என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளி பிணம்"
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியவரை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் அடுத்த யண்ட கண்டியை சேர்ந்தவர் துளசி. இவர் அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டிற்கு கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் மரப்பெட்டி ஒன்று வந்தது.
துளசி மரப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஆண் பிணம் இருந்தது.
மேலும் மரப்பட்டியில் ரூ.1.30 கோடி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் துளசியின் சகோதரி ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா ஆகியோர் பர்லையா என்ற கூலி தொழிலாளியை கொலை செய்து பிணத்தை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
போலீசார் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியவரை கைது செய்தனர்.
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
- மன அழுத்தம் காரணமாக ராதாகிருஷ்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
இரணியல் :
இரணியல் அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 53), தொழிலாளி. இவரது மனைவி திருவனந்தபுரத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். மகன் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் ராதாகிரு ஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டிற்குள் சென்ற போலீசார், படுக்கை அறையில் பார்த்தபோது கட்டிலில் ராதாகிருஷ்ணன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு மது பாட்டில்களும் கிடந்தன.ராதாகிருஷ்ணன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தம் காரணமாக ராதாகிருஷ்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போ லீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 3 நாட்களாக அமிர்தலிங்கம் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
- அமிர்தலிங்கம் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த ஞாயிறு அருமந்தை கிராமம் மேடங்குளம் பகுதியில் வசித்து வந்தவர் அமிர்தலிங்கம் (வயது48).கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அமிர்தலிங்கம் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் வீடும் பூட்டப்பட்டு கிடந்தது.
இந்த நிலையில் அவரது நண்பர்கள் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள அறையில் அமிர்த லிங்கம் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது.
இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அமிர்தலிங்கம் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- குளத்தில் ஆண் உடல் மிதந்த செய்தி கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ராஜாக்கமங்கலம்:
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேல சூரங்குடியை அடுத்துள்ளது கார்த்திகை வடலி கிராமம்.
இங்குள்ள குளத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் அந்த வழியே செல்பவர்களும் குளிப்பது வழக்கம். இன்று காலை குளிக்கச் சென்றவர்கள், குளத்திற்குள் ஒரு ஆண் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் குளத்தில் ஆண் உடல் மிதந்த செய்தி கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 42) என தெரிய வந்தது. இவர் கார்த்திகை வடலி பகுதியில் செயல்பட்டு வரும் துரித உணவகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். புன்னை நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார்.
நேற்று ஊருக்குச் செல்வதாக வேலை பார்த்த இடத்தில் உள்ளவர்களிடம் கருப்பசாமி தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் தான் அவர் குளத்தில் பிணமாக மிதந்துள்ளார். கருப்பசாமி எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
குளத்தின் கரை அருகே மது பாட்டில்கள் கிடப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கருப்பசாமி மது குடித்து விட்டு போதையில் குளத்தில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த காணப்பட்டார்
- போலீஸ் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் விவசாய கிணற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று இருப்பதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த ரங்கன் (வயது 51). கூலி தொழிலாளி என தெரியவந்தது.
ரங்கன் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை என இவரது குடும்பத்தினர் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது தெரியவந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த ரங்கன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.