் பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட பிறகும் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சி அளிக்கின்றன. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளது. ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகிறார்கள்.
ஆனால் இந்த சாலையின் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை யில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கீழே விழும் நிலை உள்ளது.சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த சாலையை சீர மைக்க விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் நேரத்தில் சாலை சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.
உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி 17-வது வார்டுக்குட்பட்ட மேலும் பல்வேறு சாலைகளும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. இந்த சாலை களையும் சீரமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் நாகர் கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 52 வார்டுகளிலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்து உள்ள னர்.
மேயர் மகேஷ் இந்த சாலை சீரமைப்பில் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- சேலம் மாவட்டம் ஏற்காடு அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் -பாக்கி யலட்சுமி தம்பதியின் மகள் செல்வி இன்பத்தமிழ்.
- மாற்றுத்திறனாளியான இவர் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் -பாக்கி யலட்சுமி தம்பதியின் மகள் செல்வி இன்பத்தமிழ். (வயது 17).
இம்மாணவி நாகலூர் அரசு மாதிரி பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியான இவர் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.
இந்திய அளவில் 2-ம் இடம்
சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற குட்டை மனிதர்களுக்கான விளை யாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தன் திற மையால் இன்பத்தமிழ் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்தார். அதே போட்டியில் சேலம் வலசை யூரை சேர்ந்த மாணவி வெண்ணிலா 3-ம் இடம் பிடித்தார்.
இதன் மூலம் மாணவி இன்பத்தமிழ் , நாளை முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை ஜெர்மனி நாட்டில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உலக அளவில் 8-ம் முறையாக நடைபெறும் குண்டு எறிதல் போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் பங்கேற்பதற்காக மாணவி இன்பத்தமிழ் இன்று காலை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஜெர்மனிக்கு சென்றார்.
அவருடன் அதே போட்டியில் 3-ம் இடம் பிடித்த மாணவி வெண்ணிலா, அவர்களது பயிற்சியாளர் உலகநாதன், உடற்கல்வி ஆசிரியர் ராேஜந்திரன் சென்றனர்.
நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்
இது பற்றி மாணவி இன்பத்தமிழ் கூறியதாவது:-
என்னுடைய திறமைக்கு அடித்தளமாக இருந்த தாய்- தந்தை, ஆசிரியர்கள், நண்பர்கள், எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஜெர்மன் நாட்டில் நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.
ஊக்கத் தொகை குவிகிறது
போட்டியில் சாதனை படைத்த மாணவி இன்பத்தமிழை ஏற்காடு பகுதி கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.
சிவலிங்கம், மாணவிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாணவிக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுப்ப தாக உறுதி அளித்தார்.
மேலும் ஏற்காடு ஒன்றிய தி.மு.க சார்பாக மாணவி இன்பத்தமிழுக்கு ஏற்காடு ஒன்றிய செயலாளர் கே.வி ராஜா வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார். அதுபோல் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை அமைப்பாளர் எம்.வி.எஸ் பாபு வாழ்த்து கூறி ஊக்கத் தொகை வழங்கி உதவிகள் தேவைப்படும் போது விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் செய்து தரப்படும் என்ற உறுதி அளித்தார். மஞ்சகுட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா ராமசந்திரன் வாழ்த்து தெரிவித்து ஊக்கதொகை வழங்கினார்.
- பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
- இதில் தொடர்புடையதாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 26) இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் வீட்டு கதவில் இருந்த திரைச் சேலை மட்டும் எரிந்து சாம்பலானது.
இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ேலும் இவ்வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு பாலாயி குடிகாடு பகுதியை சேர்ந்த கவிக்குமார் (வயது 26), பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த முரளிதரன் (வயது 28), ஏனாதி மேலத்தெரு பகுதியை சேர்ந்த ரெங்கநாத் (வயது 26) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருச்சியில் மார்க்கெட் கட்டிடத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் சிக்கினார்
- ஏரியாவுக்குள் ‘பெரிய ஆளாக வேண்டும்’ என்று துணிகர செயல்
மலைக்கோட்டை,
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பின்புறமுள்ள காளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியை சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர் உள்பட 2 பேர் நேற்று மாலை அமர்ந்து, மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏரியாவுக்குள் 'பெரிய ஆளாக என்ன செய்யலாம்' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவர்கள், அங்கிருந்த சரக்கு ஆட்டோவில் இருந்து டீசலை டியூப் போட்டு பிடித்து, மதுபாட்டிலில் ஊற்றி டீசல் குண்டாக மாற்றி எதிரில் இருந்த மாநகராட்சி மார்க்கெட் கட்டிடம் மீது வீசியுள்ளனர். அந்த பாட்டில் கட்டிடத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தகரத்தின் மீது விழுந்து டீசல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதற்கிடையே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இச்சம்பவத்தால் நேற்று மாலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது, 'மக்களவைத் தேர்தல் முடிவுகளால் மன ரீதியாக பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவினரும் அரசியலமைப்பை மதிப்பது போல் தற்போது நாடகமாடத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் தற்போது அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் பாராளுமன்றதில் 146 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதே ஆகும். எனவே இந்தியா கூட்டணி இந்த புல்டோசர் சட்டங்களை பாராளுமன்றத்தில் பொறுத்துக் கொண்டிருக்காது' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசை எதிரித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் எதிர்கட்சிகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனவே எதிர்கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான எம்.பிக்கள் அவையில் இல்லாமலே புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தும் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
- டி-சர்ட்டும் அரைக்கால் டவுசரும் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் பல அடி உயரம் உள்ள சுவரை அளவெடுத்துக் கொண்டிருந்தார்.
- கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நுழைந்து மர்ம நபர்கள் வண்ணப் புகைகுண்டுகளை வீசினர்.
தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தின் சுவரை அளவெடுத்து உள்ளே குதித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நேற்று மதியம் 2.45 மணியளவில் டி-சர்ட்டும் அரைக்கால் டவுசரும் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் பல அடி உயரம் உள்ள சுவரை அளவெடுத்துக் கொண்டிருந்தார்.
திடீரென சுவர்மீது ஏறி அவர் உள்ளே குதித்ததை சிசிடிவியில் பார்த்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை போலீசார் [CISF] பார்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரைத் தடுத்து சோதனைக்கு உட்படுத்தினர். அந்த நபரிடம் ஆயுத்தங்கள் எதுவும் இல்லை. அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது மன நலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக டெல்லி போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவரது பெயர் மனிஷ் என்றும் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி பாராளுமன்றத்தின் மக்களவைக்குள் நுழைந்து மர்ம நபர்கள் வண்ணப் புகைகுண்டுகளை வீசிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ளது.
- வீடுகளை காலி செய்ய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றி வீடுகளை இடித்தனர்.
- சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை முடிவு செய்தது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு, சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை முடிவு செய்தது.
அதன்படி நேற்று மல்காஜ்கிரி மாவட்டம் குக்கட் பள்ளி, சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர், நல்ல செலவு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கிரேன்கள் கொண்டுவரப்பட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வீடுகளை காலி செய்ய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றி வீடுகளை இடித்தனர்.
பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க முடியாத 7 மாடி கட்டிடத்திற்கு குண்டு வைத்து தகர்த்தனர். கட்டிடம் சரிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
- பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டனர்.
- சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி:
தக்கலையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கல்லங்குழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் படிக்கட்டு வரை நின்று கொண்டு பயணம் செய்தனர். பஸ் குமாரகோவில் அருகே வரும்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் டிவைடர் அருகே சாலையில் உள்ள ஒரு பெரிய பாதாள குழியில் டயர் இறங்கியது. பஸ்சின் படிக்கட்டுகள் தரையில் தட்டியது. இதனால் பஸ்சின் பட்டைகள் ஒடிந்தது.
திடீரென பஸ் ஒருபுறமாக சரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். டிரைவரின் மிதமான வேகத்தாலும், சாதுரியத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு சென்றவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.